போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Monday 31 December 2012

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை

திருப்பூர்:நேற்று முன்தினம் இரவு, மின்சாரம் தாக்கி, ஒருவர் பலியானார்; நஷ்ட ஈடு வழங்கக்கோரி, உறவினர்கள், தொழிலாளர்கள், வடக்கு போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.மதுரை, ஜெய்ஹிந்த்புரம் பாண்டியராஜன் மகன் கண்ணன், 28. ஐந்து ஆண்டுகளாக, குமார் நகர் மின்வாரிய அலுவலகத்தில், கணக்கில் வராத, தற்காலிக பணியாளராக இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 11.00 மணிக்கு, லட்சுமி நகர் பகுதியில் மின்தடைஏற்பட்டுள்ளதாகவும், சரி செய்து வருமாறும், "போர்மேன்' கூறியுள்ளார்.பியூஸ் போட கண்ணன், மின்கம்பத்தில் ஏறியபோது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி, சம்பவ இடத்திலேயே பலியானார். வடக்கு போலீசார்,சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.நேற்று காலை 7.00 மணிக்கு, கண்ணனின் உறவினர்கள் மற்றும் திருப்பூர் மின் கோட்டத்தில் தற்காலிக ஊழியர்களாக பணியாற்றிவருபவர்கள், "மின் பகிர்மான கழக அதிகாரிகள், எங்களிடம் பணியாற்ற சொன்னாலும், விபத்து ஏற்பட்டால், யார் என்றே தெரியாது; மின் பகிர்மான கழக பணியாளர்களை தவிர யாரும் பணி செய்யக்கூடாது என அறிவித்து விடுகின்றனர்.கண்ணன் குடும்பத்துக்கு நஷ்ட ஈடு வழங்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, வடக்கு போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். அவர்களிடம், போலீசார் பேச்சு நடத்தியதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.

Friday 7 December 2012

31-க்குள் மின் விநியோகம் சீராகாவிட்டால் வேலைநிறுத்தம்


31-க்குள் மின் விநியோகம் சீராகாவிட்டால் வேலைநிறுத்தம்

First Published : 22 December 2012 04:43 AM IST
வரும் 31-ஆம் தேதிக்குள் சீரான மின்சாரம் வழங்காவிட்டால்  வேலைநிறுத்தம் செய்வதென விசைத்தறி உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டுக் கமிட்டிக் கூட்டம், தெக்கலூரில் புதன்கிழமை நடைபெற்றது.
 தெக்கலூர் பகுதி தலைவர் எஸ்.சுப்பு தலைமை வகித்தார்.
 இதில், தமிழக அரசு மற்றும் மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் கடந்த ஏப்ரலில் விசைத்தறித் தொழிலுக்கு கடுமையான கட்டண உயர்வை அமல்படுத்தியது. இதனால், விசைத்தறியாளர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். இக் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். சிறு, குறு விசைத்தறியாளர்களின் நலன் கருதி சென்னைக்கு நிகராக, மாநிலம் முழுவதும் சீரான மின்சாரம் வழங்க வேண்டும். தொடர் மின்வெட்டால் விசைத்தறியாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
 டீசல் வாங்கித் தொழில் செய்ய முடியாத நிலை உள்ளது. டிச.31-க்குள் சீரான மின்சாரம் வழங்காவிட்டால் வேலைநிறுத்தம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை. விசைத்தறியாளர்களுக்கு டீசலை மானிய விலையில் மத்திய அரசு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மங்களம், சோமனூர், பெருமாநல்லூர், 63 வேலம்பாளையம், பல்லடம், தெக்கலூர், சூரிபாளையம், புதுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Wednesday 28 November 2012

தடையில்லா மின்சாரம் வழங்கக் கோரி திருப்பூரில் தொழில் துறையினர் ஆர்ப்பாட்டம்


திருப்பூர்:தடையில்லாமல் மின்சாரம் வழங்கி, தொழில் துறையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மத்திய - மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில், திருப்பூரில் தொழில் துறையினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மின் பற்றாக்குறை காரணமாக, திருப்பூரில் 18 மணி நேரம் மின்வெட்டு நிலவுகிறது. தொழில் துறை கடுமையாக பாதிக்கப்பட்டு, தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். எனவே, திருப்பூருக்கு சிறப்பு கவனம் செலுத்தி, தடையற்ற மின்சாரம் வழங்கக்கோரி, தொழில் பாதுகாப்பு குழு மற்றும் தொழில் கூட்டமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 
தொழில் பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியம் தலைமை வகித்தார். 

மின்வெட்டு சமயத்திலும் குறைந்தபட்ச கட்டணமா?


திருப்பூர்:தினமும் 75 சதவீதம் மின்வெட்டு ஏற்படும் நிலையிலும், குறைந்த பட்ச கட்டணம் வசூலிக்கும் மின்வாரிய நடைமுறைக்கு கிரில் ஒர்க் ஷாப் உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இச்சங்க கூட்டம், சமீபத்தில் நடந்தது. தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். செயலாளர் வடிவேல் முன்னிலை வகித்தார்.நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டால் கடுமையாக பாதித்துள்ள சிறு, குறு தொழில்களுக்கு பகலில் தொடர்ச்சியாக எட்டு மணி நேரம் மின்சாரம் வழங்க வேண்டும்;இரவு நேரங்களில் வீடுகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். சென்னைக்கு இரண்டு மணி நேரம், மற்ற பகுதிகளுக்கு 16 மணி நேரம் மின்வெட்டு என, மற்ற பகுதி மக்களை, இரண்டாம் தர மக்களாக கருதும் போக்கை கைவிட்டு, அனைவருக்கும் சமமாக பகிர்ந்தளிக்க வேண்டும்.
தினமும் 75 சதவீதம் மின்வெட்டு செய்து விட்டு, குறைந்தபட்ச மின் கட்டணத்தை 100 சதவீதம் வசூலிப்பதை மின்வாரியம் நிறுத்த வேண்டும். பழுதடைந்துள்ள மின் உற்பத்தி நிலையங்களை பராமரிக்கவும், புதிய மின் திட்ட பணிகளை வேகப்படுத்தவும் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்திலுள்ள அனைத்து கட்சியினரும், வேறுபாடுகளை மறந்து, தமிழகத்தின் தொழில் துறை, விவசாய துறை, பொருளாதாரத்தை கருத்தில்கொண்டு, ஒன்று சேர்ந்து, மத்திய அரசிடம் பேசி, கூடுதல் மின்சாரம் பெற வேண்டும். இலவச திட்டங்களை மூன்று ஆண்டுகளுக்கு நிறுத்திவிட்டு, புதிய மின் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி, வருங்காலத்தில் மின் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்கநடவடிக்கை எடுக்க வேண்டும்,என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கேபிள் இணைப்பு படிவம் ரேஷன் கடைகளுக்கு வினியோகம்


:திருப்பூர் மாவட்டத்தில் கேபிள் "டிவி' கணக்கெடுப்பு படிவங்கள், அந்தந்த ரேஷன் கடைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. பொருட்கள் வாங்க வரும் கார்டு தாரர்களிடம் படிவத்தை கொடுத்து, விரைவில் பூர்த்தி செய்து பெற விற்பனையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் கேபிள் இணைப்புகள் எவ்வளவு உள்ளன என்பதை கண்டறிய கணக்கெடுக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்துக்கு 7.26 லட்சம் படிவங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை, ஏழு தாலுகாக்களில் உள்ள ரேஷன் கடைகளுக்கு, பிரித்து அனுப்பப்பட்டுள்ளன. அடுத்த மாதம் பொருட்கள் வழங் கும்போது, கார்டுதாரர்களிடம் படிவங்கள் வழங்கப்படும்.
உடனடியாக பூர்த்தி செய்து திருப்பி வழங்கலாம். அவகாசம் தேவை எனில், வீட்டுக்கு எடுத்துச்சென்று, படிவத்தை பூர்த்தி செய்து இரண்டு நாட்களில் திரும்ப கொடுக்கலாம். நகரப்பகுதியில் உள்ள கடைகளில், படிவங் கள் நேற்று முதல் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.படிவங்கள் கையாள்வதில் ஏற்படும் குழப்பங்களை தவிர்க்க, வரிசை எண் வழங்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்த படிவங்களை வரிசைப்படுத்தி, தாலுகா குடிமைப்பொருள் வழங்கல் பிரிவில் கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. படிவங்களை விரைவில் பெறுவதற்காக, கார்டுதாரர்களுக்கு உதவியாக விற்பனையாளரே பூர்த்தி செய்து, கையொப்பம் பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ரேஷன் கார்டு இல்லாதவர்கள், கேபிள் இணைப்பு விவரங்களை எவ்வாறு தெரிவிப்பது என குழப்பம் அடைந்துள்ளனர்.கேபிள் "டிவி' தனி தாசில்தார் சிவசுப்ரமணியத்திடம் கேட்ட போது,""முதல்கட்டமாக, ரேஷன் கடைகளுக்கு படிவம் வழங்கப்பட்டுள்ளது. கார்டு இல்லாதவர்களும், படிவத்தை கேட்டுப்பெற்றும், வெள்ளை தாளில் விவரங்களை எழுதியும், அருகில் உள்ள ரேஷன் கடையில் கொடுக்கலாம். கேபிள் ஆப்பரேட்டர்களிடம் இருந்து கடந்த மாத நிலுவை வசூலாகிவிட்டது. நடப்பு மாத கட்டணத்தில் 65 சதவீதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்குள் நிலுவை தொகையும் வசூலிக்கப்படும்,'' என்றார்.

Tuesday 27 November 2012

தடையில்லா மின்சாரம் கோரி திருப்பூரில் இன்று ஆர்ப்பாட்டம்

திருப்பூர்:தடையில்லாமல் மின்சாரம் வழங்கக்கோரி, திருப்பூர் தொழில் துறையினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.தடையில்லாமல் மின்சாரம் வழங்கக்கோரி, திருப்பூர் தொழில் பாதுகாப்பு குழு மற்றும் தொழில் கூட்டமைப்பு சார்பில், "லட்சம் பேர்
பேரணி' நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. போலீஸ் அனுமதி மறுத்ததால், ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இன்று பிற்பகல் 3.00 மணிக்கு, மாநகராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. திருப்பூர், வெள்ளகோவில், காங்கயம், பல்லடம், அவிநாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 57 தொழில் அமைப்புகள், தொழிலாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் தொழில் பாதுகாப்பு குழு மின்வெட்டை கண்டித்து மாபெரும் பேரணி: போலீசார் தடை


திருப்பூர்,தமிழகம் முழுவதும் தொடர்ந்து மின் வெட்டு நிலவி வருகிறது.  இந்த தொடர் மின் வெட்டால் பல்வேறு பனியன் கம்பெனிகள் மற்றும் தொழில் துறை பாதிப்படைந்து உள்ளன.  இந்த தொடர் மின் வெட்டை தடுத்து மின்சாரத்தை முறையாக வழங்க கோரி வருகிற 28ந் தேதி தொழில் பாதுகாப்பு குழு சார்பில் 1 லட்சம் பேர் கலந்து கொள்ளும் மாபெரும் பேரணி நடைபெறுகிறது.  இந்நிலையில், அரசை கண்டித்து நடைபெறும் இந்த பேரணிக்கு போலீசார் தடை விதித்துள்ளன

Sunday 25 November 2012

:திருப்பூரில் மின் தடையிலும் பாரபட்சம்; குமுறும் பொதுமக்கள்


திருப்பூரில், மின் தடை ஏற்படுவதில், சில பகுதிகளுக்கு மட்டும் கூடுதல் நேரம் மின்சாரம் வழங்கி பாரபட்சம் காட்டி வருவதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

மின் பற்றாக்குறை காரணமாக, திருப்பூரில், தினமும் நான்கு முதல் ஆறு மணி நேரம் மட்டுமே மின் வினியோகம் செய்யப்படுகிறது. மாநிலம் முழுவதும் மொத்த மின் உற்பத்தியை கணக்கிட்டு, மின்சார இருப்பு அடிப்படையில் அவ்வப்போது துணை மின் நிலையங்களில் மின் தடை ஏற்படுத்த உத்தரவிடப்படுகிறது. திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு ஈரோடு "லோடு செட்டிங்' சென்டர் மூலம் நேரடியாக 240, 230 கே.வி., துணை மின் நிலையங்களுக்கு உத்தரவு வழங்கப்படுகிறது.இந்த துணை மின் நிலையங்களுக்கு கீழுள்ள 110, 90, 33 கே.வி., துணை மின் நிலையங்களில் ஒரு சிலவற்றுக்கு நேரடியாக மின் நிறுத் தம் செய்யப்படாமல் மின் வினியோகம் செய்யப்படுகிறது. சில சிறிய துணை மின் நிலையங்களுக்கு இரண்டு பெரிய துணை மின் நிலையங்களுக்கு தொடர்பு இருக்கும். இதையும் பயன்படுத்தி, முக் கியமான நபர்களுக்கு மின் வினி யோகம் செய்யப்பட்டு வருகிறது.இதன் மூலம், தொடர்ந்து ஆறு மணி நேரம் வரை மின்சாரம் கிடைப் பதோடு, துணை மின் நிலையங்கள் தொடர்ந்து இயங்கும் வகையில் வழங்கப்படும் மின்சாரம் காரணமாக, 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் கிடைக்கும் நிலையும் உள்ளது.இவ்வாறு, திருப்பூர் குமரானந்தபுரம், நெசவாளர் காலனி பகுதிகள் அருகருகே இருக்கும் நிலையில், நெசவாளர் காலனி ஒரு பீடர் பகுதியில் மட்டும், மின்வெட்டு இல்லாமல் தொடர்ந்து 8 மணி நேரம் வரை மின் வினியோகம் செய்யப்பட்டு வந்துள்ளது. அப்பகுதி பனியன் நிறுவன உரிமையாளர்கள், பொதுமக்கள் புகார் எழுப்பியதையடுத்து, ஆய்வு செய்தபோது மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் காரணமாக, மின்சாரம் தொடர்ந்து வழங்கப் பட்டது கண்டறியப்பட்டது.
அதேபோல், சந்தைபேட்டை துணை மின் நிலையம் அமைந்துள்ள பகுதியில் ஒரு பீடரில் மட்டும், தடையில்லாமல் மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு, கலெக்டர் அலுவலகம், அப்பகுதியில் அமைந்துள்ளதால் தொடர்ந்து மின்சாரம் வழங்கப்பட்டு வருவது தெரியவந்துள்ளது. இவ்வாறு, பாரபட்சமான முறையில், சில பகுதிகளுக்கு மட்டும் தடையில்லாமல் மின்சாரம் வழங்கப்படுகிறது. இதனால், துணை மின் நிலையங்களில் முறையாக மின் நிறுத்தம் செய்யப்படுகிறதா என்பது குறித்து திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேற்பார்வை பொறியாளர் நிர்மலதா கூறியதாவது: கலெக்டர் அலுவலகத்தில், வாக்காளர் இறுதி பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருவதால், தடையில்லா மின்சாரம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மின்வாரிய அலுவலகத்தில் "பில்லிங்' பணிகள் இருப்பதால், நெசவாளர் காலனி பகுதியில் மின் தடை குறைந்து காணப்படும். மின் பகிர்மான கழக அலுவலகத்திற்கு மட்டும் வேண்டாம்; இருக்கும்போது பணிகள் மேற்கொள்ளுங்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால், அனைத்து பகுதிகளிலும் உள்ளதுபோல்,நெசவாளர் காலனி பகுதியிலும் மின் தடை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

Saturday 24 November 2012

மின்வெட்டு பிரச்னை : அரசின் கவனத்தை ஈர்க்கவே திருப்பூரில் 28-ம் தேதி பேரணி


திருப்பூர்: மின்வெட்டு பிரச்னை குறித்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், திருப்பூரில் வரும் 28ம் தேதி  பேரணி நடக்கிறது என்று திருப்பூர் தொழில் பாதுகாப்பு குழு அறிவித்துள்ளது. திருப்பூர் தொழில் பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர்கள் அண்ணாதுரை, விஜயகுமார் ஆகியோர் அளித்த பேட்டி:  கடும் மின்வெட்டால் திருப்பூர், கோவை மாவட்டங்களில் தொழில் துறையினர் பெரும¢ அவதிப்படுகின்றனர். குறித்த நேரத்தில் பனியன் ஆர்டர்களை அனுப்ப முடியாமலும், புதிய ஆர்டர்களை வாங்க முடியாமலும் தொழில் துறையின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. விடுமுறையில் ஊருக்கு சென்ற தென் மாவட்ட தொழிலாளர்கள் திரும்பிவரவில்லை. விசைத்தறி தொழிலை நம்பியுள்ள பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள¢ளப்பட்டுள்ளனர்.  திருப்பூர், கோவை மாவட்டங்கள் ஏற்றுமதி, உள்நாட்டு உற்பத்தி, விசைத்தறி, பஞ்சாலை, விவசாயம் மூலம் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கொடுத்துள்ளது.  மத்திய, மாநில அரசுகளுக்கு பல ஆயிரம் கோடி வருவாய் ஈட்டி கொடுக்கிறது. மின்பற்றாக்குறையை போக்க மத்திய அரசு மின் தொகுப்பிலிருந்து அரசு தமிழகத்துக்கு கூடுதல் மின்சாரம் வழங்க வேண்டும். தாமதமாக நடைபெற்றுவரும் புதிய மின் உற்பத்தி நிலைய திட்டங்களை துரிதமாக செயல்படுத்தி, மின் உற்பத்தியை மிகவேகமாக தொடங¢கவேண்டும். கூடங்குளம் அணு மின் நிலையத்தில், மின¢ உற்பத்தியை உடனடியாக தொடங்கவேண்டும். உயர் அழுத்த மின்சாரத்தை பயன்படுத்தும் தொழில் நிறுவனங¢கள், வெளிமாநிலத்தில் இருந்து நேரடியாக மின்சாரத்தை வாங்க அனுமதி அளிக்க வேண்டும். திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள தொழில் நிறுவனங்களின் நிலையை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் வரும் 28ம் தேதி பேரணி நடத்தப்படவுள்ளது.  பேரணி அரசுக்கு எதிரானது அல்ல. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Saturday 3 November 2012

பாதியில் நிற்கும் சுரங்க பாலம் பணிநீர் தேங்காமல் இருக்க தடுப்பு சுவர்


திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, பாதியில் நிறுத்தப்பட்ட சுரங்க பாலத்தில் தண்ணீர் தேங்காமல் இருக்க, நெடுஞ்சாலைத்துறை சார்பில் தடுப்பு சுவர் அமைக்கப்படுகிறது.திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே இருந்த பழைய சுரங்க பாலத்தை இடித்து விட்டு, 1.5 கோடி ரூபாய் செலவில் புதிதாக சுரங்க பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. கூடுதல் நீளத்தில் பாலம் அமைக்க திட்டம் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால், கால்நடைத்துறையிடம் இருந்து நிலம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டதால், பாலம் கட்டுமான பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், மழைநீர், பாலத்துக்குள் தேங்கி, துர்நாற்றம் ஏற்பட்டு வந்ததோடு, கொசு உற்பத்தியும் அதிகரித்தது. மாநகராட்சி சார்பில் கழிவு நீர் அகற்றப்பட்டது. அப்போது, இனி, தண்ணீர் புகாமல் இருக்க நடவடிக்கை எடுக்க நெடுஞ்சாலைத்துறைக்கு வலியுறுத்தப்பட்டது. தற்போது, அப்பகுதியில் தடுப்பு சுவர் கட்டும் பணி துவக்கப்பட்டுள்ளது.நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில்,
"சுரங்க பாலம் கட்ட அனுமதி கிடைக்கும் வரை, பாலத்துக்குள் தண்ணீர் செல்லாதவாறு தற்காலிகமாக தடுப்பு சுவர் அமைக்கப்படுகிறது. கழிவு நீர் மற்றும் மழை நீர் எளிதாக வெளியேறும் வகையில் குழாய் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,' என்றனர்

Saturday 27 October 2012

திருப்பூரில் நள்ளிரவில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி


திருப்பூரில் நள்ளிரவில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
திருப்பூர் யூனியன் மில் ரோட்டில் லட்சுமி விலாஸ் வங்கி ஏ.டி.எம். உள்ளது. எஸ்.பெரியபாளையத்தை சேர்ந்த முத்துசாமி (வயது 58) என்பவர் காவலாளியாக பணியாற்றி வருகிறார். நள்ளிரவு 2 மணி அளவில் ஆம்னி வேனில் 3 பேர் முகமூடி அணிந்தபடி வந்து இறங்கினர்.  அவர்களில் ஒருவன் வெளியே நின்று கொண்டான்.

மற்ற 2 பேர் ஏ.டி.எம். சென்டருக்குள் நுழைந்தனர். அவர்களில் ஒருவன் முத்துச்சாமியின் வாய் மற்றும் கை - கால்களை கட்டினான். மற்றொருவன் கடப்பாறையால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயன்றான். அப்போது அந்த வழியாக வாகனங்களில் சிலர் வந்தனர். வாகனங்களை பார்த்ததும் வெளியே நின்று கொண்டிருந்தவன்  சைகை காட்டினான். 

Saturday 20 October 2012

திருப்பூரில் மின்வெட்டை கண்டித்து பாத்திர உற்பத்தியாளர்கள் "ஸ்டிரைக்'

திருப்பூர்:தொடர் மின்வெட்டை கண்டித்து, திருப்பூர் அனுப்பர்பாளையம் அனைத்து பாத்திர உற்பத்தியாளர் மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று வேலை நிறுத்தம், கடையடைப்பு போராட்டம் நடந்தது. கறுப்புக்கொடியுடன் ஊர்வலம் செல்ல போலீசார் அனுமதி வழங்காததால் சாலை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Wednesday 17 October 2012

திருப்பூர் மின்வெட்டை கண்டித்து "டிவி', மின் விசிறியை பாடையில் கட்டி ஊர்வலம்


திருப்பூர் : தொடர் மின்வெட்டை கண்டித்து, "டிவி', மின் விசிறியை பாடையில் கட்டி, ஊர்வலமாக எடுத்து சென்று, மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.திருப்பூர் வடக்கு ஒன்றிய இ.கம்யூ., மாநகர 20வது வார்டு கிளை சார்பில், "மின்வெட்டை கண்டித்தும், சீரான மின்சாரம் கோரியும்' போயம்பாளையம் ஆர்.கே., நகர் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நேற்று நடந்தது. காந்தி நகர், கணபதி நகர், சதாசிவம் நகர், வடிவேல் நகர், பழனிச்சாமி நகர், நேரு நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 700க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அதிகாரிகள் தரப்பில் சரியாக பதிலளிக்காததால் ஆவேசமடைந்த பொதுமக்கள், "டிவி' மற்றும் மின்விசிறியை, பாடையில் கட்டி, ஊர்வலமாக வந்து பி.என்.ரோடு போயம்பாளையம் பிரிவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஒருவர், கிழிந்த சட்டையுடன், கையில் சட்டியுடன் நின்றிருந்தார். அனுப்பர்பாளையம் இன்ஸ்பெக்டர் சையதுபாபு, சம்பவ இடத்துக்கு வந்து பேச்சு நடத்தினார். "மின்வாரிய அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும்,' என பொதுமக்கள் கூறினர்.
அனுப்பர்பாளையம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சுப்ரமணியம் வந்து, பேச்சு நடத்தினார். "மழை பெய்வதால் மின்வெட்டு குறைய வாய்ப்புள்ளது.கூடுதலாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார். அதன்பின், பொதுமக்கள் கலைந்து சென்றனர். சாலை மறியலால் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Sunday 14 October 2012

காங்கேயம் பகுதியில் 14 மணி நேர மின் தடையால் அரிசி உற்பத்தி-எண்ணை ஆலைகள் பாதிப்பு


காங்கேயம் பகுதியில் 14 மணி நேர மின் தடையால் அரிசி உற்பத்தி-எண்ணை ஆலைகள் பாதிப்பு
காங்கயம் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து யூனியன் பகுதிகளுக்கு களிமேடு துணை மின்சார நிலையம் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. சுமார் 50 ஆயிரம் பேர் வாழ்ந்து வரும் இந்த காங்கயம் சுற்று வட்டார பகுதிகளுக்கு கடந்த சில மாதங்களாகவே நிலவி வரும் மின்சார தட்டுப்பாடு படிப்படியாக அதிகரித்து தற்போது கடுமையாக அனைவரின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கும் அளவுக்கு அதிகரித்துள்ளது. 

மின்சாரத்தையே நம்பியுள்ள பொதுமக்களும், வியாபாரிகளும், தற்போது மிகவும் நொந்து போகும் அளவுக்கு மின்சாரம் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். 

Wednesday 10 October 2012

மின்சாரம் தயாரிக்க "நமக்கு நாமே' திட்டம்:திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழு முயற்சி


திருப்பூர், : கடும் மின்வெட்டால் முடங்கியிருக்கும் பின்னலாடைத் தொழில் நகரமான திருப்பூரில், நமக்கு நாமே மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை முன் வைத்து அதற்கான பூர்வாங்க முயற்சியில் திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழு ஈடுபட்டுள்ளது.
 பின்னலாடை ஏற்றுமதி மையமான திருப்பூரில் ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் கோடி ஏற்றுமதி வர்த்தகமும், ரூ.8 ஆயிரம் கோடி மதிப்புக்கு உள்நாட்டு வர்த்தகமும் நடைபெறுகிறது. மாநிலத்தின் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் என 5 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாவும் இந்தத் தொழிலை சார்ந்துள்ளனர்.
 பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள முயற்சி மேற்கொண்டுவரும் பின்னலாடைத் தொழில்துறைக்கு, மின்வெட்டு பிரச்னை பேரிடியாக உள்ளது. மின்சாரத்துக்காக அரசை நம்பி பயனில்லை. அரசு உதவியுடன் நமக்கு நாமே மின்சாரம் உற்பத்தி செய்துகொள்வது தான் எதிர்கால நலனுக்கு நன்மை பயக்கும் என்ற சிந்தனையை விதைக்கும் முயற்சியில், திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
 இதற்காக பல்வேறு தொழில் அமைப்புகள், சங்கங்களின் நிர்வாகிகளின் ஆலோசனைகளைப் பெற இக்குழு முயற்சி எடுத்து வருகிறது.
 இதுகுறித்து தொழில் பாதுகாப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.விஜயகுமார் கூறியது: 
 மின்வெட்டு பிரச்னைக்காக போராட்டங்கள் நடத்துவதில் எந்தவித பலனும் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. இப்பிரச்னை நீங்க 2 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய நிலை நீடிக்கும். அரசை எதிர்பார்ப்பதைக் காட்டிலும், அரசு உதவியுடன் நமக்கு நாமே மின்சாரத்தை உற்பத்தி செய்துகொள்வதுதான் எதிர்காலத்துக்கு நன்மை தரும்.
 மாநகருக்கு ஒட்டுமொத்தமாக 200 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. இதற்காக, சூரிய சக்தி மின்சாரத்தை இத்திட்டத்தின்கீழ் உற்பத்தி செய்துகொள்ளும் திட்டத்தை தொழில் பாதுகாப்புக் குழு முன் வைக்கிறது.
 சூரிய சக்தி அல்லது காற்றாலை மின்சாரம் அல்லது இருவகையிலும் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்துகொள்வது போன்ற சாத்தியக்கூறுகள் தொழில் நிறுவனங்கள், அமைப்புகள் ஆலோசனைக்கு முன் வைக்கப்படுகிறது.
 சூரிய சக்தியில் ஒரு மெகாவாட் மின்சாரம் தயாரிக்க 5 ஏக்கர் நிலம் மற்றும் ரூ.7 கோடி முதலீடு வீதம், 200 மெகாவட் மின்சார உற்பத்திக்கு ஆயிரம் ஏக்கர் நிலம் தேவைப்படுவதுடன், ரூ.1,100 கோடி செலவு ஏற்படும்.
 இதில், 75 சதவீதம் வங்கிக் கடன் பெற இயலும். திருப்பூர் தொழில்துறையினர் ரூ.300 கோடி வரை முதலீடு செய்ய வேண்டும். இதற்காக புறம்போக்கு இடத்தை அரசு வழங்க வேண்டும். சிறிய அளவில் 25 கிலோ வாட் மின்சார உற்பத்திக்கு ரூ.30 லட்சம் தேவைப்படும்.
 இதுபோன்ற சிறிய அளவிலான சூரிய சக்தி மின்சார உற்பத்தியை, தனிப்பட்ட முறையில் தொழில் நிறுவனங்கள், வர்த்தக வியாபார நிறுவனங்கள் அமைத்துக்கொள்ளலாம். ரூ.1.5 லட்சம் செலவில்கூட ஒரு கிலோ வாட் மின்சாரத்தை வீடுகளில் உற்பத்தி செய்துகொள்ள முடியும்.
 இதற்காக, சூரிய சக்தி மின்சார பிளான்ட் தயாரிப்பு நிறுவனங்களை அழைத்து திருப்பூரில் கண்காட்சி நடத்தவும் ஏற்பாடு செய்து வருகிறோம். தனி நபர்கள், சூரிய சக்தி மின்சார பிளான்ட்டுகள் அமைப்பதன் மூலமாக 100 மெகாவாட் மின்சாரத்தை பெற முடியும்.
 மற்றொரு பகுதி 100 மெகாவாட் மின்சாரத்தை பொதுவான முறையில் உற்பத்தி செய்யலாம். இந்த முறையில் 100 மெகாவாட் சூரிய சக்தி மின்சார உற்பத்திக்கு 500 ஏக்கர் நிலம், ரூ.600 கோடி முதலீடு தேவைப்படும். இது சாத்தியமான திட்டம் தான்.
 சூரிய சக்தி மின்சாரம் மூலமாக, காலை 6 முதல் மாலை 6 மணி வரை தடையில்லா மின்சாரம் கிடைக்கும். அரசிடம் மின்சாரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படாது. டீசல் செலவு ஏற்படாது.
 இந்த முயற்சி வெற்றி பெறும்போது, 25 ஆண்டு காலத்துக்குத் தேவையான மின்சாரத்தை நமக்கு நாமே உற்பத்தி செய்துகொள்ள முடியும் என்றார்.

அடிப்படை வசதி கோரி ஊத்துக்குளியில் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்



திருப்பூர், அக். 9: ஊத்துக்குளி பேரூராட்சியில் குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 ÷ஊத்துக்குளி பேரூராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் வாரம் இருமுறை சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும், தேவையான பகுதிகளில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, குடிநீர்க் குழாய்கள் அமைக்க வேண்டும், பொது சுகாதாரத்தைப் பராமரிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
 ÷சமுதாய நலக் கூடத்தில் அனுமதி கேட்கும் மக்களுக்கு அலைக்கழிக்காமல் அனுமதி வழங்க வேண்டும், சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதை முன்வைத்து பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கமும் நடைபெற்றது.
 ÷ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ். மாரிமுத்து தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி. மூர்த்தி, ஒன்றியச் செயலாளர் ஆர். குமார், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கை. குழந்தைசாமி, வி.கே. பழனிசாமி, எஸ். லட்சுமி உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். பின்னர் பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Tuesday 2 October 2012

திருப்பூர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க புதிய நடைமுறை : படிவம் கொடுத்தால் வீட்டுக்கு தபால் வரும்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டசபை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. எட்டு லட்சத்து 86 ஆயிரத்து 652 ஆண்கள்; எட்டு லட்சத்து 54 ஆயிரத்து 841 பெண்கள்; 22 திருநங்கைகள், என, 17 லட்சத்து 41 ஆயிரத்து 515 வாக்காளர்கள் உள்ளனர். பட்டியலில் பெயர் சேர்க்க, புதிதாக படிவம் கொடுத்தால், அதன் உண்மைத்தன்மையை உறுதி செய்வதற்காக, தபால் துறை மூலமாக வீட்டுக்கு கடிதம் அனுப்பும் நடைமுறையை பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

Saturday 29 September 2012

கோவையில், கடந்த இரண்டு நாட்களாக, காட்மா சார்பில், நடத்தப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம், தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.


கோவையில், கடந்த இரண்டு நாட்களாக, காட்மா சார்பில், நடத்தப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம், தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
காட்மா தலைவர் ரவிக்குமார் கூறியதாவது: சென்னைக்கு மூன்று மணி நேரம் மின்வெட்டை அறிவித்து, அந்த மின்சாரத்தை, பிற மாநிலங்களுக்கு பகிர்ந்து வழங்க வேண்டும். வெளிச் சந்தையிலிருந்து மின்சாரம் பெற்று, தொழில் நகரங்களுக்கு, வழங்க வேண்டும் என்ற, இரண்டு கோரிக்கைகள், அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டன. இக்கோரிக்கைகளை, அதிகாரிகள், ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து, தற்காலிகமாக, போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது. அடுத்த, 15 நாட்களுக்குள், கோரிக்கைகள் நிறைவேற்றப்படா விட்டால், அனைவரும் குடும்பத்துடன் வந்து, உண்ணாவிரதம் இருப்போம். இவ்வாறு, அவர் கூறினார்.
மின்வாரியம் விளக்கம்: மின்வாரிய முதன்மை இன்ஜி., தங்கவேலு கூறியதாவது: காட்மா சங்கம் தெரிவித்த கோரிக்கைகளை, எங்கள் தலைமையிடம் தெரிவிப்போம். காற்றாலை மற்றும் பருவமழை இல்லாததால், தற்போது இந்நிலை ஏற்பட்டுள்ளது. விரைவில், வடசென்னை, மேட்டூர், வள்ளூர் பகுதிகளில் புதிய மின் திட்டங்களின் உற்பத்தி துவங்குவதால், மின்சாரம் சீராகும் வாய்ப்புள்ளது. இவ்வாறு, தங்கவேலு கூறினார்.

மின்வெட்டுக்கு கண்டனம் திருப்பூரில் 3-ந் தேதி முழு அடைப்பு: தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டத்தில் 10 மணி நேரம் முதல் 14 மணி நேரம் வரை மின்வெட்டு அமலில் உள்ளது. இதனால் பனியன் தொழில்கள் அடியோடு முடங்கியுள்ளன. மின்வெட்டு பிரச்சினை குறித்த அவசர ஆலோசனை கூட்டம் திருப்பூரில் உள்ள ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் நடந்தது. சங்கத் தலைவர் முத்துரத்தினம் தலைமை தாங்கினார். கோவிந்தசாமி (டெக்மா சங்கம்) முன்னிலை வகித்தார். 

கூட்டத்தில் தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள், தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அவர்கள் பேசும் போது மின்வெட்டு காரணமாக திருப்பூரில் பனியன் தொழில்கள், வர்த்தக, வியாபார நிறுவனங்கள் முடங்கி இருப்பதாக கூறியும், இதற்காக வலுவான போராட்டம் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள். அதைத்தொடர்ந்து டீமா சங்கத் தலைவர் முத்துரத்தினம் பேசியதாவது:-

மின்வெட்டு காரணமாக பின்னலாடை நகரம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. மின்வெட்டுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து வருகிற 1-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் 3-ந் தேதி திருப்பூரில் கடை அடைப்பு மற்றும் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறுகிறது. வேலை நிறுத்தம் நடைபெறும் 3-ந் தேதி குமரன் சிலை அருகில் இருந்து பேரணியாக புறப்பட்டு கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்படும். இதில் அனைத்து தொழிலாளர்கள், தொழில் அமைப்பினர் பங்கேற்க வேண்டும்.

மேற்கண்டவாறு அவர் பேசினார்.

Thursday 27 September 2012

திருப்பூர் : பற்றாக்குறையை சமாளிக்க மீண்டும் வார மின் விடுமுறை:விரைவில் அமலுக்கு வருகிறது

திருப்பூர் :தொழிற்சாலைகளுக்கு வார மின் விடுமுறை; "பீக் ஹவர்ஸில்' மின்சாரம் பயன்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட நடைமுறைகளை மீண்டும் அமல்படுத்த, மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திட்டமிட்டுள்ளது.தமிழகத்தின் தினசரி மின் தேவை 12 ஆயிரத்து 500 மெகாவாட்டாக உள்ளது; தற்போது 8,500 மெகாவாட் மட்டுமே கிடைத்து வருகிறது. உற்பத்திக்கும், தேவைக்குமான இடைவெளி பெருமளவு அதிகரித்துள்ளதால், தினமும் 18 மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதற்கு தீர்வு காண பல்வேறு நடவடிக்கைகள் மின்வாரியம் எடுத்து வருகிறது.

திருப்பூரில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலிஉடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்

      திருப்பூரில் மின்வாரிய ஊழியருக்கு உதவியாளராக இருந்த ஒருவர், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரது குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கக்கோரி, உடலை வாங்க மறுத்து, உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருப்பூர் அருகே பெருமாநல்லூர், பொடாரம்பாளையத்தை சேர்ந்தவர் திருமால்; இவரது மக  ன் பெருமாள், 25. பெருமாநல்லூர் மின்வாரிய அலுவலகத்தில் "லைன்மேன்'களுக்கு உதவியாளராக பணியாற்றி வந்தார்.

Wednesday 26 September 2012

திருப்பூர் : மின்வெட்டால் பாதிக்கப்படு வோருக்கு நிவாரணம் வழங்கக்கோரி, வரும் 1ல் வேலை நிறுத்த போராட் டம்


             திருப்பூர் : மின்வெட்டால் பாதிக்கப்படு வோருக்கு நிவாரணம் வழங்கக்கோரி, வரும் 1ல் வேலை நிறுத்த போராட் டம் நடத்தப் போவதாக, திருப்பூர் மாவட்ட கிரில் ஒர்க்ஷாப் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இச்சங்க செயற்குழு கூட்டம், அதன் அலுவலகத்தில் நேற்று நடந்தது. அதில், "கிரில் ஒர்க்ஷாப்புகளுக்கு, பகலில் எட்டு மணி நேரம் மின்சாரம் வழங்க வேண்டும். மீன்பிடி தடை காலங்களில் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குவதைபோல், மின்வெட்டு பாதிப்புகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.

மின்திருட்டை விட மோசமானது.


மின்திருட்டை விட மோசமான திருட்டு, புரட்டு - உத்திர பிரதேச மாநிலத்தில் நடந்தேறி வருகிறது. வாக்களித்த மக்களை முட்டாள்களாக கருதி கொண்டு - அரசியல்வாதிகள் செய்கிற ஒரு ஈனத்தனமான செயலாக உள்ளது - அதிகப்படியான மின்தடை நிலவும் இந்த காலத்தில், வி.ஐ.பி தொகுதிகளுக்கு மட்டும் அந்த மின் தடையில் இருந்து முழுவதுமாக விலக்களித்து - தடை இல்லா மின்சாரம் வழங்கும் அயோக்கியத்தனமான செயலையே - மின்திருட்டை விட மோசமான திருட்டு என்கிறோம்.

வாக்களித்த மற்ற தொகுதி மக்களை பார்த்து

Monday 24 September 2012

திருப்பூர் : ரயில்வே கேட் மூடி பத்து நாளாச்சு :பணிகள் துவங்காததால் அவதி


திருப்பூர் : சுரங்க பாலம் கட்டுமான பணிக்காக, ரயில்வே கேட் மூடப்பட்டு, பத்து நாட்களாகியும் பணிகள் துவங்காமல் உள்ளது.

             திருப்பூர் நகர் மத்தியில் ரயில்வே வழித்தடம் அமைந்துள்ளது. அடிக்கடி கேட் மூடப்படுவதால், சமயங்களில் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் காத்திருந்து அவதிப்படுகின்றனர். அதனால், 20 கோடி ரூபாய் மதிப்பில் பிரிட்ஜ் வே காலனி பகுதியில், கனரக வாகனங்களுக்கான சுரங்க பாதையும், கார், இரு சக்கரம் உள்ளிட்ட இலகுரக வாகனங்களுக்கான ஒரு சுரங்க பாதையும் அமையும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டது.முதல் ரயில்வே கேட்டுக்கு மாற்றாக, கொங்கு மெயின் ரோடு மற்றும் யூனியன் மில் ரோட்டை இணைக்கும் வகையில் அமைக்கப்பட உள்ள இலகுரக வாகனங்களுக்கான சுரங்க பாதை அமைக்கும் பணியை ஒன்றரை ஆண்டு இழுபறிக்கு பின் தற்போது துவக்க திட்டமிடப்பட்டது. பணியை விரைந்து முடிக்க மாநகராட்சி மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து பணியை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.

திருப்பூர் மின்னல் வேகத்தில் பறக்கும் வாகனங்கள் ரயில்வே மேம்பாலத்தில் அடிக்கடி விபத்து


திருப்பூர் : அதிக வேகத்தில், அஜாக்கிரதையாக செல்லும் வாகனங்களால், ரயில்வே மேம்பாலம், அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதியாக மாறி வருகிறது.
திருப்பூர் வடக்கு- தெற்கு பகுதிகளை இணைக்கும் மைய பகுதியாக ரயில்வே மேம்பாலம் உள்ளது. பி.என்., ரோடு, அவிநாசி ரோடு - குமரன் ரோடு, பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதிகளுக்கு வாகனங்கள் சென்றுவர முக்கிய வழித்தடமாக ரயில்வே மேம்பாலம் உள்ளது. பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினமும் மேம்பாலத்தை கடக்கின்றன. மேம்பாலம் ஏறி, இறங்கும் பகுதிகளில் அபாய
வளைவாக இருப்பதால், வாகனங்கள் மிதமான வேகத்தில் செல்ல வேண்டும்.
ஆனால், மேம்பாலத்தில் செல்லும் போது பெரும்பாலானோர், வாகனத்தின் வேகத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில்லை. மின்னல் வேகத்தில்
மேம்பாலத்தில் வாகனங்கள்பறப்பதால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

Saturday 22 September 2012

அனல் மின் நிலைய எதிர்ப்பு உண்ணாவிரதம்: காங்கிரஸ் தலைவர் கோபி முடித்து வைத்தார்


அனல் மின் நிலைய எதிர்ப்பு உண்ணாவிரதம்: காங்கிரஸ் தலைவர் கோபி முடித்து வைத்தார்
திருப்பூர், 
ஊத்துக்குளி வட்டம், வடமுகம் காங்கேயம்பாளையத்தில் தனியார் நிறுவனத்திடன் இணைந்து அரசு அனல்மின் நிலையம் அமைக்க முயற்சி செய்து வருகிறது.
 
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் அனல் மின் நிலைய எதிர்ப்பு குழு சார்பில் பொதுமக்கள், அனைத்து கட்சியினர் கலந்து கொண்ட மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
 
உண்ணாவிரத போராட்டத்துக்கு அனல் மின் நிலைய எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் சின்னசாமி தலைமை தாங்கினார். இந்த நிலையில் திருப்பூர் புறநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கோபி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
 
மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜனிடம் தெரிவித்து அவர்களிடம் பேச்சு நடத்த வைப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களுக்கு ப.கோபி பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.

Wednesday 19 September 2012

திருப்பூர் நாளை வேலை நிறுத்தம் அனைத்து தரப்பினரும் ஆதரவு


திருப்பூர்:டீசல் விலை உயர்வு, காஸ் சிலிண்டர் மானியம் குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் நாளை வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படுகிறது. திருப்பூரில் பனியன் தொழில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் வணிகர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. டீசல் விலை உயர்வு, சில்லறை வர்த்தகத்தில் 51 சதவீத அன்னிய முதலீட்டுக்கு அனுமதி, ஆண்டுக்கு ஆறு காஸ் சிலிண்டர்களுக்கு மட்டும் மானியம் என்ற மத்திய அரசு அறிவிப்பால், தொழில் துறையினரும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.மத்திய அரசின் போக்கை கண்டித்து, நாடு தழுவிய அளவில், நாளை (20ம் தேதி) வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படுகிறது. தமிழகத்திலும், பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. கடந்த ஓராண்டாக, ஓயாத மின்வெட்டு பிரச்னையால், சிக்கித்தவிக்கும் திருப்பூர் தொழில் துறையினரும், டீசல் விலை உயர்வால் அதிர்ச்சியில் உள்ளனர். அதனால், தொழில் துறையினர், தொழிற்சங்கங்கள், வணிகர் சங்கங் கள், பனியன் வர்த்தகர்கள், ஆட்டோ-வேன் ஓட்டுனர்கள் என அனைத்து தரப்பினரும் ஓரணியில் திரண்டு, போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய ஆயத்தமாகி வருகின்றனர்.
பின்னலாடை ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் (டீமா) சங்க தலைவர் முத்துரத்தினம் கூறியதாவது:பின்னலாடை ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு பனியன் உற்பத்தி நிறுவனங்கள், டீசலை பெரிதும் நம்பியுள்ளன. 

மின்வெட்டு அதிகமாக உள்ள நேரங்களில், டீசலை நம்பியே தொழில் நடக்கிறது. மத்திய அரசு,  பின்னலாடை தொழில் துறையினருக்கு மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் அளவுக்கு நிலை மோசமாக உள்ளது.ஆனால், விலையை மீண்டும் உயர்த்தியிருப்பது, பொதுமக்களுக்கும், பனியன் தொழில் துறையினருக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். தொழில் நிலவரத்தை மத்திய அரசுக்கு உணர்த்தி, டீசல் விலையை குறைக்கச் செய்ய வேண்டும். வேலை நிறுத்த போராட்டத்தில் அனைத்து தொழில் துறையினரும் பங்கேற்க வேண்டும், என்றார்.சி.ஐ.டி.யு., பனியன் தொழிற்சங்க மாவட்ட செயலாளர் மூர்த்தி கூறுகையில், ""போராட்டத்துக்கு தேசிய தொழிற்சங்கங்கள் அனைத்தும் ஆதரவு தெரிவித்துள் ளன. திருப்பூரை பொறுத்தவரை, பனியன் தொழிலாளர் கள் அனைவரும் போராட்டத்தில் பங்கேற்பர்; தொழிற் சாலைகள் இயங்காது. ஆட்டோ, வேன் உரிமையாளர்களும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். காதர் பேட்டையில் உள்ள பனியன் கடைகள் உட்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருக்கும்,'' என்றார்.

Monday 17 September 2012

ஊத்துக்குளி பகுதியில் நாளை செப் 18ல் மின் வினியோகம் தடைபடும்


ஊத்துக்குளி பகுதியில் நாளை செப் 18ல் மின் வினியோகம் தடைபடும்.ஊத்துக்குளி உதவி மின்வாரிய செயற்பொறியாளர் ( Kannan Ramasamy )வெளியிட்டுள்ள தகவல் : ஊத்துக்குளி துணை மின் நிலையத்தில் வரும் 17.08.2012 ல் மாதாந்திர மின் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. அன்று காலை 9.00 முதல் மாலை 5.00 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின் வினியோகம் தடைபடும்.


ஊத்துக்குளி டவுன், ஊத்துக்குளி ஆர்.எஸ்., ரெட்டிபாளையம், வி.ஜி.புதூர், தாலிக்கட்டி பாளையம், தள வாய்ப்பாளையம், பி.வி.ஆர்.,பாளையம், சிறுக்களஞ்சி, வரப்பாளையம், பாப்பம்பாளையம், வெங்களப்பாளையம், அணைப்பாளையம், வாய்ப்பாடி, மொரட்டுப் பாளையம், கவுண்டம்பாளையம்.கொடியம்பாளையம், சேடர்பாளையம், எஸ்.பி.என்., பாளையம், வெள்ளியம்பாளையம், கத்தாங்கண்ணி, கோவிந்தம்பாளையம், ஆர்.கே.பாளையம், நடுத்தோட்டம், அருகம்பாளையம், விருமாண்டாம்பாளையம், பழனிக்கவுண்டம்பாளையம், நீலாக்கவுண்டம்பாளையம் மற்றும் செங்கப்பள்ளி ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது

Thursday 13 September 2012

ஆழம் -- 2வது படைப்பு -- டல்லடிக்கும் டாலர் நகரம்,


ஒவ்வொரு வாரத்தின் இறுதி மூன்று நாட்களும் திருப்பூர் நகர போக்குவரத்தில் நாம் நீந்தி தான் வரவேண்டியிருக்கும்.  மூச்சு திணறிவிடும்.  பிபி எகிறிவது போல படிப்படியாக வியாழன் தொடங்கும் சாலை போக்குவரத்து நெரிசல் சனிக்கிழமை அன்று உச்சமாய் இருக்கும்.  ஒவ்வொரு சனிக்கிழமையும் தொழிலாளர்களின் சம்பள தினம். தள்ளுவண்டி கடை முதல் டாஸ்மாக் கடை வரைக்கும் எங்கெங்கும் மனித தலைகளாகவே தெரியும்

Tuesday 11 September 2012

மின்வாரியம் அறிவித்துள்ள எலக்ட்ரீசியன் HALPER பணிக...

TANGEDCO NEWS: மின்வாரியம் அறிவித்துள்ள எலக்ட்ரீசியன் HALPER பணிக...: திருப்பூர் :"மின்வாரியம் அறிவித்துள்ள எலக்ட்ரீசியன் HALPER பணிக்கு பரிந்துரைத்துள்ள பட்டியலை, பதிவுதாரர்கள் நேரில் வந்து உறுதி செய்து கொள்...


Friday 7 September 2012

ஒவ்வொருவரும் சமூக பாதுகாப்புசேவை திட்டத்தில் சேர அறிவுரை


திருப்பூர்: ""ஒவ்வொருவரும் சமூக பாதுகாப்பு சேவை திட்டத்தில் சேர வேண்டும். இதை உறுதிப்படுத்துவதே வைப்பு நிதி திட்டம்,'' என வருங்கால வைப்பு நிதி நிறுவன மாவட்ட செயல்பாட்டு அதிகாரி ஆல்பர்ட் தெரிவித்தார்."சேவ்' அமைப்பு சார்பில் "இளம்பெண் தொழிலாளர் வாழ்நிலை' கருத்தரங்கு, திருப்பூரில் நேற்று நடந்தது. இயக்குனர் அலோசியஸ் தலைமை வகித்தார். திட்ட இயக்குனர் வியாகுலமேரி வரவேற்றார்.
தொழிலாளர் காப்பீடு திட்டம் குறித்து, இ.எஸ்.ஐ., அலுவலக அதிகாரி விஜயகுமார் பேசுகையில், ""தொழிலாளர் அனைவரும் அவசியம் இ.எஸ்.ஐ., திட்டத்தில் சேர வேண்டும். இதன் மூலம் குடும்பத்தில் அனைவருக்கும் இலவச மருத்துவ சிகிச்சை பெற முடியும். சில தனியார் மருத்துவமனைகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால், அங்கும் சிகிச்சை பெறலாம். மாதச்சம்பளம் 15 ஆயிரம் ரூபாய் வரை பெறும் தொழிலாளர் மட்டுமே சேர முடியும். பணியில் இருக்கும்போது தொழிலாளர் இறந்தால், அவரது குடும்பத்துக்கு பென்ஷன் வழங்கப்படும்,'' என்றார்.வருங்கால வைப்பு நிதி திட்டம் பற்றி, மாவட்ட செயல்பாட்டு அலுவலர் ஆல்பர்ட் பேசுகையில், ""தொழிலாளர்கள் ஒவ்வொருவரும் வைப்பு நிதி (பி.எப்.,) அடிப்படை சட்டம் பற்றி தெரிந்திருக்க வேண்டும். கூட்டுக்குடும்பமாக இருந்தபோது, முதியோரை குடும்பத்தில் உள்ளவர்கள் கவனித்து வந்தனர். தனி குடும்பமாக வந்தபின், முதியோரை யார் காப்பது என்ற நிலை உருவாகும். அதனால், சமூக பாதுகாப்பு சேவை திட்டத்தில் நாம் சேர வேண்டும். 
இதை உறுதிப்படுத்துவதே வைப்பு நிதி திட்டம். தொழிலாளியிடம் எவ்வளவு தொகை பிடித்தம் செய்யப் படுகிறதோ, அதே அளவு தொகையை கம்பெனியும் செலுத்தும். தொடர்ந்து ஏழு ஆண்டுகள் பணம் செலுத்திய பிறகு, உங்கள் கணக்கில் உள்ள தொகையை கடனாகவும், படிப்பு செலவுக்கும், மருத்துவ செலவுக்கும் எடுக்கலாம். இதில் சேர்ந்த ஒருவர், பணி காலத்தில் இறந்தால், அவரது குடும்பத்துக்கு பென்ஷன் 
வழங்கப்படும். மருத்துவ சிகிச்சை பெற இன்சூரன்ஸ் திட்டமும் உள்ளது. ஒவ்வொரு தொழிலாளியும் பி.எப்., திட்டத்தில் சேர வேண்டும்,'' என்றார்.தொழிலாளர் நலச்சட்டம் பற்றி தொழிலாளர் அலுவலர் பழனிச்சாமி பேசினார். குறும்பட இயக்குனர் ஜோபிரகாஷ் எடுத்த "நல்லதோர் வீணை செய்தே' என்ற குறும்பட தகடு வெளியிடப்பட்டது. "சேவ்' கள ஒருங்கிணைப்பாளர் பரிமளச்செல்வி நன்றி கூறினார்.

திருப்பூர் மாவட்டத்தில் விளைநிலங்கள் வழியாக, காஸ் குழாய் பதிக்கும் பணிக்கு அனுமதி வழங்க முடியாது,


திருப்பூர் மாவட்டத்தில் விளைநிலங்கள் வழியாக, காஸ் குழாய் பதிக்கும் பணிக்கு அனுமதி வழங்க முடியாது,' என, திருப்பூரில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகள் ஆவேசமாகத் தெரிவித்தனர்.கொச்சின் - பெங்களூரு இடையே காஸ் குழாய் பதிக்கும் திட்டத்தில், விளை நிலங்கள் வழியாக கொண்டு செல்வதற்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருப்பூர் மாவட்ட விவசாயிகளுடன் கலெக்டர் மற்றும் உயரதிகாரிகள் தலைமையில் பல சுற்று ஆலோசனை கூட்டங்கள் நடந்துள்ளன. இதுவரை தீர்வு ஏற்படவில்லை.கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் மதிவாணன் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., கஜலட்சுமி முன்னிலை வகித்தார். "கெய்ல்' நிறுவனம் சார்பில் மூத்த திட்ட மேலாளர் அங்கமுத்து, திட்டம் குறித்து விளக்கினார். விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்பு குழு அளித்த மனுவுக்கு, மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டி எழுதிய பதில் வாசிக்கப்பட்டு, அதன் நகல் வினியோகிக்கப்பட்டது.அதில், "குழாய் பதிப்பால் விவசாயம் பாதிக்கப்படாது;

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா?: பஸ் டிக்கெட்டுக்கு முன்பதிவு துவக்கம்

திருப்பூர்: "தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல விரும்புவோர், விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் பயணிக்க, இன்று முதல் டிக்கெட் "ரிசர்வேஷன்' செய்து கொள்ளலாம்,' என, போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.நடப்பாண்டு நவ., 13ல் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. வெளிமாவட்டங்களில் இருந்து வந்து தங்கியுள்ள பலர், குடும்பத்துடன் சொந்த ஊர் செல்வர். கூட்ட நெரிசலை தவிர்க்க, பண்டிகையை ஒட்டி, சிறப்பு பஸ்களை அரசு போக்குவரத்து கழகம் இயக்குவது வழக்கம். இதற்கான அறிவிப்பு, அக்., இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும்.அதற்கு முன், விரைவு போக்குவரத்து கழக பஸ்களுக்கான டிக்கெட் "புக்கிங்' இன்று துவங்குகிறது. திருப்பூரில் இருந்து சென்னை, திருச்செந்தூர், வேளாங்கன்னி, நாகர்கோவில், ராமேஸ்வரம், ராஜபாளையம், கும்பகோணம், அறந்தாங்கி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் விரைவு பஸ்களில் பயணிப்பதற்கான "ரிசர்வேஷன்' டிக்கெட்டுகளை, http://www.tnstc.in/TNSTCOnline/  என்ற இணைய தளத்தில் "புக்' செய்யலாம்.போக்குவரத்து துறையினர் கூறியதாவது:இணைய தளத்தில் பயணியின் பெயர், முகவரி, வயது உள்ளிட்ட விவரங்கள் பதிவு செய்ய வேண்டும். டிக்கெட் இருக்கை நிலை உடனடியாக தெரியும். பஸ் புறப்படும் நேரம், சேரும் நேரம், பஸ் எண், குளிர்சாதன வசதியுள்ளதா; சாதாரண பஸ்சா என்பது குறித்த விவரங்களும் இணைய தளத்தில் இடம் பெற்றிருக்கும், என்றனர். 

Thursday 6 September 2012

பல்லடம் அருகே மின் கம்பியில் உரசி தீ விபத்து: ரூ.4 லட்சம் பஞ்சு-வேன் எரிந்து நாசம்


பல்லடம் அருகே மின் கம்பியில் உரசி தீ விபத்து: ரூ.4 லட்சம் பஞ்சு-வேன் எரிந்து நாசம்
பல்லடம், செப். 6-

திருப்பூர் மங்கலத்தில் இருந்து ஒரு வேன் பஞ்சு  லோடு ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. வேனை டிரைவர் ரமேஷ் (வயது 29)  ஓட்டி வந்தார். மாணிக்காபுரத்தில் வேன் வந்த போது எதிர்பாராதவிதமாக மின் கம்பியில் உரசியது. இதில் வேனில் ஏற்றப்பட்டிருந்த பஞ்சு லோடில் தீப்பிடித்தது. தீ மளமளவென கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.

பல்லடம் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.  தீயில் வேனும், அதில் ஏற்றி வந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள பஞ்சு லோடும் எரிந்து நாசமானது.

இது குறித்து பல்லடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Sunday 2 September 2012

10 ஆயிரம் லஞ்சம் : திருப்பூர் மாநகராட்சி அதிகாரி கைது


திருப்பூர் மாநகராட்சியில், கட்டட பிரிவு உதவி பொறியாளராக பணியாற்றி வருபவர் ராமலிங்கம் 43; மூன்றாவது மண்டலத்தில் பணியாற்றி வந்தார். நல்லூர் ஜெய் நகரை சேர்ந்த லோகநதான் என்பவர், தனது கட்டடத்துக்கு அனுமதி கோரி, கடந்த 13ம் தேதி விண்ணப்பித்திருந்தார்.

இருப்பினும், கட்டட அனுமதி வழங்க 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டுமென, உதவி பொறியாளர் ராமலிங்கம் வற்புறுத்தியுள்ளார். இதுகுறித்து, லோகநாதன் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் வழிகாட்டுதல்படி, தாராபுரம் ரோட்டில் உள்ள உதவி பொறியாளர் அலுவலகத்துக்கு லோகநாதன் பணத்துடன் சென்றுள்ளார்.

 உதவி பொறியாளர் ராமலிங்கம் இல்லாததால், மொபைல்போனில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். மண்ணரையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும், அங்கு வந்து பணத்தை கொடுக்குமாறும் அழைத்துள்ளார்.

அதன்பின், லஞ்ச ஒழிப்பு போலீசாருடன் மண்ணரை சென்ற லோகநாதன், அங்குள்ள சிறிய சந்தில் வைத்து பணம் 10 ஆயிரம் ரூபாயை கொடுத்துள்ளார். உதவி பொறியாளர், அப்பணத்தை வாங்கி பேண்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டார். பணத்தை கொடுத்துவிட்டதாக "சைகை' செய்ததும், லஞ்ச ஒழிப்பு போலீசார், உதவி பொறியாளரை கையும், களவுமாக பிடித்தனர்.

தாராபுரம் ரோட்டில் உள்ள பொறியாளர் அலுவலகத்தில் வைத்து விசாரித்தனர். விசாரணையில், ராமலிங்கம் தவறை ஒப்புக்கொண்டார்.

நேர்மைக்கு கிடைத்த பரிசு? திருப்பூர் எஸ்.பி., திடீர் மாற்றம்


திருப்பூர் மாவட்டத்தில் அதிரடியாக செயல்பட்ட எஸ்.பி., ஆஸ்ரா கர்க், தர்மபுரிக்கு மாற்றப்பட்டார்.திருப்பூர் எஸ்.பி.,யாக ஆஸ்ரா கர்க், கடந்த ஜூன்.,4 ல் பொறுப்பேற்றார். அன்று முதல், தனது அதிரடி நடவடிக்கைகளால் மக்களிடம் நற்பெயர் பெற்றார். மக்களிடம் நேரடியாக குறை கேட்ட ஆஸ்ரா கர்க், உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொண்டார். இந்நிலையில், மூன்றே மாதத்தில் திடீரென தர்மபுரிக்கு நேற்று மாற்றப்பட்டார். தர்மபுரியில் பணியாற்றிய அமித்குமாரசிங் திருப்பூர் எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

குவாரி, செங்கல் சூளைகளில் திருப்பூர் எஸ்.பி., திடீர் சோதனை


உடுமலை வருவாய் கோட்டத்தில் இயங்கி வரும் குவாரிகள் மற்றும் செங்கல் சூளைகளில், திருப்பூர் எஸ்.பி., தலைமையிலான போலீசார், நேற்று திடீர் சோதனை நடத்தினர்.உடுமலை வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட உடுமலை, மடத்துக்குளம் தாலுகா பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள்; 10க்கும் அதிகமான குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. கனிம வள விதிகளை மீறி மண் எடுப்பதாகவும், பாறைகள் தகர்க்கப்படுவதாகவும், புகார் உள்ளது.

இந்நிலையில், குவாரி மற்றும் செங்கல் சூளைகளில், திருப்பூர் எஸ்.பி., ஆஸ்ரா கர்க் தலைமையிலான போலீசார், நேற்று மாலை திடீர் சோதனை நடத்தினர். விதிகளுக்கு உட்பட்டு பணிகள் நடைபெறுகிறதா, என ஆய்வு நடத்தப்பட்டதாக, கூறப்படுகிறது. பின்னர், உடுமலை தாலுகா அலுவலகத்தில், எஸ்.பி., மற்றும் வருவாய் கோட்டாட்சியர் லதா பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி போலீஸ் மற்றும் வருவாய்துறை தரப்பில், எவ்வித தகவலும் அளிக்கப்படவில்லை.

திருப்பூர் போலீஸ் சூப்பிரண்டு மாற்றம்: புதிய போலீஸ் சூப்பிரண்டாக அமித் குமாரசிங்


திருப்பூர் போலீஸ் சூப்பிரண்டு மாற்றம்: புதிய போலீஸ் சூப்பிரண்டாக அமித் குமாரசிங்
திருப்பூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஆஸ்ரா கர்க், தர்மபுரிக்கு மாற்றப்பட்டார். திருப்பூருக்கு புதிய போலீஸ் சூப்பிரண்டாக அமித் குமாரசிங் நியமிக்கப்பட்டு உள்ளார்.

இவர் 2003ம் ஆண்டில் ஐ.பி.எஸ்., முடித்தவர். தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் பணியாற்றியபின் தர்மபுரி போலீஸ் சூப்பிரண்டாக உள்ளார். 

அமித் குமார சிங் கூறுகையில், சட்டம் மற்றும் ஓழுங்கு பராமரிப்பு, குற்றத்தடுப்பு என அனைத்து கோணத்திலும் தனிக்கவனம் செலுத்தப்படும் என்றார்.

Thursday 30 August 2012

ஊத்துக்குளி அருகே தனியார் அனல் மின் உற்பத்தி நிலையம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு

திருப்பூர் கலெக்டர் தலைமையில் நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், அக்கூட்டத்தை புறக்கணித்த சம்பவம் அங்கு பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே தனியார் அனல் மின் உற்பத்தி நிலையம் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, மக்களின் கருத்துகளை அறியும் வண்ணம், கலெக்டர் தலைமையிலான கருத்துகேட்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த அனல்மின் நிலையத்தால், தாங்கள் மேற்கொண்டுள்ள விவசாயம் பாதிக்கப்படும் என்றும், இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள், இந்த கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதைப் புறக்கணித்துள்ளன.

Tuesday 28 August 2012

ஊத்துக்குளி சிறு குவாரி உரிமையாளர் முறையீடு


திருப்பூர்:"அம்மிக்கல், ஆட்டுக்கல் தயாரிக்கும் குவாரிகளுக்கு குடிசைத் தொழில் அங்கீகாரம் வழங்க வேண்டும்,' என, சிறு குவாரி உரிமையாளர்கள் முறையிட்டுள்ளனர்.ஊத்துக்குளி, மொரட்டுப்பாளையம் பகுதியில் சேடர் பாளையம், தொட்டியவளவு, சப்பட்ட நாயக்கன்பாளை யம், திம்மநாயக்கன்பாளையம் ஆகிய ஊர்களிலும், ஏ.பெரியபாளையம் பகுதியில், வெள்ளியம்பாளை யம், கோவிந்தம்பாளையம், நல்லகட்டிபாளையம், ஊனாங்காட்டுப்பாளையம், பெத்தாம்பாளையம் ஆகிய ஊர்களிலும், சிறு கல் குவாரிகள் ஏராளமாக உள்ளன. இங்கிருந்து கற்களை வெட்டியெடுத்து அம்மிக்கல், ஆட்டுக் கல், கிரைண்டர்களுக்கு கல் தயாரித்து விற்கப்படுகிறது.
அண்மையில், மதுரை பகுதியில் குவாரிகள் மூலம் நடந்த ஊழல்கள் மற்றும் விதிமீறல்கள் குறித்த பிரச்னையை தொடர்ந்து, திருப்பூரிலும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வு நடத்திய அதிகாரிகள், "முறையாக உரிமம் மற்றும் பெர்மிட் பெற்ற பின்பே கல் எடுக்க வேண்டும்,' என, அறிவுறுத்தியுள்ளனர். இதனால், கடந்த 10 நாட்களாக கல் எடுப்பது நிறுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியை சேர்ந்த சிறு குவாரி உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள், ஊராட்சி தலைவர்கள் தலைமையில் கலெக்டர் அலு வல கம் வந்தனர். "இத்தொழிலுக்கு குடிசை தொழில் அங்கீ காரம் பெற, ஆண்டுதோறும் குறிப்பிட்ட தொகையை அரசுக்கு செலுத்தி உரிமம் பெற தயாராக உள்ளோம்,' என, கலெக்டர் அலுவலகம் மற்றும் கனிம வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகங்களில் மனு அளித்தனர்

Saturday 25 August 2012

திருப்பூர் தாலுகாவை இரண்டாக பிரிக்க கருத்துரு சமர்ப்பிப்பு உதயமாகிறது


திருப்பூர்:நிர்வாக வசதிக்காக, திருப்பூர் தாலுகாவை இரண்டாக பிரிப்பதற்கான கருத்துரு, மாவட்ட நிர்வாகம் மூலம் அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வேலம்பாளையம், நல்லூர் பிர்க்காக்கள் உதயமாக உள்ளன.திருப்பூர் மாநகராட்சி, திருப்பூர் ஒன்றியம், பொங்கலூர் ஒன்றியத்தின் சில பகுதிகளை உள்ளடக்கியதாக திருப்பூர் தாலுகா அமைந்துள்ளது. பெருகி வரும் மக்கள் தொகை, வளர்ந்து வரும் தொழிற்சாலைகள், பரவலாகி வரும் குடியிருப்புகள், அதிகரித்து வரும் வாகன போக்குவரத்து, மாநகராட்சி மற்றும் மாவட்ட அந்தஸ்துக்கு உயர்ந்த நிலை என பல தரப்பிலும், இதன் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Friday 24 August 2012

கரண்ட் எப்ப சார் கொடுப்பீங்க...? டெய்லி 10 மணி நேர பவர்கட்: திகைத்து நிற்கும் திருப்பூர்!

திருப்பூர்: தமிழக மக்களுக்கு பவர்கட் என்பது பழகிப்போய்விட்டாலும் அடுத்தடுத்து ஏற்படும் அறிவிக்கப்படாத மின்வெட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூரிய உதயத்திற்கு முன் எழவேண்டும் என்ற வார்த்தைகளை பின்பற்றினார்களோ இல்லையோ 6 மணிக்கு கரண்டு போகும் முன் எழுந்து மிக்சியில் அரைக்க வேண்டியதை அரைத்து வைத்துவிட வேண்டும் என்பதற்காக 5 மணியில் இருந்து வேலையை செய்பவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.

குழந்தைகளுக்கு ஆபத்து வதந்தி பரவல் ;முச்சந்தியில் தேங்காய் உடைத்து பரிகாரம்


திருப்பூர்: பிறந்த குழந்தை பேசியதாகவும், குழந்தைகள் உயிருக்கு ஆபத்து என வதந்தி பரவியதாலும் தமிழகத்தில் பலரும் தங்களுடைய குழந்தைக்கு தலையை சுற்றி தேங்காய் உடைத்தனர். இதனால் தேங்கி கிடந்த தேங்காய்க்கு மவுசு ஏற்பட்டதுடன் சில மாவட்டங்களில் தேங்காய் தட்டுப்பாடும் ஏற்பட்டது.

தர்ம்புரி, கிருஷ்ணகிரி, அரியலூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பல் முளைத்த பிறந்த குழந்தை பேசியது என்பது தான் அந்த செய்தி :

Friday 17 August 2012

ஊத்துக்குளி அருகே கல்குவாரியில் அனுமதியின்றி கல் எடுத்த வாகனங்கள் பிடிப்பு



திருப்பூர் : ஊத்துக்குளி அருகே அனுமதியின்றி குவாரியில் கல், மண் எடுத்துச் சென்ற லாரிகள், டிராக்டர், பொக்லைன் இயந்திரம், கம்பரசர் ஆகிய ஆறு வாகனங்களை, கனிம வளத்துறையினர் நேற்று பிடித்தனர். சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க ஆர்.டி.ஓ.,க்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ஊத்துக்குளி அருகே முரட்டுப்பாளையத்தில் குவாரிகள் அதிகளவில் உள்ளன. இங்கிருந்து "பெர்மிட்' இல்லாமல் கனிம வளமான கற்கள், மண் ஆகியவை லாரிகளில் கடத்துவதாக, கனிம வளத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, கனிம வளத்துறை உதவி இயக்குனர் முருகானந்தம் தலை மையில் பணியாளர்கள், முரட்டுப்பாளையம் பகுதியில் ஆய்வு செய்தனர்."பெர்மிட்' இல்லாமல், கற்களை எடுத்து வந்த மூன்று லாரிகள், மண் எடுத்து வந்த டிராக்டர், கற்களை லாரியில் லோடு செய்ய பயன்படுத்திய பொக்லைன் இயந்திரம், வெடிவைக்க துளை போட்ட கம்பரசர் டிராக்டர் என ஆறு வாகனங்களை பிடித்தனர். இவ்வாகனங்கள், ஊத்துக்குளி ஆர்.எஸ்., வி.ஏ.ஓ., அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க, கனிம வளத்துறை உதவி இயக்குனர், ஆர்.டி.ஓ.,க்கு பரிந்துரை செய்துள்ளார். முரட்டுப்பாளையம், அதை சுற்றியுள்ள பகுதிகளில் கனிம வளத்துறையினர் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

ஈமுவை தொடர்ந்து புது மோசடி அம்பலம் :செல்லமுத்து எச்சரிக்கை


பல்லடம் : ""ஈமுவை போல் தற்போது விவசாயிகளிடம் தேங்காய் மோசடி செய்வதில் சில நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இவ்விஷயத்தில் விவசாயிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்,'' என, உழவர் உழைப்பாளர் கட்சி மாநில தலைவர் செல்லமுத்து எச்சரிக்கை செய்துள்ளார். பல்லடத்தில் நிருபர்களிடம் செல்லமுத்து அளித்த பேட்டி:

சிவன்மலை கோவிலில் தண்ணீர் வைத்து பூஜை: பருவமழை மீண்டும் கை கொடுக்குமா?


காங்கேயம்: சிவன்மலை சுப்பிரமணிய ஸ்வாமி கோவில், "ஆண்டவன் உத்தரவு' பெட்டியில், பக்தர் கனவில் தண்ணீர் வைக்க உத்தரவு வந்ததால், சொம்பில் தண்ணீர் வைக்கப்பட்டது. இதனால், பருவமழை மீண்டும் கை கொடுக்கும் என, பக்தர்கள் நம்புகின்றனர்.

திருப்பூர் உள்ளூர் சேனலில் பல லட்சம் ரூபாய் நிலுவை :வசூல் செய்ய முடியாமல் அரசு கேபிள் திணறல்


திருப்பூர் : உள்ளூர் சேனல் ஒளிபரப்பு செய்த வகையில், பல லட்சம் ரூபாய் அரசு கேபிள் "டிவி' கார்ப்பரேஷனுக்கு நிலுவை உள்ளது. அத்தொகையை வசூலிக்கும் வழி தெரியாமல் அந்நிறுவனம் திணறுகிறது.அரசு கேபிள் கார்ப்பரேஷன் மூலம் கடந்தாண்டு அக்., முதல் கேபிள் இணைப்புகள் வழங்கப்பட்டன. உள்ளூரில் கேபிள் சேனல்கள் ஒளிபரப்பு செய்ய சில நிறுவனங்கள் முன் வந்தன. அரசு வழங்கிய சாட்டிலைட் சேனல்கள் தவிர பகுதி வாரியாக 4 முதல் 10 தனியார் உள்ளூர் சேனல்களுக்கு ஒளிபரப்பு செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் கடந்தாண்டு உள்ளூர் சேனல் ஒளிபரப்பு அனுமதிக்கப்பட்ட போது 7 சேனல்கள் ஒளிபரப்பை துவக்கின. கேபிள் கார்ப்பரேஷன் தலைவர் ராதாகிருஷ்ணன், அமைச்சர் ஆனந்தன், எம்.பி., சிவசாமி ஆகியோர் தங்களது ஆதரவாளர்களின் பெயர்களில் சில சேனல்களை துவக்கினர்.

TANGEDCO NEWS: டிரான்ஸ்பார்மரில் ஏறியவர் மின்சாரம் தாக்கி பலி

TANGEDCO NEWS: டிரான்ஸ்பார்மரில் ஏறியவர் மின்சாரம் தாக்கி பலி: திருப்பூர் : "பியூஸ்' போட, டிரான்ஸ்பார்மரில் ஏறிய ஒருவர், மின்சாரம் தாக்கி இறந்தார்.திருப்பூர், பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ளது பவானி...

Wednesday 15 August 2012

பாறைக்குழியால் குழந்தைகளுக்கு ஆபத்து

திருப்பூர் அருகே கொளத்துப்பாளையம் ரோட்டின் ஓரத்தில் பெரிய பாறைக்குழி உள்ளது. இவ்வழியாக 10க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்கள் செல்வதால், மாணவர்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இக்குழியை மூட, நடவடிக்கை எடுக்கும்படி, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் கொளத்துப்பாளையம் பிரிவு ரோடு உள்ளது. அங்கிருந்து பாரப்பாளையம் செல்லும் வழியில், பெரியபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பொட்டிலி தோட்டத்தில், பெரிய பாறைக்குழி உள்ளது. இந்த ரோட்டின் வழியாக, அரசு டவுன் பஸ் ஆறுமுறையும், மினி பஸ் நான்கு முறையும், 10க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்களும், லாரிகளும் வந்து செல்கின்றன. ரோட்டின் ஓரத்திலேயே பாறைக்குழி இருப்பதால், வாகன விபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம், இப்பகுதி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.பொட்டிலி தோட்டம் பகுதி மக்கள் கூறியதாவது:
பாறைக்குழி உள்ள ரோட்டின் வழியாக காலையிலும், மாலையிலும் பள்ளி வாகனங்கள் வந்து செல்கின்றன. காலை நேரத்தில் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு, பள்ளி துவங்கும் முன் செல்ல வேண்டும் என்று டிரைவர்கள் வேகமாக ஓட்டிச் செல்கின்றனர். ரோட்டிலிருந்து மூன்றடியில் 20 அடி ஆழமுள்ள பெரிய பாறைக்குழி உள்ளது.
எவ்வித பாதுகாப்பு தடுப்பும் இல்லை. பொட்டிலி தோட்டத்தில் இருந்து, ஊத்துக்குளி மெயின் ரோட் டுக்கு வரும் வழியில் உள்ள வளைவில், வாகனத்தை திருப்பத் தவறினால், நேராக பாறைக்குழிக்குள் விழக்கூடிய வகையில் உள்ளது. வேகமாகச் செல்லும் பள்ளி வாகனங்களும், பஸ்களும், ஒவ்வொரு முறையும் இப்பாறைக்குழியை கடந்து செல்லும் வரை, எங்களுக்கு நிம்மதி இருக்காது.ஆட்களை வேலைக்கு அழைத்துச் செல்லும் வாகனங்கள், இரவில் இவ்வழியாக அசுர வேகத்தில் செல்கின் றன. பாறைக்குழியால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் பெரியபாளையம் ஊராட்சி நிர்வாகம் முயற்சி எடுத்து, பாறைக்குழியை மூட ஏற்பாடு செய்ய வேண்டும், என்றனர்.

தானியங்கி சேவை மையம் மூலம் கட்டணம் செலுத்த வரவேற்பு

                       திருப்பூரில் தானியங்கி சேவை மையம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் திட்டம் வரவேற்பை பெற்றுள்ளது. மாதந்தோறும் 20 ஆயிரம் பேர், அம்மையம் மூலம் மின் கட்டணம் செலுத்துகின்றனர். அதன் காரணமாக, மாவட்டம் முழுவதும் இத்திட்டத்தை விரிவுபடுத்தவும், கூடுதலாக இயந்திரங்கள் நிறுவவும் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

TANGEDCO NEWS: (ஒவ்வொரு மின் நுகர்வோரும் அவசியம் படிக்க வேண்டியது...

TANGEDCO NEWS: (ஒவ்வொரு மின் நுகர்வோரும் அவசியம் படிக்க வேண்டியது...: மின்வாரிய சேவைத்துறையை சந்தைக் காடாக்குவதா? (தீக்கதிரில் எஸ்.யஸ்.சுப்பிரமணியன்) தமிழக மின் வாரியத்தை பற்றி நாள் தோறும் செய்திகள் வந்த வ...

Tuesday 14 August 2012

மின்னுற்பத்தி குறைவால் மீண்டும் மின்வெட்டு அவதி : காற்று வீசாததால் ஓய்வெடுக்கும் காற்றாலைகள்

திருப்பூர் : காற்றாலை மின்னுற்பத்தி, மூன்றில் இரண்டு பங்கு குறைந்ததால், திருப்பூர் மாவட்டத்தில் மீண்டும் மின்வெட்டு துவங்கியுள்ளது. மின்வெட்டு நேரமும், மின் விடுமுறை நாளும், அதிகாரப்பூர்வமாக அறிவிக்க திட்ட
மிடப்பட உள்ளது. அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால், தொழில் துறையினரும், பொது மக்களும் அவதிப்படுகின்றனர்.திருப்பூர் மின்பகிர்மான வட்டத்தில், உயர் மின்னழுத்த இணைப்பு தொழிற்சாலைகள், பனியன், விசைத்தறி தொழில் நிறுவனங்கள், வணிக மின் இணைப்புகள், வீட்டு மின் இணைப்புகள் என 5.72 லட்சம் இணைப்புகள் உள்ளன. தினமும் 7.2 மில்லியன் யூனிட் மின்சாரம் தேவைப்படுகிறது.தமிழகம் முழுவதும் ஏற்பட்ட மின் பற்றாக்குறை காரணமாக, நான்கு மாதங்களுக்கு முன்பு வரை, நான்கு மணி நேரம் அறிவிக்கப்பட்ட மின்வெட்டும், அறிவிக்கப்படாத மின்வெட்டு பல மணி நேரமும் ஏற்பட்டது. தொழில் நகரமான திருப்பூர், இதனால் கடுமையாக பாதித்தது. பனியன் உற்பத்தி பாதிப்பு; ஏற்றுமதி தொழில் பாதிப்பு; தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு குறைவு; தொழில் முடக்கம் என பல்வேறு பிரச்னைகளை சந்தித்தது. மின்வெட்டு மட்டுமின்றி, தொழிற்சாலைகளுக்கு வாரத்துக்கு இரு நாட்கள் மின் விடுமுறையும் அறிவிக்கப்பட்டது.

Saturday 11 August 2012

திருப்பூர் :ரயிலில் விழுந்து இறப்பவர்கள் யார்?திணறும் ரயில்வே போலீசார்


 ரயிலில் விழுந்து இறப்பவர்கள் யார் என்று தெரியாத சூழலில், விசாரணை நடத்துவதற்கு, சென்னையில் பின்பற்றுவதுபோல், திருப்பூரில் தனிக்குழு ஏற்படுத்த வேண்டும்.ரயில் முன் விழுந்து தற்கொலை, வாகனங்கள் மீது மோதல், கால்நடைகள் மீது மோதல் போன்ற காரணங்களுக்காக ரயிலை நிறுத்த வேண்டிய அவசியமில்லை. ஆனால், அத்தகைய விபத்தின்போது ரயிலுக்கு பாதிப்பு ஏற்படும் என்றால் நிறுத்திக் கொள்ளலாம். இத்தகைய விதிமுறைகளாலும், பின்னால் வரும் ரயில்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காகவும், தனி நபர் தற்கொலைகளின்போது ரயிலை நிறுத்துவதில்லை.திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் சரகத்தில் வஞ்சிபாளையம், முதல் மற்றும் இரண்டாவது ரயில்வே கேட், மண்ணரை, கூலிபாளையம், ஊத்துக்குளி பகுதி ரயில்வே டிராக்கில் விழுந்து பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்தாண்டு துவக்கம் முதல் கடந்த வாரம் வரை 76 பேர் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்துள்ளனர். இறந்தவர் அணிந்திருந்த ஆடையில், முகவரி மற்றும் உறவினர்களை பற்றிய விவரம் இருந்தால், தகவல் சொல்வதற்கு உதவியாக இருக்கிறது.வயதானவர், மனநலம் பாதிக்கப்பட்டவர் தற்கொலை செய்து கொள்ளும்போது அவர் யார்; எந்த ஊர்; என்ன காரணத்துக்காக தற்கொலை செய்து கொண்டனர் என போலீசார் தீவிரமாக விசாரிக்க வேண்டியுள்ளது. பிரேத பரிசோதனை முடிந்த பின்பும் உறவினர்கள் யாரும் தேடி வராமல் இருந்தால், பிரேதத்தை அடக்கம் செய்ய தனியார் தொண்டு நிறுவனத்தை நாட வேண்டியுள்ளது. இறந்தவர் பெயரில் சந்தேகம், உடலில் வெட்டு காயங்கள் இருந்தால் என்.ஜி.ஓ.,க்களும் அடக்க செய்ய முன்வருவதில்லை. ரயில்வே போலீசார் செய்வதறியாது திகைக்கின்றனர்.சென்னையை பின்பற்றலாமே!சென்னையில் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொள்பவர் எண்ணிக்கை ஏராளம். இறந்தவர் யார் என்பதை கண்டுபிடிக்க உள்ளூர் பிரதிநிதி, போலீஸ் அதிகாரி ஒருவர், என்.ஜி.ஓ., ஒருவர், ரயில்வே போலீஸ் பணியில் உள்ள மூத்த அதிகாரி உள்ளிட்டோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இறந்தவர் பற்றிய விவரம் கிடைக்கவில்லையெனில், அப்பகுதியில் உள்ள மக்களிடம் அக்குழு விசாரணை நடத்தும். உறவினர்கள் இருந்தால் பிரேதம் ஒப்படைக்கப்படும். இதேபோல், திருப்பூரிலும் குழு அமைத்தால் ரயில்வே போலீசாரின் தலைவலி தீரும்.

Friday 10 August 2012

ஊத்துக்குளி பகுதியில் வரும் 17ல் மின் வினியோகம் தடைபடும்

ஊத்துக்குளி பகுதியில் வரும் 17ல் மின் வினியோகம் தடைபடும்.ஊத்துக்குளி உதவி மின்வாரிய செயற்பொறியாளர் ( Kannan Ramasamy )வெளியிட்டுள்ள தகவல் : ஊத்துக்குளி துணை மின் நிலையத்தில் வரும் 17.08.2012 ல் மாதாந்திர மின் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. அன்று காலை 9.00 முதல் மாலை 5.00 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின் வினியோகம் தடைபடும்.


ஊத்துக்குளி டவுன், ஊத்துக்குளி ஆர்.எஸ்., ரெட்டிபாளையம், வி.ஜி.புதூர், தாலிக்கட்டி பாளையம், தள வாய்ப்பாளையம், பி.வி.ஆர்.,பாளையம், சிறுக்களஞ்சி, வரப்பாளையம், பாப்பம்பாளையம், வெங்களப்பாளையம், அணைப்பாளையம், வாய்ப்பாடி, மொரட்டுப் பாளையம், கவுண்டம்பாளையம்.கொடியம்பாளையம், சேடர்பாளையம், எஸ்.பி.என்., பாளையம், வெள்ளியம்பாளையம், கத்தாங்கண்ணி, கோவிந்தம்பாளையம், ஆர்.கே.பாளையம், நடுத்தோட்டம், அருகம்பாளையம், விருமாண்டாம்பாளையம், பழனிக்கவுண்டம்பாளையம், நீலாக்கவுண்டம்பாளையம் மற்றும் செங்கப்பள்ளி ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது

கேபிள் "டிவி' ஆபரேட்டர்களுக்கு கிடுக்கிப்பிடி : இணைப்புகளை சமர்ப்பிக்க உத்தரவுகேபிள் "டிவி' ஆபரேட்டர்களுக்கு கிடுக்கிப்பிடி : இணைப்புகளை சமர்ப்பிக்க உத்தரவு


திருப்பூர் : "அரசு கேபிள் "டிவி' கார்ப்பரேஷனில் இணைப்பு பெற்றுள்ள கேபிள் ஆபரேட்டர்கள், இணைப்பு எண்ணிக்கையை முறையாக சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில், பகுதி வாரியாக வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கப்படும்,' என, அரசு கேபிள் "டிவி' நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.தமிழகத்தில் அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், முந்தைய தி.மு.க., ஆட்சி காலத்தில் கிடப்பில் போடப்பட்ட அரசு கேபிள் "டிவி' நிறுவனத்துக்கு புத்துயிர் அளிக்கப்பட்டது. மாவட்டம்தோறும் கேபிள் "டிவி' கட்டுப்பாட்டு அறைகள் முழு வீச்சில் துவங்கப்பட்டு, கேபிள் ஆபரேட்டர்களுக்கு இணைப்பு வழங்கப்பட்டது.முதல்கட்டமாக, 100 சேனல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டன.

Wednesday 8 August 2012

திருப்பூர் மாவட்டத்தில் 51 பள்ளி, கல்லூரி வாகன தகுதிச்சான்று ரத்து


திருப்பூர் மாவட்டத்தில் 51 பள்ளி, கல்லூரி வாகன தகுதிச்சான்று ரத்து
திருப்பூர் மாவட்டம் முழுவதும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களில் சோதனை முடிந்து விட்டது. திருப்பூர் வடக்கு மற்றும் அவினாசி பகுதிகளில் வட்டார போக்குவரத்து அதிகாரி வெங்கட்ரமணி தலைமையில் சோதனை நடந்தது. இதில் 380 பள்ளி வாகனங்கள், 83 கல்லூரி வாகனங்களை சோதனையிட்டதில் 22 பள்ளி வாகனங்கள், 10 கல்லூரி வாகனங்கள் என்று 32 வாகனங்களின் தகுதிச்சான்று ரத்து செய்யப்பட்டது. 

129 வாகனங்களில் உள்ள சிறு, சிறு குறைகளை நிவர்த்தி செய்ய நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது. இதேபோல் திருப்பூர் தெற்கு, பல்லடம் பகுதியில் வட்டார போக்குவரத்து அதிகாரி சத்யநாராயணன் தலைமையில் நடந்த சோதனையில் 223 பள்ளி வாகனங்கள், 19 கல்லூரி வாகனங்கள் என்று 242 வாகனங்கள் சோதனையிடப்பட்டது. இதில் 8 வாகனங்களின் தகுதிச்சான்று ரத்து செய்யப்பட்டது. இதில் 2 வாகனங்களை தகுதி இழப்பு செய்து அந்த வாகனங்களை ஓட்டக்கூடாது என்று நிறுத்தப்பட்டு உள்ளது. 

44 வாகனங்களில் உள்ள சிறு குறை களை நிவர்த்தி செய்ய நோட்டீசு வினியோகம் செய்தனர். இதில் 20 வாகனங்களில் பழுது நீக்கப்பட்டு போக்கு வரத்து அதிகாரிகளிடம் காண்பித்து ஓட்டுவதற்கு அனுமதி பெற்றனர். தாராபுரம் மற்றும் உடுமலை பகுதியில் வட்டார போக்குவரத்து அதிகாரி உதயகுமார் தலைமையில் நடந்த சோதனையில் 112 பள்ளி வாகனங்கள், 17 கல்லூரி வாகனங்கள் என்று 129 வாகனங்கள் சோதனையிடப்பட்டது. இதில் 11 வாகனங்களின் தகுதிச்சான்று ரத்து செய்யப்பட்டு உள்ளது. 

தகுதிச்சான்று ரத்து செய்யப்பட்ட வாகனங்களில் உள்ள பழுதுகளை சீரமைத்து அதன் பின்னர் வட்டார போக்குவரத்து அதிகாரியின் அனுமதியை வாங்கிய பிறகே இயக் குவதற்கு அனுமதி வழங்கப்படும் என்று வட்டார போக்கு வரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்

ஊத்துக்குளியில் மாவட்ட கவுன்சிலர் காரை திருடியவர் கைது


திருப்பூர், : ஊத்துக்குளி திம்மநாயக்கன்பாளையத்தில் வசித்து வருபவர் பெரியசாமி. திருப்பூர் மாவட்ட கவுன்சிலராக உள்ளார். இவர் சம்பவத்தன்று இரவு தனது வீட்டு முன் தனது காரை நிறுத்தி இருந்தார். 

அந்த காரை யாரோ திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஊத்துக்குளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் ஊத்துக்குளி ரயில்வே மேம்பாலத்தில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுகொண்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி, டிரைவரிடம் விசாரணை செய்தனர். விசாரணையில் அந்த கார்
மாவட்ட கவுன்சிலருடையது என தெரிய வந்தது.இதையடுத்து, காரை ஓட்டி வந்த நபரை கைது செய்தனர்.விசாரணையில் அவர் தர்மபுரி மாவட்டம் பொம்முடி பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகன் சிங்காரவேலன் (23) என தெரிய வந்தது.இவருக்கு உடந்தையாக இருந்த சுரேஷ் என்பவர் தலைமறைவாகிவிட்டார். இவரை போலீசார் தேடி வருகின்றனர்.

2013ம் ஆண்டுக்கான பட்டியல் தயாராகிறது வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியை முழுமையாக செயல்படுத்த வேண்டும்


திருப்பூர், : திருப்பூர் தெற்கு தொகுதி புதிய வாக்காளர் பட்டியல் தயாரித்தல் தொடர்பாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற மாநகராட்சி ஆணையாளர் செல்வராஜ், புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியினை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

 திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி புதிய வாக்காளர் பட்டியல் தயாரித்தல் தொடர்பாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது. மாநகராட்சி ஆணையாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். உதவி கமிஷனர் வெங்கடாசலம், துணை வட்டாட்சியர்(தேர்தல்) சுப்ரமணியன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். 
பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்து மாநகராட்சி ஆணையாளர் செல்வராஜ் பேசுகையில், ‘திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 206 வாக்குச் சாவடி மையங்களில் உள்ள வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள், 2013ம் ஆண்டிற்குண்டான புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியினை பொறுப்புடனும், முழு ஈடுபாடுடனும் செயல்பட்டு பணியாற்றிட வேண்டும். மற்ற நகரங்களைவிட திருப்பூர் மாநகரில் மக்கள் அடிக்கடி இடம் மாறுவது உண்டு. முறையான படிவங்களை அவர்களிடம் அளித்து பெயர்களை சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்துதல்  போன்ற பணிகளை சிறப்புடன் செயலாற்ற வேண்டும். வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் குடியிருப்பு நலச் சங்கங்களை அணுகி வாக்காளர் பட்டியலை படித்து காண்பிக்க வேண்டும். 
புதிய வாக்காளர் பெயர் சேர்ப்புடன் அவர்களுக்கு புதிய வாக்காளர் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையும் பெற்றுத் தர வேண்டும். மேலும், உள்ளுர் மக்களிடம் நல்ல நண்பர்களாகவும், ஆலோசகர்களாகவும், வழிகாட்டியாகவும் இருந்து தேசிய நலனை காக்கின்ற புற வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியினை  100 சதவீதம் முழுமையாக மேற்கொள்ள வேண்டும்,’’ என்றார்.
 தொடர்ந்து நடந்த பயிற்சி முகாமில், பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்வது தொடர்பாக விளக்கப்பட்டது. இந்த முகாமில் 60க்கும் அதிகமான நிலை அலுவலர்கள் பங்கேற்றனர்.

கேஸ் பைப் லைன் திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்த வேண்டும்': விவசாயிகள் குழு வலியுறுத்தல்

பெங்களூரு கேஸ் பைப் லைன் திட்டத்தை, விவசாய நிலங்கள் தவிர்த்து, மாற்று வழியில் செயல்படுத்த வேண்டும்' என, தமிழ்நாடு விவசாயிகள் வாழ்வாதாரப் பாதுகாப்பு குழு சார்பில், பெட்ரோலிய துறை அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.கெய்ல் நிறுவனம் சார்பில், கொச்சி,பெங்களூரு கேஸ் பைப் லைன் திட்டம், தமிழகம் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக விவசாயிகளும், விவசாய நிலங்களும் பாதிக்கப்படுவதால், மாற்று வழியில், இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, தமிழ்நாடு விவசாயிகள் வாழ்வாதாரப் பாதுகாப்பு குழு சார்பில், பெட்ரோலிய துறை அமைச்சரிடம்,கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.மனுவில் தெரிவித்திருப்பதாவது:கொச்சி, பெங்களூரு கேஸ் பைப் லைன் திட்டம், தமிழத்திலுள்ள கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய ஏழு மாவட்டங்கள் வழியாக செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் மூலம், ஏழு மாவட்டங்களிலுள்ள 136 கிராமங்களின், 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாகவும், பத்தாயிரம் விவசாயிகள், மறைமுகமாகவும் பாதிக்கப்படுகின்றனர்.கேஸ் பைப் லைன் திட்டத்தினால், மூன்று ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள், தங்கள் நிலங்களை இழக்க நேரிடும்; வேறு இடத்துக்கு மாற வேண்டிய நிலையுள்ளது. இத்திட்ட பாதையில், தேங்காய், மாம்பழம், சப்போட்டா போன்ற நீண்டகால, பயன் தரும் பழ வகைகளை விவசாயிகளால், பயிரிட முடியாது. எதிர்பாராதவிதமாக விபத்துகள் ஏற்பட்டால், விவசாயிகளே பொறுப்பேற்க வேண்டிய நிலை உள்ளது.விபத்துக்கான இழப்பீடுகள் குறித்தும், தெரிவிக்கப்படாமல் உள்ளது. சிறிய விவசாயிகள், தங்கள் நிலங்களை விற்கக் கூட முடியாமல், மிகவும் பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது.கெய்ல் நிறுவனத்தினர், போலீஸ் உதவியுடன், விவசாய நிலங்களில் கேஸ் பைப் லைன் அமைக்கின்றனர். இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், மேற்கு வங்க மாநிலத்திலுள்ள, நந்திக் கிராமம் போல், தமிழகம் மாறுவதை அனுமதிக்க முடியாது என, கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. எனவே, விவசாய நிலங்களை தவிர்த்து, தேசிய நெடுஞ்சாலை அல்லது ரயில்வே போன்ற, மாற்று வழியில், இத்திட்டத்தை செயல்படுத்தி, விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Monday 6 August 2012

கோபி அருகே மேவாணியில் ஒரு மாதமாக கேட்பாரற்று நின்ற லாரி போலீஸ் விசாரணை


கோபிசெட்டிபாளையம்,  அருகே மேவாணியில் ஒரு மாதமாக கேட்பாரற்று நின்ற லாரியால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த லாரியை யாராவது கடத்திக்கொண்டு வந்து நிறுத்தி விட்டு சென்று விட்டனரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கேட்பாரற்று நின்ற லாரி

கோவையில் சீருடையில் சென்று கைவரிசை காட்டினார்: சி.பி.ஐ. சப்-இன்ஸ்பெக்டர் போல நடித்து ரூ. 65 ஆயிரம் மோசடி செய்தவர் கைது


கோவையில் சி.பி.ஐ. சப்-இன்ஸ்பெக்டர் போல நடித்து ரூ. 65 ஆயிரம் மோசடி செய்த ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.

சப்-இன்ஸ்பெக்டர் என்று கூறி மிரட்டினார்

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது-

கோவையில் அவினாசி சாலை கந்தசாமி லே-அவுட்டை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 30). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் பைனான்ஸ் மூலம் இரு சக்கர மோட்டார் சைக்கிள் ஒன்று புதிதாக வாங்கினார். அவர் தன்னை சி.பி.ஐ. போலீசில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றுவதாக கூறினார். சீனிவாசன் 4 மாதங்கள் கழித்து அந்த மோட்டார் சைக்கிளை எக்ஸ்சேஞ்ச் மேளாவில் கொடுத்து ரூ. 30 ஆயிரம் வாங்கிக் கொண்டார். பின்னர் அதே மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு அவர் வீடு திரும்பினார். உடனே எக்ஸ்சேஞ்ச் மேளா நடத்தியவர்கள் பணத்தையும் வாங்கி கொண்டு மோட்டார் சைக்கிளையும் எடுத்து செல்கிறீர்களே என்று கேட்டனர்.

திருப்பூர், நகை கடையில் திருடிய மூன்று பேர் கைது:

நகை கடையில் திருடிய மூன்று பேர் கைது: திருப்பூர், காங்கயம் கிராஸ் ரோட்டில் ஜூவல்லரி வைத்திருப்பவர் சபீர்; இவரது கடைக்கு வந்த, நிலக்கோட்டை ஆவாரம்பட்டியை சேர்ந்த காந்தி மனைவி வசந்தா 32; மொக்கை மனைவி பிச்சையம்மாள் 30; சின்னச்சாமி மனைவி கருப்பாயி 30 ஆகியோர், 60 ஆயிரம் மதிப்புள்ள ஆறு சவரன் தங்க நகைகளை திருட முயன்றனர். கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறையில்அடைத்தனர்.

கல்குவாரி புழுதியால் குழந்தைகள் பாதிப்பு கலெக்டருக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

வேண்டும்,' என திருப்பூர் மாவட்ட கலெக்டருக்கு, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் கூலிபாளையம் பகுதியில் இயங்கும் விகாஸ் வித்யாலயா பள்ளிக்கு மிக அருகில், கருங்கல் ஜல்லி கல்குவாரி செயல்பட்டு வருகிறது. "கிரஷர்' குவாரியில் இருந்து எழும் புழுதியால், பள்ளி மாணவ, மாணவியர் பாதிப் படைகின்றனர். குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கப்படுவதாகவும், கல்குவாரியின் உரிமத்தை புதுப்பிக்கக் கூடாது எனவும் பெற்றோர்கள், கலெக்டரிடம் முறையிட்டுள்ளனர்.இந்நிலையில், வெள்ளியங்கிரி என்பவர், அப்பள்ளியில் படிக்கும் தனது குழந்தையின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பெற்றோரின் கோரிக்கைகளை

Saturday 4 August 2012

திருப்பூரில் இலவச அமரர் ஊர்தி சேவையை பெற


 திருப்பூரில் இலவச அமரர் ஊர்தி சேவையை பெற 155377 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என சுகாதாரத் துறை இணை இயக்குநர் (மருத்துவம்) ஜி.திருமலைசாமி தெரிவித்தார்.

 இதுகுறித்து அவர் நிருபர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது: திருப்பூர் அரசு மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சைப் பிரிவுக்கு ரூ.1.50 கோடி மதிப்பில் புதிதாகக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் இம் மருத்துவமனைக்கு ரூ.2 கோடியை அரசு வழங்கி உள்ளது. இந் நிதி மூலமாக மகப்பேறு சிகிச்சைப் பிரிவு கட்டடத்தின் மேல்தளத்தில் புதிதாக கட்டடம் கட்டப்படும். இதில், மகப்பேறு வெளிநோயாளிகள் பிரிவு, குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு செயல்படும். திருப்பூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் 12 உள்ளன. கூடுதலாக திருப்பூர் அரசு மருத்துவமனையில் உயர்தர பாதுகாப்பு சாதனங்களுடன் கூடிய 108 ஆம்புலன்ஸ் வாகனம் வாங்கப்பட உள்ளது. விபத்தில் அடிபட்டவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துவர 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் யன்படுத்தப்படுவதுபோல், விபத்தில் இறந்தவர்களை எடுத்துச் செல்ல இலவச அமரர் ஊதி வாகனங்கள் அரசால் ழங்கப்பட்டுள்ளன. திருப்பூர், தாராபுரம், உடுமலை ஆகிய அரசு மருத்துவமனைகளுக்கு தலா ஒரு இலவச அமரர் ஊர்தி வாகனம் அளிக்கப்பட்டுள்ளன. இச் சேவையை பயன்படுத்த விரும்புவோர் "155377' என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். திருப்பூர் அரசு மருத்துவமனையில் சர்க்கரை நோய் கேன்சர் ஆகிய நோய்களுக்கு சிகிச்சை அளிக்க தொற்றா நோய் சிகிச்சைத் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். இதில், 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனை செய்து, அட்டை வழங்கப்படும். இம் மருத்துவமனைக்கு டிஜிட்டல் எக்ஸ்ரே, சிறுநீரக டயாலிஜிஸ் ஆகிய வசதிகள் விரைவில் செய்துதரப்படும். மடத்துக்குளத்தில் தாலுகா அரசு மருத்துவமனை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

திருப்பூரில்டிரான்ஸ்பார்மர் பராமரிப்பு பணிமனை

திருப்பூர் மின்வாரிய அலுவலகத்தில், டிரான்ஸ்பார்மர் சிறப்பு பராமரிப்பு பணிமனை திறக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மின்வாரிய பகிர்மான வட்டத்தில், திருப்பூர், அவிநாசி, பல்லடம், காங்கயம் ஆகிய கோட்டங்கள் உள்ளன. இப்பகுதிகளில் உள்ள டிரான்ஸ்பார்மர்கள் பழுதடைந்தால், கோவை தலைமை மின்வாரிய நிலையத்தில் உள்ள சிறப்பு பராமரிப்பு பணிமனைக்கு அனுப்பப்பட்டன. அங்கு பழுதை சரி செய்து அனுப்ப, இரண்டு நாட்களாகும். பழுதை சரி செய்ய, அங்கு டிரான்ஸ்பார்மர்கள் அதிகமாக இருந்தால், மேலும் ஒரு நாளாகும். இப்பணிக்காக இரண்டு பணியாளரும் உடன் செல்ல வேண்டும். இதனால், பணிகள் பாதிப்பதோடு, ஊழியர்கள் பல்வேறு சிரமத்துக்கு ஆளாகி வந்தனர். அதனால், திருப்பூர் குமார் நகரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில், டிரான்ஸ்பார்மர் சிறப்பு பராமரிப்பு பணிமனை புதிதாக அமைக்கப்பட்டது. கோவை மண்டல தலைமை பொறியாளர் தங்கவேலு நேற்று திறந்து வைத்தார். திருப்பூர் வட்ட மேற்பார்வை பொறியாளர் நிர்மலதா, செயற்பொறியாளர் பிரேமலதா மற்றும் உதவி செயற்பொறியாளர், பொறியாளர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.

மாவட்டம் முழுவதும் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி : தொடர்கிறது, குழந்தை தொழிலாளர் முறை


திருப்பூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள், கடை கள், வர்த்தக நிறுவனங்களில் குழந்தைகள் பணியாற்றுகின்றனரா என ஆய்வு நடத்தப்பட்டது. கடந்த ஒரு மாதத்தில் 23 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். இதனால், அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். தொடர் கண்காணிப்பையும் மீறி, குழந்தைகளை தொழிற்சாலைகளில் பணிக்கு அமர்த்துவதால், நடவடிக்கையை 
கடுமையாக்க திட்டமிட்டுள்ளனர்.திருப்பூர் பகுதி, பனியன் தொழிலுக்கும்,சுற்றுப்பகுதிகள், நூல் மில் மற்றும் விசைத்தறி தொழிலுக்கும் பிரசித்தி பெற்றது. வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர். வறுமை காரணமாக, சிலர், தங்களது குழந்தைகளையும் வேலைக்கு அனுப்புகின்றனர். சிறு வயதில் வேலைக்கு செல்லும் சிறுவர்கள், கல்வியை இழப்பதோடு, எதிர்காலத்தையும் சேர்த்து தொலைத்து விடுகின்றனர்.இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், தேசிய குழந்தை தொழில் ஒழிப்பு திட்டம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. திட்ட அலுவலர்கள், வருவாய்த்துறை, தொழிலாளர் துறை, தொழிற்சாலைகள் துறை, மருத்துவ துறை மற்றும் போலீசார் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டு, பகுதி வாரியாக தொழிற்சாலைகள், மில்கள், ஓட்டல்கள், கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் அடிக்கடி ஆய்வு நடத்தப்படுகிறது.ஆய்வில், 14 வயதுக்கு கீழுள்ள சிறுவர்களை பணி அமர்த்துவது கண்டறியப்பட்டால், அவர்களை மீட்டு, சிறப்பு பள்ளி அல்லது முறையான பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப் படுகிறது. சிறுவர்களை பணிக்கு அமர்த்தும் நிறுவனங்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இக்குற்றத்துக்கு அபராதம் அல்லது சிறை தண்டனை அல்லது இரண்டு சேர்த்து விதிக்கப்படும்.
இக்கமிட்டி ஆலோசனை கூட்டம், மாதந்தோறும் நடக்கிறது. கடந்த மாதம் நடந்த கூட்டத்தில், மாவட்ட கண்காணிப்பு குழுவுக்கு அடுத்தபடியாக, விரைந்து பணியாற்றும் வகையில் தாலுகா அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டன. தாலுகா வாரியாக அமைக்கப்பட்ட குழுக்கள், கடந்த ஒரு மாதத்தில் பல பகுதி
களில் ஆய்வு நடத்தின. இதுவரை 33 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அதில், 23 பேர் குழந்தை தொழிலாளர்கள்.
கடந்த 23ம் தேதி, திருப்பூரில் இரண்டு பனியன் நிறுவனங்களில் மீட்கப்பட்ட 12 பேரில் 9 பேரும், நேற்றுமுன்தினம் பல்லடம் சித்தம்பலத்தில் உள்ள ஒரு மில்லில் மீட்கப்பட்ட 14 பேரில் 7 பேரும் குழந்தை தொழிலாளர்கள் என்பது மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை 23 ஆக உள்ளதுகுழந்தை தொழிலாளர் இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் மாவட்ட நிர்வாகம் செயல்படும் வேளையில், இதுபோன்ற சம்பவங்கள், திருப்பூர் மாவட்டத்தில் இன்னும் குழந்தை தொழிலாளர் முறை முற்றிலும் மறையவில்லை என்பதையே காட்டுவதாக உள்ளது. இது, அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குழந்தை தொழில் ஒழிப்பு திட்ட இயக்குனர் விஜயகுமார் கூறியதாவது:மாவட்டத்தில் திருப்பூர், பல்லடம், தாராபுரம், உடுமலை பகுதிகளில் ஒருங்கிணைந்த ஆய்வு நடந்தது. மீட்கப்பட்ட 10 சிறுவர், 13 சிறுமியரில், திருப்பூரை சேர்ந்த 3 பேரும், தாராபுரத்தில் ஒரு சிறுவனும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.ஆந்திராவைச் சேர்ந்த 4 பேரும், வெளிமாவட்டங்களை சேர்ந்த 15 பேரும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களை பள்ளியில் சேர்க்க பெற்றோர் உறுதி அளித்துள்ளனர். தொடர்ந்து அவர்களை கண்காணிக்க மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தரப்பட்டுள்ளது. பணி அமர்த்திய நிறுவனங்கள் மீது தொழிற்சாலை துறையினர், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க உள்ளனர், என்றார்.


கொத்தடிமையாக நடத்த முயற்சியா?



                         பெற்றோரிடம் தலா 2,000 ரூபாய் கொடுத்துவிட்டு, பீகாரில் இருந்து திருப்பூருக்கு அழைத்து வரப்பட்ட 16 சிறுவர்களை வடக்கு போலீசார் நேற்றிரவு மீட்டனர்.பீகார் மாநிலம், தர்பங்கா மாவட்டத்தை சேர்ந்த லட்சுமண் மற்றும் சஞ்சய் ஆகியோர், திருப்பூரில் தங்கி வேலை செய்து வருகின்றனர். தொழிற்சாலைகளுக்கு தேவையான தொழிலாளர்களை அழைத்து வரும் புரோக்கர்களான இவர்கள், வறுமையில் வாடும் குடும்பங்களை சேர்ந்த 16 சிறுவர்களை, திருப்பூர் அழைத்து வந்துள்ளனர். பெற்றோர்களிடம் தலா 2,000 ரூபாய் கொடுத்துவிட்டு, திருப்பூருக்கு அழைத்துச் செல்வதாக கூறி, சென்னை - மங்களூரு ரயிலில் அழைத்து வந்துள்ளனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவு 11.54 மணிக்கு, திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் வந்திறங்கி, காதர்பேட்டை பகுதியில் உள்ள லட்சுமண் என்பவர் அறையில் 16 சிறுவர்களையும் தங்க வைத்துள்ளனர். திருப்பூரில் உள்ள கம்பெனிகளுக்கு வேலைக்கு அனுப்பி, அதன் மூலமாக வருவாய் பெறவும் புரோக்கர்கள் இருவரும் திட்டமிட்டுள்ளனர்."பேச்பன் பேச்சோ ஆன்டோலென்' என்ற, பீகாரில் உள்ள குழந்தைகள் நல தன்னார்வ அமைப்பு, திருப்பூரில் உள்ள கிளை நிர்வாகிகளிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளது. தன்னார்வ அமைப்பு நிர்வாகிகள் கொடுத்த புகார் அடிப்படையில், திருப்பூர் வடக்கு போலீசார் விரைந்து சென்று, அங்கிருந்த 16 சிறுவர்களையும் அழைத்து வந்தனர். அவர்களில், ஒன்பது பேர் 14 வயதுக்கு குறைந்தவர்கள் என்பதும், ஏழு பேர் 15 வயதுக்கும் அதிகமானர்வர்கள் என்பதும் தெரியவந்தது."பெற்றோரிடம் காசு கொடுத்து அழைத்து வந்து, திருப்பூரில் கொத்தடிமைகளாக வைத்திருக்க வாய்ப்புள்ளது. எனவே, கொத்தடிமைகள் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, தன்னார்வ அமைப்பு நிர்வாகிகள், போலீசிடம் வலியுறுத்தி உள்ளனர். 16 பேரையும் மீட்டு வந்த போலீசார், சம்பந்தப்பட்ட புரோக்கர்களையும் அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.