போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Saturday 30 June 2012

பாசி நிறுவன மோசடி வழக்கில் முன்னாள் ஐ.ஜி. பிரமோத் குமாருக்கு ஜாமீன்


பாசி நிறுவன மோசடி வழக்கில் முன்னாள் ஐ.ஜி. பிரமோத் குமாருக்கு ஜாமீன்
சென்னை, ஜூன். 28 -

திருப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல் பட்டு வந்த பாசி நிறுவனம் முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.1500 கோடி வரை வசூல் செய்து மோசடி செய்தது. இதுதொடர்பாக நிதி நிறுவன இயக்குனர்கள் கமலவள்ளி, மோகன்ராஜ், கதிரவன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். 

இந்த நிலையில் பாசி நிறுவன இயக்குனர் கமலவள்ளியை கடத்தி வைத்து ரூ.3 கோடி பணம் பறித்ததாக அப்போதைய மேற்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்த பிரமோத்குமார் மீது புகார் எழுந்தது. 

இதையடுத்து சி.பி.ஐ. போலீசார் ஐ.ஜி. பிரமோத்குமாரை கைது செய்து கோவை கோர்ட்டில் ஆஜர் படுத்தி 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.  

திருப்பூர் அருகே சான்றிதழ் வழங்க ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது


திருப்பூர் அருகே சான்றிதழ் வழங்க ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது
திருப்பூர், ஜூன். 30-
 
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகேயுள்ள பழைய கோட்டை ஊராட்சியில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருபவர் குணசேகரன். அதே பகுதியைச் சேர்ந்த விசைத்தறி தொழில் அதிபர் கோவிந்தராஜ். இவர் விசைத்தறிக் கூடம் நடத்துவதற்கு தொழில் கடன் கேட்டு வங்கியில் விண்ணப் பித்திருந்தார்.
 
அதற்கு தேவையான சான்றிதழ்களை பெற பழைய கோட்டை கிராம நிர்வாக அதிகாரி குணசேகரனை அணுகினார். ஆனால் கிராம நிர்வாக அதிகாரி குணசேகரன் கடந்த 6 மாதமாக இழுத்தடித்ததாக தெரிகிறது.
 
பின்னர் சான்றிதழ் வேண்டும் என்றால் ரூ.10 ஆயிரம் வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு குணசேகரன் ரூ.8 ஆயிரம் தருவதாக ஒப்புக் கொண்டு முதல் தவணையாக ரூ.2 ஆயிரத்தை கடந்த வாரம் கொடுத்திருக்கிறார். மீதி தொகையை நேற்று வழங்குவதாக கூறியிருந்தார்.

திருப்பூரில் போக்குவரத்து மாற்றம்


திருப்பூரில் போக்குவரத்து மாற்றம்
திருப்பூர்,ஜூன்.29-
 
திருப்பூரில் இன்று காலை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இந்த மாற்றம் குறித்த புதிய அறிவிப்பை திருப்பூர் போலீசார் வெளியிட்டுள்ளனர்.அதில் கூறி இருப்பதாவது:-
 
திருப்பூர்-ஊத்துக்குளி ரோட்டில் உள்ள இரண்டு ரயில்வே கேட்கள் ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது. ஊத்துக்குளி சாலையிலிருந்து கொங்கு மெயின் ரோடு, லட்சுமி நகர், திருநீலகண்டபுரம்,பவானி நகர் உட்பட்ட பகுதிகளுக்கு செல்வோர் முதல் ரயில்வே கேட் வழியாக செல்ல வேண்டும்.
 
இந்த பகுதிகளிலிருந்து ஊத்துக்குளி ரோட்டுக்கு வரும் வாகனங்கள், இரண்டாவது ரயில்வே கேட் வழியாகவும் செல்ல வேண்டும். யூனியன் மில் ரோட்டில், மூர்த்தி மெஸ் அருகேயுள்ள ரோடு 'ஒன்வே'யாக மாற்றப்படுகிறது.

Saturday 23 June 2012

தண்டவாளத்தை கடக்கக்கூடாது: பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்


திருப்பூரில் முதல் மற்றும் 2-வது ரெயில்வே கேட் பகுதி வழியாக தண்டவாளத்தை பொதுமக்கள் கடக்கும் போது அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
 
உயிர்பலிகளை தடுக்கும் வகையில் திருப்பூர் ரெயில்வே போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ் பெக்டர்கள் சத்திதாஸ், அப்பாத்துரை, ஏட்டு சிவக்குமார் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
 
தண்டவாளத்தை அஜாக்கிரதையாக கடப்பதால் ஏற்படும் விபரீதங்கள் குறித்து துண்டுபிரசுரங்களில் விழிப் புணர்வு வாசகம் அச்சிட்டு திருப்பூர் ரெயில் நிலையத்தில் நின்ற பொதுமக்களிடம் கொடுத்தனர்.
 
இதேபோல் முதல் ரெயில்வே கேட், இரண்டாவது ரெயில்வே கேட் பகுதியில் வாகன ஓட்டி கள், பொதுமக்களிடம் விழிப் புணர்வு ஏற்படுத்தினார்கள்.
 
குடிபோதையில் தண்டவாளத்தை கடக்கக்கூடாது. செல்போன் பேசியபடி செல் லக்கூடாது. காலைக்கடன் கழிக்க தண்டவாளத்தை கடந்து செல்லக்கூடாது. ரெயில்வே கேட் மூடிவிட்டால் இரு சக்கர வாகனங்களை ஓட்டிக்கொண்டு தண்ட வாளத்தை கடக்கக்கூடாது என்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
 
மேலும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விளம்பர பேனர்களையும் போலீசார் கைகளில் ஏந்தி பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். 

திருப்பூர் பனியன் கம்பெனி அதிபர் வீட்டில் 23 பவுன் நகை கொள்ளை: வெளியே சென்று திரும்பிய 3 மணி நேரத்தில் கைவரிசை


திருப்பூர் பனியன் கம்பெனி அதிபர் வீட்டில் 23 பவுன் நகை கொள்ளை: வெளியே சென்று திரும்பிய 3 மணி நேரத்தில் கைவரிசை
திருப்பூர், ஜூன்.20 
பெரியாண்டிபாளையம் ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா பகுதி 5-வது வீதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 48). பனியன் கம்பெனி அதிபர். அவரது மனைவி சுகுணா (38). பழனிச்சாமி நேற்று இரவு மனைவி சுகுணாவை கோவையில் உள்ள உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்றார்.
 
அங்கு மனைவியை விட்டுவிட்டு தான் மட்டும் 3 மணி நேரத்தில் திருப்பூருக்கு திரும்பினார். வீட்டுக்கு சென்ற போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.
 
அதிர்ச்சியடைந்த பழனிச்சாமி உள்ளே சென்று பார்க்கலாம் என நினைத்து கதவை திறந்த போது திடீரென 2 மர்ம நபர்கள் பழனிச்சாமியை தாக்கி கீழே தள்ளிவிட்டு வீட்டுக்குள் இருந்து வெளியே ஓடினர்.
 
பதட்டமடைந்த பழனிச்சாமி என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தார்.அதற்குள் இரண்டு பேரும் மாயமாகிவிட்டனர். வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 23 சவரன் நகைகள் திருடப்பட்டிருந்தன. அப்போது தான் வீட்டிற்குள் இருந்து ஓடிய மர்ம நபர்கள் திருடர்கள் என தெரியவந்தது. திருட்டுப் போன நகைகளின் மதிப்பு ரூ.3 லட்சமாகும்.
 
இதுகுறித்து பழனிச்சாமி மங்களம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் லோகநாதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன.
 
வீட்டை பூட்டி சென்ற 3 மணி நேரத்திற்குள் கொள்ளை நடந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குரூப்-4 தேர்வு: திருப்பூரில் 30539 பேர் எழுதுகிறார்கள்


குரூப்-4 தேர்வு: திருப்பூரில் 30539 பேர் எழுதுகிறார்கள்
திருப்பூர், 
தமிழக அரசின் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு அடுத்த மாதம் (ஜூலை) 7-ந்தேதி நடக்கிறது. இந்த தேர்வை எழுத திருப்பூர் மாவட்டத்தில் இருந்து மொத்தம் 30 ஆயிரத்து 539 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
 
இதில் திருப்பூரில் 12 ஆயிரத்து 543 பேரும், அவினாசியில் 2 ஆயிரத்து 294 பேரும், தாராபுரத்தில் 4613 பேரும், காங்க யத்தில் 3071 பேரும், மடத்துக்குளத்தில் 764 பேரும், பல்லடத்தில் 1537 பேரும், உடுமலையில் 5717 பேரும் அடங்குவார்கள்.
 
இதற்காக 80 கட்டிடங்களில் 1722 அறைகள் தயார்படுத்தப்பட்டு உள்ளது. தேர்வு நடைபெற உள்ள கட்டிடங்களில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, தேர்வு எழுதுவதற்கு தேவையான மேஜை, நாற்காலிகள், மின்சார வசதி, பஸ் வசதி, இட வசதி உள்ளிட்டவை சரியாக உள்ளதா? என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் எம்.மதிவாணன், போலீஸ் சூப்பிரண்டு ஏ.ஆஷ்ரா கர்க் ஆகியோர் பார்வையிட்டனர்.
 
மேலும் தேர்வு எழுத வரும் விண்ணப்பதாரர்கள் எளிதில் சென்று வருவதற்கு வசதியாக பஸ் போக்குவரத்து வசதியை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்று போக்குவரத்து அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

Friday 22 June 2012

முதலீடுக்கு அதிக லாபம் தருவதாக ரூ.1.5 கோடி மோசடி; ஒருவர் கைது

திருப்பூர் : முதலீடுக்கு அதிக லாபம் தருவதாக கூறி, ரூ.1.5 கோடி வரை மோசடி செய்தவர்களில் ஒருவரை, திருப்பூர் போலீசார் கைது செய்தனர்; மற்றொருவரை தேடி வருகின்றனர்.
திருப்பூர், தாராபுரம் ரோடு செட்டிபாளையம் பேங்க் காலனியில், 
"குரோவ்பின் டிரேடு (பி) லிமிடெட்' என்ற பெயரில், திருப்பூர் பி.என்.,ரோடு, எஸ்.வி.காலனியை சேர்ந்த முத்துசாமி மகன் சுரேஷ்குமார் 30 மற்றும் காங்கயம் ரோடு, ராக்கியாபாளையம் பிரிவு, வி.ஜி.வி., விஜய் கார்டன் ஆவுடையப்பன் மகன் கந்தசாமி 71 ஆகியோர் நிதி நிறுவனம் நடத்தினர்.தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால், முதலீட்டு தொகையை 
"டிரேடிங்' செய்து , முதலீட்டு தொகையில் 10 சதவீதம் லாப ஈட்டு தொகை தருவதாகவும், ஒரு ஆண்டு கழித்து முதலீடு செய்த அசல் தொகை முழுவதையும் தருவதாக கவர்ச்சி விளம்பரம் செய்துள்ளனர். 10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால், மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் என 12 ஆயிரம் ரூபாய் வட்டி வழங்குவதோடு, ஆண்டு முடிந்ததும் டிபாசிட் செய்த 10 ஆயிரம் ரூபாய் திரும்ப வழங்கப்படும் என அறிவித்தனர்.
இதை நம்பி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கானோர் முதலீடு செய்துள்ளனர். ஆனால், முதலீட்டாளர்களுக்கு தொகையை திருப்பித் தராமல், 1.5 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததோடு, தலைமறைவாகினர். இதுகுறித்து, கோவை தொண்டாமுத்தூர் ரோடு, சக்தி நகர் பச்சையப்பன் மகன் குமாரசாமி மற்றும் 40 பேர், திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தனர்.
இன்ஸ்பெக்டர் தனராசு, எஸ்.ஐ., மல்லிகா தலைமையிலான போலீசார் குற்றவாளிகளை தேடிவந்தனர். திருப்பூரை காலி செய்துவிட்டு, மதுரையில் பதுங்கியிருந்த கந்தசாமியை கைது செய்தனர். மற்றொருவரான சுரேஷ்குமாரை தேடி வருவதோடு, மோசடி மூலம் முதலீட்டாளர்
களிடம் எவ்வளவு தொகை வசூலிக்கப்பட்டுள்ளது; அத்தொகை எங்கு பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Sunday 10 June 2012

லஞ்ச பணத்தை ஓட்டலில் கொடுக்க கூறினார்: போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்- சூப்பிரண்டு அதிரடி நடவடிக்கை


காங்கயம் போக்குவரத்து போலீசில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் திருநாவுக்கரசு. இவர் காங்கயம் வழியாக வந்த மணல் லாரியை நிறுத்துமாறு சைகை காட்டினார்.
 
லாரி நின்றதும் டிரைவரிடம் லஞ்சம் கேட்டார். மேலும் அந்த தொகையை அவர் அங்குள்ள ஓட்டலில் கொடுக்கும்படி டிரைவரிடம் கூறினார். இன்ஸ்பெக்டர் கூறியபடி லஞ்சப்பணத்தை ஓட்டலில் உள்ளவர்களிடம் கொடுத்த மறு நிமிடமேஅந்த லாரி டிரைவர் திருப்பூர் சூப்பிரண்டு அஸ்ராகார்க்குக்கு தகவல் தெரிவித்தார்.
 
