போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Sunday 17 March 2013

தாட்கோ கடன் பெற 30ம் தேதி வரை ஆன்லைனில் அவகாசம்


திருப்பூர்: தாட்கோ மூலம் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு கடன் பெற, வரும் 30ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கலெக்டர் கோவிந்தராஜ் வெளியிட்ட அறிக்கை: தாட்கோ மூலம் நிலம் வாங்குதல், மேம்படுத்துதல், தொழில் முனைவோர் பொருளாதார மேம்பாட்டுத் திட்டம், இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்பு, டாக்டர் பட்டம் பெற்றவர்கள் மருத்துவமனை அமைத்தல், பெட்ரோல், டீசல், கியாஸ் சில்லரை விற்பனை நிலையம், மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கான சுழல்நிதி, பொருளாதார கடனுதவி, துரித மின் இணைப்பு திட்டம், விருப்புரிமை நிதி, இந்திய குடிமைப்பணி முதன்மை தேர்வு எழுதுவோருக்கு நிதியுதவி ஆகியவற்றுக்கு மானியத்துடன் கூடிய கடன் உதவி பெற, இந்து ஆதிதிராவிடர்களிடம் இருந்து விண்ணப்பங்கள், 15 லிருந்து 30ம் தேதி வரை வரவேற்கப்படுகின்றன.


வயது வரம்பு 18 முதல் 55 வரை, இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு, வயது வரம்பு 18 முதல் 35 வரை இருக்க வேண்டும். விண்ணப்பிப்போரின் குடும்ப ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். சிறப்புத் திட்டமான பெட்ரோல், டீசல், கியாஸ் சில்லரை விற்பனை நிலையம் அமைக்க குடும்ப வருமானம் மூன்று லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.

இத்திட்டத்தில் கடன் பெற விரும்புபவர்கள் டttணீ://ச்ணீணீடூடிஞிச்tடிணிண.tச்டஞீஞிணி.ஞிணிட் என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தினை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். பதிவின் போது ரேஷன் கார்டு எண் அல்லது இருப்பிடச் சான்று, சாதிச் சான்று, வருமானச் சான்று ஆகியவற்றின் எண், வழங்கப்பட தேதி ஆகியவற்றை அதற்கான இடத்தில் அவசியம் பதிவு செய்ய வேண்டும்.

அதுபோல் திட்ட அறிக்கை பெறப்பட்ட தேதியையும் அதற்கான இடத்தில் குறிப்பிட வேண்டும். போட்டோவை ஸ்கேன் செய்து, பதிவேற்றம் செய்ய வேண்டும். தகுதி வாய்ந்த ஆதிதிராவிட இனைத்தை சார்ந்தவர்கள், மேற்குறிப்பிட்டுள்ள பல்வேறு திட்டங்கள் மூலம், மானியம் பெற ஆன்லைனில் விண்ணப்பித்து பயனடையலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment