போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Sunday 10 June 2012

திருப்பூர்: கவுன்சிலரை சூழ்ந்த பொதுமக்கள்

திருப்பூர்:வார்டுக்குள் குடிநீர் வினியோக பணிகளை பார்வையிட சென்ற கவுன்சிலரை, "இரண்டாவது திட்ட குடிநீர் கிடைக்கவில்லை,' என கூறி, பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திருப்பூர் மாநகராட்சி 17வது வார்டுக்கு உட்பட்டது அண்ணா நகர், பாண்டியன் நகர் பகுதிகள். இப்பகுதி மக்களுக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து வரும் இரண்டாவது திட்ட குடிநீர் 30 நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்படும். அதுதவிர, 10 நாட்களுக்கு ஒருமுறை மூன்றாவது திட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. தேவைக்கேற்ப, ஆழ்குழாய் கிணற்று நீரும் சப்ளை செய்யப்
படுகிறது.முக்கிய வழித்தடங்களில் குழாய் உடைப்பு ஏற்பட்டதால், கடந்த 40 நாட்களாக இரண்டாவது திட்ட குடிநீர் அப்பகுதியில் வினியோகிக்கப்பட வில்லை. இந்நிலையில், நேற்று, வழக்கம்போல், கவுன்சிலர் பாலன், வார்டுக்குள் குடிநீர் வினியோக பணிகளை பார்வையிட சென்றார். அப்போது, மாரியம்மன் கோவில் அருகே திரண்டிருந்த மக்கள், "40 நாட்களாக குடிநீர் கிடைக்கவில்லை,' எனக்கூறி, அவரை 
சூழ்ந்தனர்.கவுன்சிலர் பதிலளிக்கையில், ""தற்போது கூடுதலாக குடிநீர் பெறப்பட்டுள்ளதால், மூன்றாவது திட்டத்தில் வாரம் ஒருமுறை சப்ளை செய்யப்படும். இரண்டாவது திட்ட குடிநீரை மாதம் ஒருமுறை வினியோகிக்க வசதியாக, குடிநீர் சேதங்கள் சரி செய்யப்பட்டு வருகின்றன. விரைவில் குடிநீர் பிரச்னை தீரும்,'' என்று சமரசம் செய்தார்

No comments:

Post a Comment