உடனே அஸ்ராகார்க் காங்கயம் விரைந்து சென்று லாரி டிரைவர், ஓட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் விசாரித்ததில் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு லஞ்சம் வாங்கியது உறுதியானது.
 
இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசை சஸ்பெண்டு செய்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
 
போலீஸ் சூப்பிரண்டின் இந்த அதிரடி நடவடிக்கை போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பல்லடம் அருகே கொள்ளை போன நகையை வீட்டுக்குள் விசிய திருடன்


பல்லடம் அருகே கொள்ளை போன நகையை வீட்டுக்குள் விசிய திருடன்
பல்லடம் ஜுன்.10, 
 
பல்லடம் மின்வாரிய அலுவலகம் அருகேயுள்ள மங்கலம் ரோட்டைச் சேர்ந்தவர் தனபால் (வயது 45). இவர் தனது வீட்டுக்குள் உள்ள மேஜை டிராயரில் 8 பவுன் நகையை வைத்திருந்தார்.
 
யாரோ மர்ம மனிதன் வீட்டுக்குள் புகுந்து டிராயரில் இருந்த நகையை திருடிச் சென்றுவிட்டான். அதன் மதிப்பு ரூ.80 ஆயிரம். நகை திருட்டுப் போனதை அறிந்த தனபால் அதிர்ச்சி அடைந்தார்.
 
உடனடியாக பல்லடம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வந்தனர்.
 
இந்த நிலையில் திருட்டு போனதில் 4 1/2 பவுன் நகை என்ஜினீயரின் வீட்டுக்குள் கிடந்தது. அதை யாரோ மர்ம மனிதர்கள் ஜன்னல் வழியே வீசிச் சென்றுள்ளனர். போலீசில் புகார் செய்ததால் பயந்து நகையை வீசிச் சென்றிருக்கலாம் எனத் தெரிகிறது. எனவே நகைத் திருடன் அதே பகுதியைச் சேர்ந்தவனாகத்தான் இருக்க வேண்டும் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
 
நகை திருடனை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

திருப்பூர்:இனி, மது போதையில் வாகனம் ஓட்டினால் சிறை!


திருப்பூர்:மதுபானம் அருந்தி வாகனம் ஓட்டுவோரை கைது செய்து சிறையில் அடைக்க, இந்திய தண்டனை சட்டம் பிரிவு 279ன் கீழ், வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கைது செய்யப்பட்டால், ஆறு மாதம் சிறை அல்லது 1,000 ரூபாய் அபராதம் 
அல்லது இரண்டு தண்டனையையும் விதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இனி, குடிபோதையில் வாகனம் ஓட்டிச் செல்வோரை கைது செய்து சிறையில் அடைக்க திருப்பூர் எஸ்.பி., ஆஸ்ரா கர்க் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூரில், 106 "டாஸ்மாக்' மதுக்கடைகள் உள்ளன. அபரிமிதமாக மக்கள் தொகை, தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாக உள்ளதால், நகரில் மது விற்பனையும் அமோகமாக நடந்து வருகிறது. எந்நேரமும் மதுக்கடைகள், பார்களில் மதுபான பிரியர்கள் திரண்டிருப்பர். குடிப்பவர்களில் 70 சதவீதத்தினர், இரு மற்றும் நான்கு சக்கர 
வாகனங்களில் வீடுகளுக்கு திரும்புபவர்களாகவும், மது உற்சாகத்தில் அதிவேகமாக வாகனங்களை ஓட்டி விபத்துகளை ஏற்படுத்துபவர்களாகவும் உள்ளனர்.வழக்கமாக, நகரில் முக்கிய இடங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனை யில் ஈடுபடுவர். போதையில் சிக்குபவர்களை பிடித்து, அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மது அருந்தியுள்ளார் என சான்றிதழ் பெறுவர். தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்து, அவர் வந்த 
வாகனத்தை பறிமுதல் செய்துவிட்டு, வீட்டுக்கு அனுப்பி விடுவர்.மறுநாள், நீதிமன்றத்தில், 2,500 ரூபாய் வரை அபராதம் செலுத்தி விட்டு, வாகனத்தை மீட்டுச் செல்வர். மதுபானம் அருந்தி வாகனம் ஓட்டிய வகையில், சரா
சரியாக தினமும் 500 பேர் வரை சிக்கி வந்தனர். அவர்களில் பாதி பேர், நீதிமன்ற கணக்கில் வராமல், போலீசாரை "கவனித்து' தப்பி வந்தனர்.போலீசாரின் இந்நடவடிக்கை கடுமையாக இல்லாததால், குடிபோதையில் 
வாகனம் ஓட்டுபவர்கள், அதை குற்றமாக கருதாமலும், தங்களால் மற்றவர்களும் பாதிக்கின்றனர் என்பதை உணராமலும், தவறை தொடர்ந்து வருகின்றனர்; விபத்துகளும் அதிகரித்து வருகின்றன.

அதிரடி நடவடிக்கை
திருப்பூர் எஸ்.பி.,யாக பொறுப்பேற்றுள்ள ஆஸ்ரா கர்க், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கஞ்சா, லாட்டரி, சூதாட்டம், "டாஸ்மாக்' மதுக்கடை பார்களில், சட்ட விரோதமாக மது விற்பனை செய்தவர்களை கைது செய்து வருகிறார். லஞ்சம் பெற்ற இன்ஸ்பெக்டரை "சஸ்பெண்ட்' செய்து, போலீ
சாரையே பீதியடைய வைத்துள்ளார். அடுத்தகட்டமாக, குடிபோதையில் வாகனம் ஓட்டிச் சென்றால், சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.இ.த.ச., பிரிவு 279ன் கீழ், (மனித உயிர் முதலியவற்றுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் , முரட்டுத்தனமாகவோ, கவனமற்ற முறையில் பொதுப்பாதையில் 
வாகனம் ஓட்டுதல்) பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்ய வழிவகை உள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஆறு மாதம் சிறை அல்லது 1,000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டு தண்டனையும் சேர்த்து வழங்க வாய்ப்புள்ளது.
இனி, குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களை, போக்குவரத்து போலீசார் பிடித்தால், உடனடியாக போதைச்சான்று பெற்று, சட்டம்-ஒழுங்கு போலீசாரிடம் ஒப்படைப்பர். அவர்கள், வழக்குப்பதிவு செய்து, மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி, உடனடியாக சிறையில் அடைப்பர்.
சிக்குபவர்கள், போலீசாரை "கவனித்து' தப்பிக்க வாய்ப்பில்லை. ஏனெனில், போலீசார் லஞ்சம் பெறுவது தெரியவந்தால் "சஸ்பெண்ட்' செய்யப்படுவர் என எஸ்.பி., எச்சரித்து, பலர் மீது நடவடிக்கையும் எடுத்துள்ளார். இதனால், போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் "தெளிவு' 
அடைவதை தவிர, வேறு வழியில்லை.

திருப்பூர்: கவுன்சிலரை சூழ்ந்த பொதுமக்கள்

திருப்பூர்:வார்டுக்குள் குடிநீர் வினியோக பணிகளை பார்வையிட சென்ற கவுன்சிலரை, "இரண்டாவது திட்ட குடிநீர் கிடைக்கவில்லை,' என கூறி, பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திருப்பூர் மாநகராட்சி 17வது வார்டுக்கு உட்பட்டது அண்ணா நகர், பாண்டியன் நகர் பகுதிகள். இப்பகுதி மக்களுக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து வரும் இரண்டாவது திட்ட குடிநீர் 30 நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்படும். அதுதவிர, 10 நாட்களுக்கு ஒருமுறை மூன்றாவது திட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. தேவைக்கேற்ப, ஆழ்குழாய் கிணற்று நீரும் சப்ளை செய்யப்
படுகிறது.முக்கிய வழித்தடங்களில் குழாய் உடைப்பு ஏற்பட்டதால், கடந்த 40 நாட்களாக இரண்டாவது திட்ட குடிநீர் அப்பகுதியில் வினியோகிக்கப்பட வில்லை. இந்நிலையில், நேற்று, வழக்கம்போல், கவுன்சிலர் பாலன், வார்டுக்குள் குடிநீர் வினியோக பணிகளை பார்வையிட சென்றார். அப்போது, மாரியம்மன் கோவில் அருகே திரண்டிருந்த மக்கள், "40 நாட்களாக குடிநீர் கிடைக்கவில்லை,' எனக்கூறி, அவரை 
சூழ்ந்தனர்.கவுன்சிலர் பதிலளிக்கையில், ""தற்போது கூடுதலாக குடிநீர் பெறப்பட்டுள்ளதால், மூன்றாவது திட்டத்தில் வாரம் ஒருமுறை சப்ளை செய்யப்படும். இரண்டாவது திட்ட குடிநீரை மாதம் ஒருமுறை வினியோகிக்க வசதியாக, குடிநீர் சேதங்கள் சரி செய்யப்பட்டு வருகின்றன. விரைவில் குடிநீர் பிரச்னை தீரும்,'' என்று சமரசம் செய்தார்