போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Sunday, 15 July 2012

ஆட்டோ கவிழ்ந்து பள்ளி மாணவி பலி: மேலும் 3 பேர் கவலைக்கிடம்


ஆட்டோ கவிழ்ந்து பள்ளி மாணவி பலி: மேலும் 3 பேர் கவலைக்கிடம்
ஜுலை. 15
திருப்பூர் அருகே உள்ள படியூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு இன்று காமராஜர் பிறந்தநாளையொட்டி கொடியேற்று விழா நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக கந்தாம்பாளையத்தில் இருந்து பள்ளி மாணவ-மாணவிகள் 10 பேர் ஒரு மினிடோர் ஆட்டோவில் சென்றனர். 

உடன் சில பொதுமக்களும் இருந்தனர். படியூரை நெருங்கி ஆட்டோ சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டு சத்தமிட்டனர். அக்கம் பக்கத்தினர் அங்கு கூடி ஆட்டோவுக்குள் சிக்கிய பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்களை மீட்டனர். சுமார் 15 பேர் இந்த விபத்தில் காயமடைந்தனர். 

காயமடைந்த மாணவ-மாணவிகள் விவரம் வருமாறு:- 

மேகனாதேவி (வயது 13), தாரணி (15), சவுமியா (13), குமார் (13), அஜீத்குமார் (14), லோகேஸ்வரி (12), சவுந்தர்யா (12), சிவன்கார்த்திக் (14), கோகுல் (14).  இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மேகனாதேவி பரிதாபமாக இறந்தார். 

தாரணி, சவுமியா, குமார் ஆகியோர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

No comments:

Post a Comment