போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Tuesday 26 February 2013

400 கிலோவாட் உயர் அழுத்த மின் கம்பிகளில் இருந்து கசியும் மின்சாரம் நிலங்களில் பாய்கிறது தினகரன் செய்தி


கோபி:கோவை மாவட்டத்திற்கு கூடுதலாக 400 கிலோவாட் மின்சாரம் வழங்குவதற்காக மின்வாரியம் கடந்த 4 ஆண்டுகளுக்கு அளித்த திட்ட முன்மொழிவுக்கு அரசு அனுமதி அளித்தது. இதைத்தொடர்ந்து கடந்த 2010ம் ஆண்டு மேட்டூரில் இருந்து அம்மாபேட்டை, அந்தியூர், கோபி, அவிநாசி வழியாக கோவை மாவட்டத்தில் உள்ள கருமத்தம்பட்டி துணை மின்நிலையத்திற்கு புதிய மின்பாதை அமைக்கும் பணி கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வந்தது. உயரழுத்த மின்சார கோபுரம் அமைக்க நிலம் கையகப்படுத்துதல் மற்றும் மின்சார டவர்கள் அமைக்கப்பட்டு, மொத்தம் 120 கிலோ மீட்டர் தூரத்திற்கு 6 பிரிவுகளாக, ஒவ்வொரு பிரிவிலும் 2 கம்பிகள் கொண்ட மின்பாதை அமைக்கப்பட்டது. 45 மீ. உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள டவரில் தரை மட்டத்தில் இருந்து 20 மீ. உயரத்தில் மின் கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் பணிகள் முடிவுற்ற நிலை யில் புதிய மின் பாதையில் மின்சாரம் கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. 

Saturday 23 February 2013

திருப்பூர்: "பார்கோடிங்' கருத்தரங்கு

 திருப்பூர்: தொழில் நிறுவனங்கள், தங்களது"பார்கோடிங்' பதிவு செய்வது தொடர்பான பயிற்சி கருத்தரங்கு, திருப்பூரில் வரும் 25ல் நடக்கிறது.மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம் சார்பில், எம்.எஸ்.எம்.இ., வளர்ச்சி நிறுவனம் இயங்கி வருகிறது. அந்நிறுவனம் சார்பில், திருப்பூர் குமார் நகர், கதர் கிராம தொழில்கள் வாரிய வளாகத்தில், "பார்கோடிங்' பயிற்சி கருத்தரங்கு நடத்தப்படுகிறது.

கருத்தரங்கு மூலம், பார்கோடிங் குறித்த விளக்கம், பதிவு செய்யும் வழிமுறை, உள்நாடு மற்றும் வெளிநாடு வியாபாரத்தில் பெறும் நன்மைகள், "பார்கோடிங்' பதிவு செய்வதற்கு, மத்திய அரசின் மானிய திட்டங்கள், மானியம் பெறும் வழிமுறை குறித்து விளக்கப்படும். பயிற்சியில் பங்கேற்க விருப்பமுள்ள, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், தங்களது பெயர்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 0422 - 2233 956 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம், என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Friday 8 February 2013

மீண்டும் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு : தொழில் துறையினர் அதிர்ச்சி


திருப்பூர் :திருப்பூரில் கடந்த இரண்டு மாதமாக மின்வெட்டு நேரம் குறைந்திருந்த நிலையில், மீண்டும் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டதால், தொழில்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

திருப்பூரில் நூற்பாலைகள், பின்னலாடை உற்பத்தி, அரிசி, ஆயில் மில்கள், விசைத்தறி, இயந்திரங்கள், பாத்திர உற்பத்தி,கோழி பண்ணைகள், விவசாயம், இயந்திரங்கள் உற்பத்தி என தொழில்கள் அதிகம் உள்ளன. தினமும் சராசரி, 700 முதல் 750 மெகாவாட் வரை, மின்சாரம் தேவைப்படுகிறது.கடந்த இரு மாதங்களாக, நகர பகுதிகளில் இரண்டு மணி நேரம்; கிராம பகுதிகளில் அதிகபட்சமாக நான்கு மணி நேரம் என்ற அளவிலேயே மின்வெட்டு இருந்தது. அடிக்கடி மின்வெட்டு ஏற்படாமல், சீராக குறிப்பிட்ட நேரம் மட்டும் ஏற்பட்டதால், பொதுமக்களும், தொழில் துறையினரும் நிம்மதியடைந்தனர்.