போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Sunday 31 March 2013

திருப்பூரில் கூட்டுறவு சங்க தேர்தல்; வேட்பாளர்கள் பெயர் நீக்கம் : தேர்தல் அதிகாரி ஓட்டம் தினமலர்


 திருப்பூரில், மின்வாரிய கூட்டுறவு கடன் சங்க நிர்வாகிகள் தேர்தலில், வேட்பாளர்கள் பட்டியலில் திடீர் மாற்றம் செய்யப்பட்டது. அதிருப்தி அடைந்த உறுப்பினர்கள் சங்கம் முன் நேற்று திரண்டனர். உடனடியாக, தேர்தல் அதிகாரி அங்கிருந்து கிளம்பிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் குமார் நகரில், தமிழ்நாடு மின்வாரிய திருப்பூர் கோட்ட பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கம் உள்ளது.

                         இச்சங்க தேர்தலில் போட்டியிட நேற்று முன்தினம் வேட்பு மனுக்கள் வழங்கப்பட்டன. வேட்பு மனுக்கள் வழங்குவதிலேயே பிரச்னை ஏற்பட்டது. உறுப்பினர்கள் சங்க அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியை முற்றுகையிட்ட பின், ஒரு மணி நேரம் தாமதமாக மனுக்கள் வழங்கப்பட்டன. தேர்தலில் போட்டியிட 37 பேர் மனு தாக்கல் செய்தனர். இப்பட்டியல் நேற்று முன்தினம் மாலை, சங்கத்தின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது. இந்நிலையில், நேற்று மாலை, அப்பட்டியல் எடுக்கப்பட்டு 11 பேர் கொண்ட பட்டியல் ஒட்டப்பட்டது. இதையறிந்து அதிர்ச்சியடைந்த உறுப்பினர்கள் அங்கு கூடினர். தேர்தல் அதிகாரி கருணாபூபதியை அணுகியபோது, அவர் எதுவும் பதிலளிக்கவில்லை. பத்திரிகையாளர்கள் வந்ததை அறிந்த அவர், சங்க அலுவலகத்தை பூட்டி விட்டு, அவசர அவசரமாக புறப்பட்டுச் சென்று விட்டார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் சந்திரன் கூறியதாவது: மனு தாக்கல் முடிந்ததும் 37 பேர் பட்டியல் வெளியிடப்பட்டது. ஆனால், எந்த முகாந்திரமும் இல்லாமல், 11 பேர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்தலில் சி.ஐ.டி.யு., - ஏ.ஐ.டி.யு.சி., - எச்.எம்.எஸ்., - பி.எம்.எஸ்., அம்பேத்கர் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. இச்சங்கங்களை சேர்ந்த நான்கு பேருடன், ஆளும்கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் பெயரையும் சேர்த்து பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இது, எங்கள் அமைப்புகளுக்குள் பிளவை ஏற்படுத்தும், ஜனநாயக படுகொலை என கருதுகிறோம். தொடர் நடவடிக்கை குறித்து சங்க மேலிட ஆலோசனைப்படி நடக்கும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார். திருப்பூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கத்துக்கான முதல்கட்ட தேர்தலே பெரும் பிரச்னைகளுடன் துவங்கியதால், மாற்றுக்கட்சியினர் பெரும் அதிருப்தியில் உள்ளனர்.

Tuesday 19 March 2013

மாணவர் எழுச்சி தினறிய திருப்பூர்....

இன்று திருப்பூர் அதை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த அனைத்து கல்லூரி மாணவர்கள் மனித சங்கிலி போராட்டமும் அதை தொடர்ந்து திருப்பூரின் பிரதான சாலையான குமரன் சாலையில் நான்கு புற வழிகளையும் அடைத்து எழுச்சிமிகு போராட்டத்தை சுமார் 5 மணி நேரத்திற்கு மேல் நடத்தினார்கள். காவல்துறையின் வெற்று மிரட்டல்களை கடந்து அவர்களின் எழுச்சியை கண்டு தினறியது 

காவல்துறை. திருப்பூரின் சமிபக கால நிகழ்வில் மொத்த திருப்பூரும் தினறியது இதுவே முதன் முறையாகும், பொதுமக்களும் மாணவ கண்மனிகளுக்கு ஆதரவாக நின்றது நிச்சயம் இப்போராட்டாங்கள் வெல்லும் என்பதை காட்டியது. என் மன்னின் மைந்தர்கள் இன்று திருப்பூர் மாநகரத்தை தினறடித்தது பெரும் மகிழ்சியே..

Sunday 17 March 2013

தாட்கோ கடன் பெற 30ம் தேதி வரை ஆன்லைனில் அவகாசம்


திருப்பூர்: தாட்கோ மூலம் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு கடன் பெற, வரும் 30ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கலெக்டர் கோவிந்தராஜ் வெளியிட்ட அறிக்கை: தாட்கோ மூலம் நிலம் வாங்குதல், மேம்படுத்துதல், தொழில் முனைவோர் பொருளாதார மேம்பாட்டுத் திட்டம், இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்பு, டாக்டர் பட்டம் பெற்றவர்கள் மருத்துவமனை அமைத்தல், பெட்ரோல், டீசல், கியாஸ் சில்லரை விற்பனை நிலையம், மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கான சுழல்நிதி, பொருளாதார கடனுதவி, துரித மின் இணைப்பு திட்டம், விருப்புரிமை நிதி, இந்திய குடிமைப்பணி முதன்மை தேர்வு எழுதுவோருக்கு நிதியுதவி ஆகியவற்றுக்கு மானியத்துடன் கூடிய கடன் உதவி பெற, இந்து ஆதிதிராவிடர்களிடம் இருந்து விண்ணப்பங்கள், 15 லிருந்து 30ம் தேதி வரை வரவேற்கப்படுகின்றன.

மின் இணைப்பை விரைவாக வழங்கணும்: மாவட்ட நிர்வாகம் உத்தரவு


திருப்பூர்:"வறட்சியை சமாளிப்பதற்காக அமைக்கப்படும் ஆழ்குழாய் கிணறுகளுக்கு, விரைவாக மின் இணைப்புகளை வழங்க வேண்டும்' என, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்திலேயே, திருப்பூர் மாவட்டத்தில்தான் குறைவான மழை பெய்துள்ளது. பருவ மழை பொய்த்ததால், சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களையும் வறட்சி மாவட்டமாக, தமிழக அரசு அறிவித்துள்ளது. வறட்சியை சமாளிக்கவும், கோடை வெயிலில் தடையில்லா குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட அளவில் நடந்த ஆய்வு கூட்டத்தில், மொத்தம் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களிலும் 1.70 கோடி ரூபாய் மதிப்பில் குடிநீர் வினியோக பணிகளை மேற்கொள்ள <முடிவு செய்யப்பட்டது. குடிநீர் பற்றாக்குறையால் தவிக்கும் கிராமங்களில், ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து, அதன்மூலமாக தண்ணீர் வினியோகம் செய்ய உத்தரவிடப்பட்டது.

திருப்பூர் அருகே ஊத்துக்குளியில் தொடர் திருட்டு * பொதுமக்கள் அச்சம்


திருப்பூர்: ஊத்துக்குளி அடுத்த நீலக்கோணம்பாளையத்தில், அடிக்கடி திருட்டுகள் நடப்பதால், கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி ஒன்றியத்துக்கு உட்பட்டது நீலக்கோணம்பாளையம். கயித்தமலை கோவில் அடிவாரத்தில், அமைந்துள்ள இக்கிராமத்துக்கு பல ஆண்டுகளாக இப்பகுதிக்கு பஸ் வசதியில்லை; ஊத்துக்குளி ரயில்வே ஸ்டேஷன் பஸ் ஸ்டாப்பில் இறங்கி, கயித்தமலை கோவில் மலைப்பாதை வழியாக 3 கி.மீட்டர் நடந்து ஊருக்கு நடந்து செல்ல வேண்டும்.