போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Saturday 23 June 2012

குரூப்-4 தேர்வு: திருப்பூரில் 30539 பேர் எழுதுகிறார்கள்


குரூப்-4 தேர்வு: திருப்பூரில் 30539 பேர் எழுதுகிறார்கள்
திருப்பூர், 
தமிழக அரசின் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு அடுத்த மாதம் (ஜூலை) 7-ந்தேதி நடக்கிறது. இந்த தேர்வை எழுத திருப்பூர் மாவட்டத்தில் இருந்து மொத்தம் 30 ஆயிரத்து 539 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
 
இதில் திருப்பூரில் 12 ஆயிரத்து 543 பேரும், அவினாசியில் 2 ஆயிரத்து 294 பேரும், தாராபுரத்தில் 4613 பேரும், காங்க யத்தில் 3071 பேரும், மடத்துக்குளத்தில் 764 பேரும், பல்லடத்தில் 1537 பேரும், உடுமலையில் 5717 பேரும் அடங்குவார்கள்.
 
இதற்காக 80 கட்டிடங்களில் 1722 அறைகள் தயார்படுத்தப்பட்டு உள்ளது. தேர்வு நடைபெற உள்ள கட்டிடங்களில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, தேர்வு எழுதுவதற்கு தேவையான மேஜை, நாற்காலிகள், மின்சார வசதி, பஸ் வசதி, இட வசதி உள்ளிட்டவை சரியாக உள்ளதா? என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் எம்.மதிவாணன், போலீஸ் சூப்பிரண்டு ஏ.ஆஷ்ரா கர்க் ஆகியோர் பார்வையிட்டனர்.
 
மேலும் தேர்வு எழுத வரும் விண்ணப்பதாரர்கள் எளிதில் சென்று வருவதற்கு வசதியாக பஸ் போக்குவரத்து வசதியை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்று போக்குவரத்து அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment