போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Monday 15 July 2013

ஏழு ரூபாய்க்கு ஒரு யூனிட் மின்சாரம்; தமிழகத்தில் முதல் முறையாக சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் துவக்கம்

திருப்பூர் மாவட்டம், காங்கயம் தாலுகா, ஒலப்பாளையத்தில் சென்னை சில்க்ஸ் மற்றும் “டாடா பவர்” நிறுவனங்களின் சார்பில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் நிறுவனம் தனது செயல்பாட்டை ஞாயிற்றுக்கிழமை துவங்கியது.

 இதன் துவக்க விழாவில் பங்கேற்று, டாடா சோலார் பவர் நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவர் பி.அருள்குமார் சண்முகசுந்தரம் கலந்து கொண்டு பேசும்போது, தமிழகத்தின் மின் தேவை மிக அதிகமாக உள்ளது. தற்போது நிலக்கரியின் மூலமே 80 சதவீத அளவு மின் உற்பத்தி செய்யப்படுகிறது. அடுத்த 50 ஆண்டுகளில் நிலக்கரி போன்ற கனிம வளங்கள் பூமியில் குறைந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாற்று வழியில் மின் சக்தியை உற்பத்தி செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம்.