போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Wednesday 18 July 2012

திருப்பூர் : கோவில்களில் பாதுகாப்பு பணிக்கு சேர விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

திருப்பூர் : கோவில்களில் பாதுகாப்பு பணிக்கு சேர விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.எஸ்.பி., ஆஸ்ரா கர்க் வெளியிட்டுள்ள அறிக்கை:
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். முன்னாள் ராணுவத்தினர் மற்றும் முன்னாள் போலீசாரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பணிக்கு நல்ல உடல் தகுதியுடைய, 62 வயதுக்கு உட்பட்ட, எவ்வித குற்றவழக்கிலும் ஈடுபடாத, நன்னடத்தை உள்ள முன்னாள் ராணுவத்தினர் மற்றும் முன்னாள் போலீசார் விண்ணப்பிக்கலாம்.
இப்பணிக்கு மாத சம்பளம் 5,000 ரூபாய் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பத்தை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், அங்கேரிபாளையம் ரோடு, திருப்பூர் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தை 15 நாட்களுக்குள் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்கள் தேவைப்படுவோர், 0421 - 248 3100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என்று தெரிவித்துள்ளார்.

Tuesday 17 July 2012

திருப்பூரில், இலகு ரக வாகனங்களுக்கான "சப்-வே' பணி; ரத்து செய்ய திட்டம்?


திருப்பூரில், ரயில்வே சுரங்க பாலம் கட்டுமான பணியில், கனரக வாகனங்களுக்கான 
"சப்-வே' பணிகள் மட்டுமே நடந்து வருகின்றன. பொதுமக்கள் அதிகம் பயன்பெறும் இலகு ரக வாகனங்கள் செல்வதற்கான "சப்-வே' பணியை ரத்து செய்ய ரயில்வே துறை முயற்சித்து 
வருகிறது. திருப்பூரை இரண்டாக பிரிக்கும் வகையில், ரயில்வே வழித்தடம் அமைந்துள்ளது. இரு பகுதி மக்களும் மேம்பாலம் சுற்ற வேண் டிய நிலை உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில், ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைத்துறை (திட்டம் ) சார்பில் 20 கோடி ரூபாய் மதிப்பில், இரண்டு சுரங்க பாதை அமைக்க திட்டமிடப்பட்டது. பிரிட்ஜ்வே காலனி பகுதியில், கனரக வாகனங்கள் செல்லும் வகையில், எட்டு மீட்டர் அகலம், ஐந்தரை மீட்டர் உயரம், 48 மீட்டர் நீளத்துக்கு ஒரு சுரங்க பாதையும், கார், இரு சக்கர வாகனங்கள் கடப்பதற்காக, மூன்று மீட்டர் அகலம், இரண்டே முக்கால் மீட்டர் உயரம், 30 மீட்டர் நீளத்துக்கு இலகு ரக வாகனங்களுக்கான சுரங்க பாதையும் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. ரயில்வே துறை சார்பில், கனரக வாகனங்களுக்கான சுரங்க பாதை அமைக்கும் பணி மட்டும் தற்போது நடந்து வருகிறது. ஆனால், முதல் ரயில்வே கேட் போல், கொங்கு மெயின் ரோடு மற்றும் யூனியன் மில் ரோட்டை இணைக்கும் வகையிலான இலகு ரக வாகனங்களுக்கான "சப்-வே' பணிகளை துவக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒப்பந்ததாரருக்கு சாதகமாக ஒட்டுமொத்தமாக பணியையே ரத்து செய்துவிட, ரயில்வே அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநகராட்சி மற்றும் ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:முதல் லெவல் கிராசிங்கிற்கு மாற்றாக, "சப்-வே' அமைக்கும்போது, கனரக வாகனங்கள் மற்றும் இலகு ரக வாகனங்களுக்கு தனித்தனியாக "சப்-வே' அமைத்தல், வெள்ளலூர் சுரங்க பாதை பணி என மூன்று பணிகளை இணைத்து, ஒரே பணியாக ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக, எட்டு கோடி ரூபாயை, இரண்டாண்டுகளுக்கு முன்பே ரயில்வே 
ஒதுக்கியுள்ளது. வெள்ளலூர் மற்றும் டி.எம். எப்., சுரங்க பாலம் பணி நடந்து வருகிறது. இலகு ரக வாகனங்களுக்கான "சப்-வே' அமைக்கும் பணி, இதுவரை துவக்கப்படவில்லை. மாநகராட்சியின் பாதாள சாக்கடை குழாய்கள் தடையாக உள்ளன; மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள் என ரயில்வே துறை கோரிக்கை விடுத்தது. உடனடியாக, பாதாள சாக்கடை குழாயை மாற்றியமைத்துக் கொள்ள, திட்டம் வடிவமைத்து, டெண்டர் பணியை மாநகராட்சி முடித்து, ரயில்வே, மாநகராட்சி சேர்ந்து பணியை துவக்கினால், ஒரே சமயத்தில் இரண்டு பணிகளும் முடிவடையும். மக்களுக்கு சிரமம் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது, 
ஒப்பந்ததாரருக்கு சாதகமாக திட்டத்தையே ரத்து செய்ய முடிவு செய்துள்ளனர்."சப்-வே' பணியே துவங்காத நிலையில், தற்போதுள்ள இரண்டு ரயில்வே கேட்களையும், பணி முடிந்ததும் மூட அனுமதிக்க வேண்டும் என கலெக்டருக்கு, ரயில்வே துறை கடிதம் அனுப்பியுள்ளது. கனரக வாகனங்களுக்கு ஒரு வழிப்பாதையாக பயன்படும் "சப்-வே' பணியை மட்டும் முடித்து, இலகு ரக வாகனங்களுக்கான "சப்-வே' பணி ரத்து செய்யப்பட்டால் கடும் பாதிப்பு ஏற்படும். இரண்டு ரயில்வே கேட்கள் வழியாக, ஏராளமான இலகு ரக வாகனங்கள் கடக்கின்றன. இப்பணி ரத்து செய்யப்பட்டால், மேம்பாலம் சுற்றிச்செல்ல வேண்டிய நிலை ஏற்படுவதோடு, ரயில்வே மேம்பாலத்தில் நெரிசல் தொடரும். அதனால், இலகு ரக வாகனங்களுக்கான "சப்-வே' பணிகளை மேற்கொள்ள, மக்கள் பிரதிநிதிகள், மாநகராட்சி அதிகாரிகள், அரசியல் கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்த வேண்டும், என்றனர்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, தனித்தேர்வர்களுக்கு செப்டம்பரில் தேர்வு


திருப்பூர் : உடனடி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், தனியார் மையங்களில் படித்தவர்களுக்கான பத்தாம் வகுப்பு தனித்தேர்வு, வரும் செப்., மாத இறுதியில் துவங்குகிறது. செய்முறை தேர்வுக்கு வரும் 31 வரை விண்ணப்பிக்கலாம்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, கடந்த ஏப்., மாதம் நடந்தன. திருப்பூர் மாவட்டத்தில் 30 ஆயிரத்து 107 மாணவர்கள் தேர்வு எழுதினர்; 25 ஆயிரத்து 879 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்; 4,228 மாணவர்கள் தோல்வி அடைந்தனர். பல்வேறு பாடங்களில் தோல்வியடைந்தவர்கள், மீண்டும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று பள்ளியில் சேரும் வகையில் ஜூன் மாதம் உடனடி தேர்வு நடத்தப்பட்டது; ஆன்-லைனில் "ரிசல்ட்' வெளியிடப்பட்டது.

உடனடி தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள், பல்வேறு டியூசன் சென்டர்களில் படிக்கும் மாணவர்களுக்கான பத்தாம் வகுப்பு தனித்தேர்வு, வரும் செப்., மாதம் துவங்குகிறது. அறிவியல் பாட செய்முறை தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள், மீண்டும் செய்முறை தேர்வு எழுத வேண்டும். தனித்தேர்வர்களுக்கான செய்முறை தேர்வு விண்ணப்பங்கள், மாவட்ட கல்வி அலுவலகத்தில் வழங்கப்படுகிறது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களுடன், "மாவட்ட கல்வி அலுவலர், திருப்பூர்' என்ற முகவரிக்கு, 125 ரூபாய்க்கு டிடி எடுத்துக் கொடுக்க வேண்டும். தனித்தேர்வர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 31க்குள் மாவட்ட கல்வி அலுவலகத்தில் வழங்க வேண்டும் என, மாவட்ட கல்வி அலுவலர் ஜெயலட்சுமி தெரிவித்தார்.

Sunday 15 July 2012

சுத்தமான சுற்றுச்சூழலை விட்டு செல்ல வேண்டும்

சுத்தமான சுற்றுச்சூழலை விட்டு செல்ல வேண்டும்
திருப்பூர்:""எதிர்கால சந்ததிகளுக்கு, சுத்தமான சுற்றுச்சூழலை விட்டுச் செல்ல வேண்டும்'' என, தொழிலதிபர்களுக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதி சதாசிவம் அறிவுறுத்தினார்.திருப்பூரில், மாவட்ட நீதிமன்றம், முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றம், நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், செக் மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் ஆகிய நீதிமன்றங்கள் துவங்க விழா மற்றும் காங்கயம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டடம் திறப்பு விழா, நேற்று காலை, ஐ.கே.எப்.,அரங்கில் நடந்தது.சுப்ரீம் கோர்ட் நீதிபதி சதாசிவம் திறந்து வைத்து பேசியதாவது: சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சுத்தமான காற்று, குடிநீர், சுகாதாரமான வாழ்க்கை வாழும் உரிமை அனைவருக்கும் உள்ளது. பணம் எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம்; ஆனால், எதிர்கால சந்ததிக்கு சுற்றுசூழலை நாம் எந்த அளவிற்கு மிச்சம் வைத்து சென்றுள்ளோம் என்பது தான் முக்கியம். நொய்யல் ஆற்றில், சாயக் கழிவு, சாக்கடை கழிவு கலக்கின்றன. தொழிலதிபர்கள் தங்கள் வருமானத்தில், குறிப்பிட்ட அளவு சுற்று சூழலை காக்க செலவிட வேண்டும். மத்திய,மாநில அரசுகளுடன் இணைந்து பாதிப்புகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வக்கீல்கள், தங்கள் கடமை உணர்ந்து செயல்பட வேண்டும். உயர் நீதிமன்ற, சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகள், கீழ் கோர்ட்டுகளின் அடிப்படையிலேயே அமைகிறது.

எகிறும் மணல் விலை திருப்பூரில் கட்டுமான துறைக்கு சிக்கல்

திருப்பூர் : அதிக லோடு ஏற்றி வரும் மணல் லாரிகளை போலீசார் பிடித்து அப ராதம் விதிப்பதால், மணல் விலை "எகிறி' வருகிறது. புதிதாக வீடு கட்டுவோரும், கட்டுமான துறையினரும் கவலை அடைந்துள்ளனர்.
காவிரி ஆற்றில், கரூர், சேவூர் உள்ளிட்ட நான்கு மணல் ஏற்றும் மையங்களில் மணல் விற்பனை நடக்கிறது. தினமும் 7,000 லாரிகள் மூலம், திருப்பூர், கோவை மாவட்டங்களுக்கு மணல் வரத்து நிலவுகிறது. கடந்த மாதம் மணல் லாரிகள் லோடு, 12 ஆயிரம் முதல் 13 ஆயிரம் வரை மட்டுமே விற்று வந்தது.
தற்போது, போலீஸ் கெடுபிடி காரணமாகவும், மணல் குவாரி மூடும் அபாயம் உள்ளது என காரணம் கூறி, மணல் விலை லோடுக்கு 2,000 ரூபாய் வரை உயர்த்தி விற்கப்படுகிறது. மணலுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதோடு, மணல் விலையும் "எகிறி' வருகிறது. இதனால், கட்டுமான துறை பாதிக்கப்பட்டு வருகிறது.
மணல் லாரி உரிமையாளர்கள் கூறியதாவது:
லாரிகளில் வழக்கமாக, 4 முதல் 4.5 யூனிட் வரை மணல் ஏற்றி வரப்படும். குவாரிகளில், யூனிட்டுக்கு 1,143 ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நான்கு யூனிட்டுக்கு 4,572 ரூபாய் மற்றும் விற்பனை வரி 210 ரூபாய் என 4,782 ரூபாய் குவாரிகளில் வசூலிக்கப்படுகிறது. மட்டம் செய்வதற்கு 50 ரூபாய் செலவாகிறது. கி.மீ., பொருத்து லாரிகளுக்கு 4 ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் டீசல் செலவு ஆகிறது. கட்டடங்களில் மணல் இறக்கு கூலி ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. டிரைவருக்கு 1,000 மற்றும் தேய்மான செலவு, போலீசுக்கு மாமூல் என 11,500 ரூபாய் வரை செலவாகிறது.

திருப்பூர்:கடையடைப்பு மற்றும் ரோடு மறியல் போராட்டம் நடத்தப்படும்.

திருப்பூர்:"முன்பு இருந்ததை போல், பழைய பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் நிறுத்த அனுமதிக்க வேண்டும்; இல்லாதபட்சத்தில், கடையடைப்பு மற்றும் ரோடுமறியல் போராட்டம் நடத்த வேண்டியிருக்கும்' என, கடை வியாபாரிகள் பேரவை எச்சரித்துள்ளது.திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டில், பராமரிப்பு பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது. தரைதள பணிகள் துவங்கப்பட்ட போது, 120 பஸ்கள், புது பஸ் ஸ்டாண்டுக்கு மாற்றப்பட்டன. பணிகள் நிறைவு பெற்ற பின்னும், பஸ்கள், பழைய பஸ் ஸ்டாண்டுக்கு வருவதில்லை என, சிறு வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாநகராட்சி கடை வியாபாரிகள் பேரவை தலைவர் முத்துசாமி, எஸ்.பி.,யிடம் அளித்துள்ள மனு:கடந்த 1987ம் ஆண்டு முதல், பஸ் ஸ்டாண்டில் வடக்கு பார்த்துள்ள 16 கடைகள் முன்பாக, உடுமலை, பொள்ளாச்சி, கரூர், கோவை பஸ்களும், 8 மற்றும் 10ம் நம்பர் டவுன் பஸ்களும் நின்று சென்றன. தெற்கு பார்த்துள்ள 17 முதல் எண் 31 வரையிலான கடைகளின் முன், மினி பஸ்கள், காங்கயம், முத்தணம்பாளையம் பஸ்கள், டவுன் பஸ்களில், 3பி, 3 சி, 3டி, 3இ, 15 பஸ்களும், பல்லடம் வழியாக செல்லும் 7, 18, 28, 13, 41, 22, 22ஏ பஸ்களும் நின்றுச் சென்றன.தற்போது பணிகள் முழுமை பெற்றிருந்தாலும், பஸ்கள் பழைய பஸ் ஸ்டாண்டில் நிறுத்தப்படுவதில்லை. மேலும், பெரும்பாலான மினி பஸ்களும் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை. பஸ் ஸ்டாண்டின் தெற்கு பகுதியில் பஸ்கள் நிற்காமல் வெறிச்சோடி காணப்படுகிறது. சிறு வியாபாரிகளால் வாடகை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, முன்பு இருந்ததை போல், மினி பஸ் உட்பட அனைத்து பஸ்களையும் பழைய பஸ் ஸ்டாண்டுக்குள் அனுமதிக்க வேண்டும். திருச்சி, மதுரை பஸ்களில், ஐந்து பஸ்களையாவது பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து இயக்க வேண்டும். தவறினால், சங்க <உறுப்பினர்கள் 400 பேர் சார்பில், கடையடைப்பு மற்றும் ரோடு மறியல் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு, முத்துசாமி கூறியுள்ளார்.

ஆட்டோ கவிழ்ந்து பள்ளி மாணவி பலி: மேலும் 3 பேர் கவலைக்கிடம்


ஆட்டோ கவிழ்ந்து பள்ளி மாணவி பலி: மேலும் 3 பேர் கவலைக்கிடம்
ஜுலை. 15
திருப்பூர் அருகே உள்ள படியூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு இன்று காமராஜர் பிறந்தநாளையொட்டி கொடியேற்று விழா நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக கந்தாம்பாளையத்தில் இருந்து பள்ளி மாணவ-மாணவிகள் 10 பேர் ஒரு மினிடோர் ஆட்டோவில் சென்றனர். 

உடன் சில பொதுமக்களும் இருந்தனர். படியூரை நெருங்கி ஆட்டோ சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டு சத்தமிட்டனர். அக்கம் பக்கத்தினர் அங்கு கூடி ஆட்டோவுக்குள் சிக்கிய பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்களை மீட்டனர். சுமார் 15 பேர் இந்த விபத்தில் காயமடைந்தனர். 

காயமடைந்த மாணவ-மாணவிகள் விவரம் வருமாறு:- 

மேகனாதேவி (வயது 13), தாரணி (15), சவுமியா (13), குமார் (13), அஜீத்குமார் (14), லோகேஸ்வரி (12), சவுந்தர்யா (12), சிவன்கார்த்திக் (14), கோகுல் (14).  இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மேகனாதேவி பரிதாபமாக இறந்தார். 

தாரணி, சவுமியா, குமார் ஆகியோர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மின்வாரியம் தகவல் மின் கம்பிகளை மாற்றிமைக்க முடிவு

திருப்பூர்:பலவஞ்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டடம் மீது தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளை மாற்றியமைக்க மின்வாரியம் முடிவு செய்துள்ளது.பலவஞ்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 410 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளி வளாகத்தில் உள்ள மின்கம்பத்தில் இருந்து, மின் கம்பிகள் மிகவும் தாழ்வாகச் செல்வதால், மாணவ, மாணவியருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது, என, "தினமலர்' நாளிதழில் போட்டோவுடன் செய்தி வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து அப்பள்ளியில் உள்ள மின்கம்பத்தையும், கம்பிகளையும் மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.மின்வாரிய செயற்பொறியாளர் மோகன் கூறியதாவது:பள்ளி வளாகத்தில் ஏற்கனவே உள்ள தாழ்வழுத்த மின்பாதை அருகில், மின்வாரியத்துக்கு தகவல் தெரிவிக்காமல் புதிதாக கட்டடம் கட்டப்பட்டுள்ளது. மேலும், மின்பாதையை மாற்றியமைக்கக் கோரி பள்ளி நிர்வாகமோ, வீரபாண்டி ஊராட்சியோ எவ்வித கடிதமோ, விண்ணப்பமோ அளிக்கவில்லை."தினமலர்' நாளிதழில் வந்த செய்தியை பார்த்ததும், பள்ளி வளாகத்தை மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உதவி தொடக்க கல்வி அலுவலருக்கு, தாழ்வழுத்த மின்பாதையை மாற்றியமைக்க விண்ணப்பம் அளிக்குமாறும், அதன் அடிப்படையில் மதிப்பீடு தயார் செய்து, அனுமதி பெற்று உடனடியாக மின்பாதை மாற்றியமைக்கிறோம் என்று கூறியுள்ளோம், என்றார்.

Saturday 14 July 2012

திருப்பூர்:மாநகராட்சிக்கு சொந்தமான சமுதாய நலக்கூடத்தில் சமுதாய கூடத்தில் மின் ஒயர் திருட்டு


திருப்பூர்:மாநகராட்சிக்கு சொந்தமான சமுதாய நலக்கூடத்தில் இருந்து மின் ஒயர்கள் திருடப்பட்டுள்ளன. திருப்பூர் பலவஞ்சிபாளையம் ஜெயலலிதா நகரில், வீரபாண்டி ஊராட்சியாக இருந்தபோது, 21 லட்சம் ரூபாய் செலவில் சமுதாய நலக்கூடம் அமைக்கப்பட்டது. இதில், திருமண நிகழ்ச்சி நடத்தும் வகையில், மூன்று பெரிய அறைகள் கட்டப்பட்டுள்ளன. மும்முனை மின் இணைப்பு, சமையல் பாத்திரம், சேர்கள் ஆகிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இது, மாநகராட்சி நான்காவது மண்டலத்தின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது.

இங்கு, வரும் 15ல் திருமண நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக சமுதாய நலக்கூடத்தில் பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மாநகராட்சி பணியாளர் முருகன், சமுதாய கூடத்தை திறந்து விளக்குகளை "ஆன்' செய்தபோது, ஒன்று கூட எரியவில்லை. நுழைவாயிலில் இருந்த டியூப்லைட் உடைக்கப்பட்டிருந்தது. மின்கம்பத்தில் இருந்து வரும் ஒயர்கள் துண்டிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.மாநகராட்சி பணியாளர் கூறுகையில், "மின்கம்பத்துக்கும், சமுதாய கூடத்துக்கும் இடையே, 70 அடி நீளத்துக்கு குழாய் மூலம் மும்முனை ஒயர் கொண்டு சென்று மின் இணைப்பு வழங்கப்பட்டிருந்தது. ஒயர் செல்லும் குழாய் வெளியே தெரியாத வகையில், நிலத்துக்குள் புதைக்கப்பட்டிருந்தது. ஆனால், மின்கம்பத்தின் அருகேயும், சமுதாய கூட சுவற்றின் அருகேயும் திறந்தவெளியில் குழாய் இருந்தது. இக்குழாய் வழியாக மின்சார ஒயர்கள் செல்வதை பார்த்த திருடர்கள், டியூப்லைட்டை உடைத்து விட்டு, குழாய்க்குள் இருந்த ஒயர்களை துண்டித்து திருடிச் சென்றுள்ளனர்,' என்றார்.

உடுமலை அருகேரூ.5.89 லட்சத்தில் சோலாரில் கொப்பரை உலர் கலன் திறப்பு

உடுமலை அருகே ரூ. 5.89 லட்சத்தில் சோலாரில் கொப்பரை உலர் கலன் திறக்கப்பட்டன. குடிமங்கலம் ஒன்றியம் வீதம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், அரசின் ராஷ்டிரிய கிரிஷி விகாஸ் யோஜனா -தேசிய விவசாய வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஐந்து லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், சூரிய ஒளி கொப்பரை உலர்கலன் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. திருப்பூர் மண்டல இணைப்பதிவாளர் பாபு வரவேற்றார். தாராபுரம் சரக துணை பதிவாளர் முத்துக்குமார், கவுன்சிலர் தமயந்தி முன்னிலை வகித்தனர். கொப்பரை உலர் கலனை திறந்து வைத்து உடுமலை எம்.எல்.ஏ., ஜெயராமன் பேசியதாவது: கொப்பரைக்கான ஆதார விலை உயர்த்த தமிழக முதல்வர் மத்திய அரசினை வலியுறுத்தி வருகிறார். ஆனால், மத்திய அரசு கொப்பரை ஆதார விலையினை உயர்த்த பாராமுகம் காட்டி வருவது வேதனையளிக்கிறது. விலை உயரும் வரை தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தும். கொப்பரை உற்பத்திக்காக வீதம்பட்டியில், கொப்பரை இருப்பு வைக்க குடோன் வசதியுடன் கட்டப்பட்டுள்ளது. இந்த உலர்கலன்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் கொப்பரைக்கு ரசாயனம் பயன்படுத்த தேவையில்லை; இயற்கையான மற்றும் சுத்தமான தேங்காய் கொப்பரை உற்பத்தி செய்யலாம். இவ்வாறு எம்.எல்.ஏ., பேசினார். குடிமங்கலம் கள அலுவலர் செல்வம், வீதம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் செல்லமுத்து, உடுமலை கூட்டுறவு சங்க தனி அலுவலர் சாகுல் அமீது, ஒன்றியக்குழு தலைவர் முருகன், துணைத்தலைவர் முரளி உட்பட பலர் பங்கேற்றனர். இதேபோல், சின்னவீரம்பட்டியில், சோலார் ஒளி உலர் கலன் துவக்க விழா நடந்தது.

Wednesday 11 July 2012

திருப்பூர் சத்துணவு பணியிடங்களுக்கான நேர்காணல்



திருப்பூர் மாநகராட்சியில் 95 சத்துணவு பணியிடங்களுக்கான நேர்காணல் நேற்று துவங்கியது; கடிதம் கிடைத்த 347 பேர் மட்டுமே நேற்றைய நேர்காணலில் பங்கேற்றனர்.திருப்பூர் மாநகராட்சி பகுதியில் <உள்ள பள்ளிகளில், 19 சத்துணவு அமைப்பாளர் பணியிடங்கள், 23 சமையலர் மற்றும் 53 சமையல் உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அமைப்பாளர் பணிக்கு 2,000 பேர்; சமையலர் பணிக்கு 350; உதவியாளர் பணியிடத்துக்கு 150 பேர் என 2,500 பேர் விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பங்களை பரிசீலித்ததில், தகுதி வாய்ந்த 635 அமைப்பாளர் பணியிட விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் நேர்காணல் கடிதம் அனுப்பப்பட்டது. நேற்று முன்தினம் மாலை வரை கடிதம் அனுப்பப்பட்டது.

திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில், நேற்று மூன்று பிரிவுகளாக நேர்காணல் நடந்தது. துணை கமிஷனர் நிலையில் உள்ள அதிகாரிகளும், மருத்துவ அதிகாரிகளும் அடங்கிய குழுவினர் நேர்காணல் நடத்தினர். நேற்று காலை 11.00 முதல் பிற்பகல் 3.30 மணி வரை நடந்த நேர்காணல் நிகழ்ச்சியில் 347 பேர் பங்கேற்றனர். மீதியுள்ள 288 பேருக்கு இன்றும், சமையல் மற்றும் உதவியாளர் விண்ணப்பதாரர்களுக்கு நாளையும் நேர்காணல் நடக்கிறது. அதிகாரிகள் கூறுகையில், "நேர்காணலில், அசல் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, சத்துணவு பணி அமைப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டுள்ளனரா என்பது பரிசோதிக்கப்பட்டது. தகுதியான அனைவரும் கலெக்டர் முடிவுக்கு பரிந்துரைக்கப்படுவர். பரிந்துரைக்கப்படும் விண்ணப்பதாரர்களில் இருந்து, தகுதி யானவர்களை தேர்வு செய்து, கலெக்டர் பணி நியமனம் செய்வார்,' என்றனர்.வெயிலில் காத்திருந்த பெண்கள் திருப்பூர் ஒன்றிய அளவிலான பள்ளிகளில், 11 அமைப்பாளர், ஆறு சமையலர் மற்றும் 10 உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அமைப்பாளர் பணியிடத்துக்கு 188; சமையலர் பணியிடத்துக்கு 15; உதவியாளர் பணியிடத்துக்கு 23 என 226 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில், தகுதிவாய்ந்த 184 பேர்களுக்கு மட்டும் நேர்காணல் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.அவர்களுக்கான நேர்காணல், திருப்பூர் ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. ஊரக வளர்ச்சி முகமை உதவி நிர்வாக பொறியாளர் தனபால் தலைமையிலான குழுவினர் நேர்காணல் நடத்தினர். முன்னதாக, கலையரங்க வளாகத்தில் விண்ணப்பதாரர்களின் அனைத்து அசல் சான்றிதழ்களும் சரிபார்க்கப்பட்டன. அதன்பின், வட்டார வளர்ச்சி அலுவலர் அறையில் நேர்காணலில் பங்கேற்றனர்.

அசல் சான்றிதழ் சரிபார்ப்பு நடந்த அரங்கில் போதுமான இட வசதி இருந்தும் கூட, விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஒவ்வொருவராக மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். வெளியேயும் அமர்ந்திருக்க ஏற்பாடு செய்யப்படவில்லை. இதனால், கைக்குழந்தைகளுடன் வெயிலில் பெண்கள் காத்திருந்தனர்.
அவிநாசி: அவிநாசி ஒன்றியத்தில் காலியாகவுள்ள 20 சத்துணவு அமைப்பாளர்கள், 19 சமையலர்கள், 13 உதவியாளர்கள் என 52 பதவிகளுக்கான நேர்முகத் தேர்வு நேற்று நடந்தது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி திட்டம்) முருகேசன், நேர்காணல் நடத்தினார். ஒன்றிய ஆணையாளர் சீனிவாசன், சேவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் உமா சங்கரி ஆகியோர் பங்கேற்றனர்.ஆணையாளர் கூறுகையில், "மொத்தமுள்ள 52 பணியிடங்களுக்கு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நேர்முக தேர்வு நடந்தது. மொத்தம் 688 பேர் விண்ணப்பித்தனர். தகுதியுடையவர்கள் மட்டுமே தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அடுத்த மாதம், அங்கன் வாடி பணியாளருக்கான நேர்முகத் தேர்வு நடக்கும்,' என்றார்.

ஆத்துப்பாளையத்தில் ரூ. 3 கோடி செலவில் மின் மயானம் பணிகளை மேயர் பார்வையிட்டார்


ஆத்துப்பாளையத்தில் ரூ. 3 கோடி செலவில் மின் மயானம் பணிகளை மேயர் பார்வையிட்டார்
 
திருப்பூர் ஆத்துப்பாளையத்தில் அரிமா சங்கம் சார்பில் பொதுமக்கள் பங்களிப்புடன் 3 கோடி ரூபாய் மதிப்பில் மின் மயானம் கட்டப்பட்டு வருகிறது. ஒரு ஹால், 2 எரியும் அடுப்பு, பணியாளர்கள் குடியிருப்பு உள்ளிட்ட வசதிகளுடன் மின் மயானம் கட்டப்பட்டு வருகிறது. 

மின்மயான கட்டிட பணிகளை மேயர் விசாலாட்சி அதிகாரிகளுடன் பார்வையிட்டார். கட்டுமான பணிக்கான மாநகராட்சி சம்பந்தமான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக கூறினார். 

மேலும் அருகில் இந்துக்கள் மயானம், கிறிஸ்தவ, முஸ்லிம் மயானங்கள் உள்ளன. மயானத்திற்கு பொதுமக்கள் சிரமம்மின்றி வந்து செல்ல மாநகராட்சி சார்பில் நிதி ஒதுக்கீடு செய்து மின் மயானத்தை சுற்றி சாலை வசதி, மின் மயானத்திற்கு முன் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தார் சாலை போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவதாக கூறினார். 

Monday 9 July 2012

பனியன் தொழிலை மீட்டெடுக்க...புத்துணர்வு முகாம்

திருப்பூர்:திருப்பூர் பனியன் தொழிலில் நிலவும் பிரச்னைகளை ஆராய்ந்து, சரியான தீர்வு காண்பதற்காக, பனியன் தொழில் புத்துணர்வு முகாம் நடத்தும் முயற்சியில், தொழில் துறையினர் இறங்கியுள்ளனர்.திருப்பூர் தொழில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு, பின்னலாடை தொழில் சற்று பின்னடைவை சந்தித்துள்ளது. ஆண்டுக்கு 15 சதவீத வளர்ச்சி பாதையில் இருந்த தொழில், 2009ம் ஆண்டு முதல் சரிவை சந்தித்து வருகிறது. மத்திய ஜவுளித்துறை கணிப்பின்படி, 2014ம் ஆண்டில் ஏற்றுமதி வர்த்தகம் 20 ஆயிரம் கோடி ரூபாயை எட்டும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது.எதிர்பாராத பிரச்னைகளால், பின்னலாடை தொழிலின் நிலை மாறி யது. உற்பத்திக்கான கட்டணத்தை உயர்த்திக் கொண்டதால், ரூபாய் மதிப்பில் பின்னலாடை ஏற்றுமதி உயர்ந்துள்ளது. இருப்பினும், வர்த் தக எண்ணிக்கையை கணக்கிடும் போது, சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பனியன் தொழில் சங்கிலித்தொடர் போன்ற "ஜாப் ஒர்க்' பிரிவுகளை கொண்டிருந்ததால், ஒட்டுமொத்த திருப்பூரும் இன்று பாதிக்கப்பட்டுள்ளது. சாயத்தொழில் பிரச்னை குறைந்து வரும் நிலையில், வங்கிக் கடனை மறுசீரமைப்பு செய்ய மத்திய அரசு பரிந்துரைத்தது ஆறுதல் அளிப்பதாக <உள்ளது. 2008ம் ஆண்டு முதல் நெருக்கடி உருவாகியதால், வெளிமாவட்ட தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப துவங்கினர். 2006ம் ஆண்டு வர்த்தகத்தை ஒப்பிடும் போது,தற்போது 50 முதல் 60 சதவீதம் மட்டுமே நடந்து வருகிறது. 
படிப்படியாக தொழிலாளர்கள் திருப்பூரை விட்டு வெளியேறிவிட்ட நிலையில், தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட துவங்கியுள்ளது. ஒட்டுமொத்த பனியன் தொழிலை பாதுகாப்பதற்காக, மத்திய, மாநில அரசு உதவியை பெறவேண்டியது கட்டாயமாகியுள்ளது. அதற்காக, பனியன் தொழில் புத்துணர்வு முகாம் நடத்துவதற்கான முயற்சியில் தொழில்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து, "டெக்மா' தலைவர் கோவிந்தசாமி கூறுகையில்,""சாயத்தொழில், மின்வெட்டு பிரச்னைகள் குறைந்துள்ளது. ஆர்டர் விசாரணையும் சாதகமாக உள்ளது. ஏற்றுமதி வர்த்தகம் வளர்ச்சி பாதை யில் திரும்பும் போது, தொழிலாளர் பற்றாக்குறை என்பது சவாலாக இருக்கும். கலெக்டர் முன்னிலையில் புத்துணர்வு முகாம் நடத்தி, வங்கி சலுகை பெறுவது, ஆர்டர்களை கவர்வது, மூலப்பொருட்கள் விலையை நிலைப்படுத்துவது, தொழிலாளர் பற்றாக்குறை குறித்து ஆலோசிக்கப்படும். ""இறுதியாக, அரசு வழிகாட்டுதலின்படி தொழில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்,'' என்றார்.

திருப்பூர் :திடக்கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்க திட்டம்!

திருப்பூர் : ""அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன், குப்பையில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் நவீன திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டு 

வருகின்றன,'' என கமிஷனர் செல்வராஜ் தெரிவித்தார். திருப்பூர் மாநகராட்சி பகுதியில், தினமும் 550 மெட்ரிக் டன் கழிவுகள் உருவாகின்றன. அவற்றில், 500 டன் சேகரம் செய்யப்படுகிறது. வெள்ளியங்காடு அருகே உள்ள பாறைக்குழியிலும், வெங்கமேடு மற்றும் சில பகுதிகளில் உள்ள பாறைக்குழிகளிலும் கொட்டப்படுகின்றன. நகரப்பகுதியில் உள்ள பாறைக்குழிகள் நிரம்பக்கூடிய நிலையில் உள்ளதால், நிரந் தர திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை துவக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. சென்னை உள்ளிட்ட சில மாநகராட்சிகளிலும், விருதுநகர் உள்ளிட்ட சில நகராட்சிகளிலும் நடைமுறையில் இருப்பதுபோல், குப்பை யில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை திருப்பூரில் நடைமுறைப்படுத்தினால், குப்பை பிரச்னையை எளிதாக கையாள முடியும். தெருவிளக்குகளுக்கு போதுமான மின்சாரமும் கிடைக்கும் என சமீபத்தில் கணக்கிடப்பட்டுள்ளது.

மேலும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை வெளியிட்டுள்ள கொள்கை விளக்க குறிப்பில், நடப்பு ஆண்டில் (2012-13), நகராட்சி திடக்கழிவுகள் (மேலாண்மை மற்றும் கையாளுதல்) விதிகளின்படி, திடக்கழிவு மேலாண்மை பணிகளை மேம்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.தொழில்நுட்ப ரீதியாக, திடக்கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் மூலமாக, கழிவுகளை அகற்றுவதுடன், மக்களின் பொது சுகாதாரமும் மேம்படுத்தப்படும். நவீன தொழில்நுட்பமும், நிதி உள்ளிட்ட வசதி வாய்ப் பும் மாநகராட்சி வசம் போதுமான அளவு இல்லை. எனவே, தனியார் பங்களிப்புடன் இத்திட்டத்தை செயல்படுத்தவும் தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. திருப்பூர் மாநகராட்சியில் இத்திட்டம் நிறைவேற்றும்போது, குப்பை பிரச்னை தீர்வதுடன், மின்சார தயாரிப்பு மூலமாக நிரந்தர வருவாய் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.
கமிஷனர் செல்வராஜ் கூறியதாவது:திருப்பூர் மாநகராட்சியில் உருவாகும் கழிவு கள் மற்றும் தினமும் சேகரிக்கப்படும் கழிவுகள் குறித்து புள்ளிவிவரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன. திடக்கழிவு மேலாண்மை 
திட்டத்தில், நவீன தொழில்நுட்பத்துடன் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. கடந்த மே 31ல் நடந்த மாமன்ற கூட்டத்தில் அதுதொடர்பான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மாநகராட்சியில் உருவாகும் திடக்கழிவு, நடைமுறையில் உள்ள திடக்கழிவு மேலாண்மை முறைகள் குறித்த முழு விவரம் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. சென்னை, சேலம் உள்ளிட்ட மாநகராட்சி
களில் இருப்பதுபோல், குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் குறித்து அறிக்கை அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.குப்பையை தரம் பிரித்து, உரம் மற்றும் மின்சாரம் தயாரிக்க பயன்படுத்துவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. மின்சார உற்பத்தி திட்டம் துவக்கப்படும்போது, தினமும் குறிப்பிட்ட அளவு திடக்கழிவு தேவைப்படும் என்பதால், அருகில் உள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளை ஒருங்
கிணைத்து, மின்உற்பத்தி செய்யும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பத்தில் திடக்கழிவு மேலாண்மை திட் டத்தை திருப்பூரில் செயல்படுத்த வாய்ப்புள் ளது. அதற்கு, தமிழக அரசின் வழிகாட்டுல்படி, நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, கமிஷனர் தெரிவித்தார்.

திருப்பூர் :தபால் துறையில் புதிய வசதி 40 கிலோ வரை பார்சல் அனுப்பலாம்!


 திருப்பூரில் உள்ள தபால் அலுவலகங்கள் மூலம் 40 கிலோ எடையுள்ள பொருட்களை "பார்சல்' சர்வீஸ் மூலம் மற்றவர்களுக்கு அனுப்பலாம். இதேபோல், வெளிநாடுகளுக்கும் அனுப்பும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.மொபைல்போன், இன்டர்நெட் என உலகம் விஞ்ஞான வளர்ச்சியில் சென்று கொண்டிருப்பதால், தபால் துறையின் கடித போக்குவரத்து அரிதாகி விட்டது. வருமானத்தை அதிகரிக்க, தபால் துறை - தனியாருடன் இணைந்து தங்க நாணயம் விற்பனை, "சோட்டா கூல்பிரிட்ஜ்' உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வருகிறது. தற்போது 40 கிலோ எடையுள்ள பொருட்களையும் "பார்சல்' அனுப்பும் வசதியை, இந்திய தபால் துறை ஏற்படுத்தியுள்ளது.தலைமை தபால் கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியம் கூறியதாவது:ஒன்று முதல் 40 கிலோ எடையுள்ள பொருட்களை கொண்டு செல்ல, "பிளாட் ரேட் பார்சல்' என்ற திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. பொருட்களை கொண்டு செல்வதற்குரிய "பாக்ஸ்' தபால் அலுவலகத்தில் இருக்கும். இந்தியாவுக்குள் பொருள் அனுப்ப ஒரு கிலோவுக்கு 125 ரூபாய்; 2.5 கிலோ 200; ஐந்து கிலோ 400 ரூபாய் செலுத்த வேண்டும். வெளிநாடுகளாக இருந்தால் ஒரு கிலோ 1,000 ரூபாய்; 2.5 கிலோ 1,500; ஐந்து கிலோ 2,500 ரூபாய் செலுத்த வேண்டும். அனுப்ப வேண்டிய பொருட்களை வாடிக்கையாளர்கள் கொண்டு வந்தால், தபால் 
அலுவலகத்தில் "பேக்கிங்' செய்து விமானம் மூலம் பொருட்களை அனுப்புவோம்.
பாக்ஸில் அனுப்பியவர் முகவரி, பெறுபவர் முகவரி குறிப்பிடப்பட்டிருக்கும்; பில் தரும்போது பாக்ஸில் உள்ள சீரியல் நம்பர் வாடிக்கையாளரிடம் வழங்கப்படும். அந்த சீரியல்நம்பரை சரிபார்த்து, பொருட்களை பெறுபவர்கள் பெற்றுக் கொள்ளலாம்.சிறிய பாக்ஸ்களை போல், பெரிய அளவில் 20 கிலோ முதல் 60 கிலோ வரை பாக்ஸ் கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்; பனியன், டவல்களை அனுப்ப "தனி பேக்கிங் கவர்' உள்ளது. இந்திய தபால் துறையின் நேரடி கட்டுப்பாட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதால், பொருட்களை நம்பி வழங்கலாம். 
பாதுகாப்பு காரணம் கருதி, கூர்மையான, எளிதில் தீப்பிடிக்க, வெடிக்கக்கூடிய பொருட்களை அனுப்ப வேண்டாம் என உயரதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பொருட்களை விமான நிலையத்தில் "கஸ்டம்ஸ்' அதிகாரிகள் பரிசோதனை செய்த பிறகே அனுப்பப்படும். பனியன் நிறுவனத்தினர் "சாம்பிள்' பீஸ் அனுப்ப இத்திட்டம் அருமையானது, என்றார்.

Sunday 8 July 2012

திருப்பூர்:அங்கன்வாடி பணி: மாற்றுத்திறனாளிகளுக்கு அவகாசம்

திருப்பூர்:அங்கன்வாடி பணியிடத்துக்கு விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் கால அவகாசமும், வயது வரம்பு தளர்வும் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.கலெக்டர் மதிவாணன் வெளியிட்டுள்ள அறிக்கை:திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 14 குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகங்களில், 193 அங்கன்வாடி பணியாளர்கள், 56 குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 209 மைய உதவியாளர்கள், நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர். அங்கன்வாடி பணிக்கு விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டுமென அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, இவர்களுக்கு வரும் 25ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வயது வரம்பும் தளர்த்தப்பட்டுள்ளது. அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் குறு மைய பணிக்கான விண்ணப்பதாரர்களுக்கு, கடந்த ஜூன் 1ம் தேதியுடன் 25 வயது பூர்த்தியானவராகவும், 38 வயதை கடக்காதவர்களாகவும் இருக்க வேண்டும்.மைய உதவியாளர் பதவிக்கான விண்ணப்பதாரர்கள், 25 வயது பூர்த்தியானவர்களாகவும், 43 வயதை கடக்காதவர்களாகவும் இருக்க வேண்டும். தகுதியுள்ள மாற்றுத் திறனாளிகள் (பெண்கள் மட்டும்), அந்தந்த வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களில், 25ம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதன் பின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. இவ்வாறு, கலெக்டர் கூறியுள்ளார்.

பல்லடம் அருகே ரூ. 20 ஆயிரம் கடனுக்காக தாளாளர் கன்னத்தில் அடித்ததால் ஆசிரியை தற்கொலை முயற்சி


பல்லடம் அருகே ரூ. 20 ஆயிரம் கடனுக்காக தாளாளர் கன்னத்தில் அடித்ததால் ஆசிரியை தற்கொலை முயற்சி
பல்லடம் வடுகபாளையம் ஆஸ்டல் வீதியை சேர்ந்தவர் பாலசரஸ்வதி (வயது 34). இவர் வடுகபாளையம்-சித்தம்பலம் ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். 

ஆசிரியை பாலசரஸ்வதி குடும்ப சூழ்நிலை காரணமாக தாளாளர் பாலசுப்பிரமணியிடம் 20 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். அந்த கடன் தொகையை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. ஆசிரியையின் குழந்தைகளும் அதே பள்ளியில் படிக்கிறார்கள். அவர்கள் படிப்புக்கு உரிய கட்டணத்தையும் கட்டச் சொல்லி பாலசுப்பிரமணி வலியுறுத்தியதாக தெரிகிறது. 

கடன் தொகையை உடனே தரச்சொல்லி வற்புறுத்தியதோடு ஆசிரியையை தரக்குறைவான வார்த்தைகளால் பாலசுப்பிரமணி திட்டியதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து அவர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் பள்ளி தாளாளர் ஆத்திரமடைந்து ஆசிரியையின் கன்னத்தில் பளார் என அறைந்ததோடு தலை முடியைப் பிடித்து இழுத்து தாக்கியதாகவும் தெரிகிறது. 

இந்த நிலையில் ஆசிரியை தனது வீட்டுக்குச் சென்று விட்டார். அங்கு சென்ற பள்ளி தாளாளர் மீண்டும் ஆசிரியையை மிரட்டியதாக தெரிகிறது. பக்கத்து வீட்டுக் காரர்கள் தாளாளரை சமரசப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். பள்ளி தாளாளர் வீடு வரை வந்து திட்டி விட்டாரே என மனவேதனை அடைந்த ஆசிரியை பாலசரஸ்வதி எறும்பு மருந்தை கரைத்து குடித்து விட்டார். 

மயங்கி விழுந்த அவரை பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து பல்லடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து பாலசுப்பிரமணியை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடக்கிறது.

ரூ.31 ஆயிரத்துக்கு ரூ.36 லட்சம் வட்டி: நிதி நிறுவன அதிபர் கைது


ரூ.31 ஆயிரத்துக்கு ரூ.36 லட்சம் வட்டி: நிதி நிறுவன அதிபர் கைது
உடுமலை அருகேயுள்ள ஜோத்தம்பட்டியை சேர்ந்தவர் மகாலிங்கம். இவர் கடந்த 1997-ம் ஆண்டு உடுமலை ஞானஜோதி பைனான்ஸ் உரிமையாளர் தங்கவேலிடம் ரூ. 31 ஆயிரம் கடன் வாங்கினார். அதற்காக 1.65 ஏக்கர் நிலத்தை பவர் எழுதி கொடுத்தார். மகாலிங்கம்தான் வாங்கிய பணத்துக்கு சரியான முறையில் வட்டி கட்டி வந்தார். இந்த நிலையில் மகாலிங்கத்துக்கு தெரியாமலேயே அவரது நிலத்தை தனது மைத்துனர் எஸ்.தங்கவேல் பெயருக்கு நிதி நிறுவன அதிபர் மாற்றி விட்டார்.
 
தனது நிலம் கைமாறி விட்டது என்பதை அறிந்த மகாலிங்கம் வில்லங்க சான்று எடுத்து பார்த்தார். நிலம் தங்கவேலுவின் மைத்துனர் எஸ்.தங்கவேல் பெயருக்கு மாற்றப்பட்டு தங்கவேலுவின் மனைவி வேலுமணி பெயருக்கு செட்டில்மெண்ட் செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.
 
இதுகுறித்து தங்கவேலிடம் கேட்டபோது ரூ. 31 ஆயிரத்துக்கு கந்து வட்டி கணக்கிட்டால் 36 லட்ச ரூபாய் தர வேண்டும். அதைதந்து விட்டு நிலத்தை மீட்டுக்கொள் என்று தடாலடியாக கூறிவிட்டார்.
 
இதுகுறித்து திருப்பூர் போலீஸ் சூப்பிரண்டு அஸ்ரா கர்க்கிடம் மகாலிங்கம் புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தனராசு வழக்குப்பதிவு செய்தார். மோசடி மற்றும் கந்து வட்டி கொடுமைகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தங்கவேலுவை கைது செய்தார். மேலும் அவரது மனைவி வேலுமணி, மைத்துனர் எஸ்.தங்கவேல் ஆகியோரை தேடி வருகிறார்.

Thursday 5 July 2012

திருப்பூர் ; 709 பணிக்கு 8,171 பேர் ஆசை சத்துணவு ஊழியர் பணி கிடைக்குமா?

: திருப்பூர் மாவட்டத்தில் சத்துணவு ஊழியர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தோருக்கு வரும் 10ல் நேர்காணல் நடக்கிறது. இதற்கான அழைப்பு கடிதம், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பும் பணி நடக்கிறது.திருப்பூர் மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கு கடந்த மாதம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மாவட்டம் முழுவதும் காலியாக உள்ள 184 அமைப்பாளர் பணி
யிடத்துக்கு 5,938 பேரும், 251 சமையலர் பணிக்கு 1,244 பேரும், 274 உதவியாளர் பணியிடத்துக்கு 989 பேரும் விண்ணப்பித்துள்ளனர். மொத்தமுள்ள 709 காலியிடங்களுக்கு 8,171 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவ்விண்ணப்பங்கள் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் பரிசீலிக்கப்பட்டன. விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பு கடிதம் அனுப்பும் பணி நடக்கிறது; வரும் 10ல் அந்தந்த உள்ளாட்சி அலுவலகங்களில் நேர்காணல் நடைபெற உள்ளது. தொடரும் விண்ணப்பங்கள்சத்துணவு பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் இன்னமும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் பரிந்துரை பெற்று வரும் விண்ணப்பங்கள், குறைகேட்பு நாளில் பெறப்பட்ட மனுக்கள், அரசு விழாக்களில் பங்கேற்கும் முக்கிய பிரமுகர்களிடம் அளிக்கப்படும் மனுக்கள் என ஏராளமான மனுக்கள் வந்த வண்ணம் உள்ளன. சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட மனுக்களை அளித்துள்ளனர். அவை பரிசீலிக்கப்பட்டு, தகுதியிருந்தால் ஒரு மனு மட்டும் ஏற்றுக்கொள்ளப்
படும். சான்றுகள் இணைக்காத மனுக்கள், தகுதியான நிர்ணயிக்கப்பட்ட பிரிவை சேராத மனுக்கள், காலியிடம் இல்லாத பள்ளியை குறிப்பிட்டு அளித்த மனுக்கள் நிராகரிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். திக்... திக்... மனநிலையில்...சத்துணவு அமைப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதில் ஆளுங்கட்சியினர் தலையீடு அதிகரித்துள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் பதவியில் உள்ள ஆளும்கட்சியினர் சிலர், இப்பணியிடங்களை பெற்றுத்தருவதாக, அப்பாவி மக்களிடம் பணம் வசூலித்து வருகின்றனர். ஆளுக்கும், வேலைக்கும் ஏற்ப ஒரு லட்சம், இரண்டு லட்சம் என பணம் பெற்றுள்ளனர். அரசியல்வாதிகளை நம்பி பணம் கொடுத்த பலரும், நேர்காணலில் தங்களுக்கு வேலை கிடைக்குமா என தவிப்புடன் காத்திருக்கின்றனர்.

Tuesday 3 July 2012

இலவச நாப்கின் வாங்கஅடையாள அட்டை

திருப்பூர்:தமிழக அரசின் இலவச நாப்கின் பெறும் பெண்களுக்கு அடையாள அட்டை வழங்குவது தொடர்பாக சுகா தாரத்துறை ஆலோசித்து வருகிறது.மாதவிடாய் காலங்களில் ஏற்படும் சிரமங்களை தவிர்க்க, வளர் இளம்பெண்கள், இளம்பெண்களுக்கு இலவச நாப்கின் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதுவரை 21 மாவட்டங்களில் இத்திட்டம் துவக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் செயல்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ஆண்டுக்கு மூன்று முறை தலா நான்கு நாப்கின் வீதம் மொத்தம் 12 பாக்கெட் வழங்கப்படுகிறது. இதற்காக, பெண்களுக்கு அடை யாள அட்டை வழங்குவது குறித்து சுகாதாரத்துறையினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
சுகாதாரத்துறையினர் கூறியதாவது:நாப்கின் திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல்கள் நிறைய உள்ளன. வீடு தேடி எடுத்துச் செல்லும்போது நாப்கின் பெறும் பயனாளிகள் இருப்பதில்லை. அவர் இல்லாமல் மற்றவரிடம் கொடுக்கக் கூடாது என அரசு அறிவுறுத்தியுள்ளதால், திருப்பி கொண்டு வர வேண்டியுள்ளது. ஒவ்வொரு முறை சுகாதார செவிலியர்கள் சென்று திரும்புவதால் நேர விரையம் ஏற்படுகிறது.இதை தவிர்க்க அடையாள அட்டை வழங்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம். இந்த அட்டையில் நாப்கின் பெற்றதற்கான விவரம், தேதி உள்ளிட்டவை பதிவு செய்யப்படும். குறிப்பிட்ட தேதியில் சுகாதாரத்துறையினர் பயனாளிகளுக்கு நாப்கின் வழங்கினார்களா என்பது தெரியவரும்.பெண்கள் தொடர்பான விஷயம் என்பதால், பல தரப்பிலும் யோசனை செய்து, அரசின் ஒப்புதல் பெற்றபின்பே, அடையாள அட்டை வழங்கப்படும், என்றனர்.

திருப்பூர்ரேஷன் கார்டு கம்ப்யூட்டரில் பதியும் பணி துரிதம்

திருப்பூர்:ரேஷன் கார்டு விவரங்கள், கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது; அத்தகவல்களை ஆன்-லைனில் பதிவு செய்ய அறிவுரை வழங்கப்பட்டது.ரேஷன் கார்டுகளில் பெயர் திருத்தம் செய்தல், பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கம் செய்தல், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்கள் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. இப்பணியை அந்தந்த ரேஷன் கடைகளில் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.மேலும், ரப்பர் ஸ்டாம்ப் மூலம் "2012' என முத்திரையிடப்பட்டு, அவற்றில் குடும்பத்தினர் குறித்த பெயர் விவரங் களில் திருத்தங்கள் செய்தல், முகவரி மாற்றம், குடும்ப நபர் எண் ணிக்கையில் சேர்த்தல் அல்லது குறைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அப்போது, திருப்பூர் மாவட்ட அளவில் 6.96 லட்சம் கார்டுகள் மட்டுமே பதியப்பட்டன. இதற்கு முன், 7.28 லட்சம் கார்டுகள் இருந்தன. அதனால், மீதமுள்ள கார்டுகள் போலி என அறிவிக்கப்பட்டு, பொருட்கள் சப்ளை நிறுத்தப்பட்டது.
அதன்பின், உரிய ஆவணங்களுடன் பதியப்பட்ட கார்டுகள், புதிதாக வழங்கப்பட்ட கார்டுகள் என தற்போது 7.03 லட்சம் கார்டுகள் உள்ளன. ரேஷன் கடைகளில் ஊழியர்கள் பதிவு செய்த விவரங்கள், வட்ட வழங்கல் அலுவலகங்களில் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி, கடந்த மூன்று மாதங்களாக மேற்கொள்ளப்பட்டன.இப்பணியின் தற்போதைய நிலை குறித்து "வீடியோ கான்பரன்சிங்'கில் மாநில குடிமைப் பொருள் வழங்கல் துறை ஆணையர் பஷீர் அகமது நேற்று ஆலோசனை நடத்தினார். கம்ப்யூட்டரில் பதியப்பட்ட கார்டுகள் குறித்த விவரங்கள் கேட்டறியப்பட்டன. இவ்வார இறுதிக்குள் அப்பணியை முழுமையாக முடிக்க அறிவுறுத்தப்பட்டது. மேலும், அனைத்து தகவல்களையும் ஆன்-லைனில் மாநில ஆணையத்தின் இணைய தளத்தில் பதிவு செய்யும் முறை குறித்தும் விளக்கப்பட்டது. அதன் அடிப்படையில், அனைத்து பகுதிகளிலும் கம்ப்யூட்டரில் பதியப்பட்டுள்ள விவரங்கள்ஆன்-லைனில் பதியும் பணி இன்று துவங்க உள்ளது.

திருப்பூர், "யாருக்கும் பாதிப்பு இல்லாத வகையில் ஆட்சியரக வளாகம் கட்ட வேண்டும்'


திருப்பூர், ஜூலை 2: திருப்பூர் மேற்கு பூம்புகார் நகரில் வசிக்கும் மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் புதிய மாவட்ட ஆட்சியரக வளாகம் கட்ட வேண்டும் என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், திருப்பூர் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான கே.தங்கவேல் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருப்பூர் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட மேற்கு பூம்புகாரில் வசிக்கும் பொது மக்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மா.கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு மாநகரக்குழு உறுப்பினரும், முன்னாள் நகர்மன்ற உறுப்பினருமான ஜி.ரத்தினசாமி தலைமை வகித்தார்.
இதில் பங்கேற்று சட்டப்பேரவை உறுப்பினர் கே.தங்கவேல் கூறியது:
புதிய மாவட்ட ஆட்சியரகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் நீதிமன்ற வளாகம் ஆகியவை ஒருங்கிணைந்த முறையில் அமைக்கப்படுவது இந்த மாவட்ட மக்களுக்கு பயனளிக்கும். அது வரவேற்கத்தக்கது.
அதேசமயம், புதிய வளாகம் கட்டும்போது மேற்கு பூம்புகார் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இப்பணியை நிறைவேற்ற வேண்டும். பாதிப்பு ஏற்படுமானால் மாற்று இடம், நிவாரணம் வழங்க வேண்டும். இந்த விஷயங்களில் அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும். இப்பணிக்காக சாமானிய மக்கள் குடியிருப்புகளை அகற்றக் கூடாது என்பது சட்டப்பேரவை உறுப்பினர் என்ற முறையில் தனது தனிப்பட்ட கோரிக்கை மட்டுமல்ல, மா.கம்யூ கட்சியின் முடிவும் இதுதான்.
ஏற்கனவே மாவட்ட ஆட்சியரகம் அமைப்பதற்கு இடம் தேர்வு நடைபெற்றபோது, அமைச்சராக இருந்த சண்முகவேலுவிடம் இப்பகுதி மக்களின் அச்சம் குறித்து நானும், தற்போது அமைச்சராக உள்ள எம்.எஸ்.எம்.ஆனந்தனும் முறையிட்டோம். இங்கு மாவட்ட ஆட்சியரகம் அமைவதாக இருந்தால், அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் மாற்று ஏற்பாடு செய்யவும், நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்வதாக அரசு சார்பில் உறுதியளித்தார்.
தற்போது ஆட்சியரக வளாகம் அமைவது உறுதியாகிவிட்ட நிலையில், அரசு சார்பில் அளிக்கப்பட்ட உறுதிமொழியை காப்பாற்ற வேண்டும் என வலியுறுத்துவோம் என்றார்.
கூட்டத்தில், கட்சியின் தெற்கு மாநகரச் செயலாளர் எம்.ராஜகோபால், பூம்புகார் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், வெள்ளியங்கிரி, சுரேஷ் மற்றும் மேற்கு பூம்புகார் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அவிநாசி வழித்தடத்தில் 4 புதிய பேருந்துகள் துவக்கம்




அவிநாசி, ஜூலை 1: அவிநாசி வழித்தடத்தில் 4 புதிய பேருந்துகளை அவிநாசி

 எம்எல்ஏ ஏ.ஏ.கருப்பசாமி வெள்ளிக்கிழமை துவக்கி வைத்தார்.
 ÷திருப்பூரில் இருந்து அவிநாசி, வடுகபாளையம் வழியாக கூட்டப்பள்ளி செல்லும் பேருந்து (வழித் தட எண்: 36), புளியம்பட்டியில் இருந்த மங்கரசவலையபாளையம், லட்சுமி நரசிம்மப் பெருமாள் கோயில், சேவூர், அவிநாசி வழியாக திருப்பூர் செல்லும் பேருந்து (வழித்தட எண்: 9ஜி-9இ), அவிநாசியில் இருந்து நேர்வழியாக புளியம்பட்டி செல்லும் பேருந்து (வழித்தட எண்:ஏ.ஆர்.10), அன்னூரில் இருந்து கருவலூர் வழியாக அவிநாசி வரையிலும், அவிநாசியில் இருந்து கருமத்தம்பட்டி வரையிலும் செல்லும் பேருந்து (வழித்தட எண்: ஏ.ஆர்.6) ஆகியவற்றை அவிநாசி எம்எல்ஏ கொடியசைத்து துவக்கி வைத்தார் (படம்).
 இதில், வட்டாட்சியர் க.பூங்காவன், அவிநாசி ஊராட்சி ஒன்றியத் தலைவர் பத்மநந்தினி, துணைத் தலைவர் சிவகாமி, அதிமுக ஒன்றியச் செயலர் மு.சுப்பிரமணியம், கோவை, திருப்பூர், மேட்டுப்பாளையம், நம்பியூர் போக்குவரத்து அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Sunday 1 July 2012

Tirupupathi darshan ticket booking details in tiurpur


கவுன்சிலர்களின் எதிர்ப்பால் துணை பேருந்து நிலைய தீர்மானம் ரத்து

திருப்பூர், ஜூன் 30: திருப்பூர் மாநகரில் துணை பேருந்து நிலையங்கள் அமைப்பதற்கான தீர்மானம் கவுன்சிலர்களின் கடும் எதிர்ப்பால் சனிக்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் ரத்து செய்யப்பட்டது.
 ÷திருப்பூர் மாநகரில், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் துணை பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என அண்மையில் நடந்த சாலைப் பாதுகாப்புக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
 ÷அதன்படி, தாராபுரம் சாலையில் உள்ள அரசு சித்த மருத்துவமனை முன் ரூ.97 லட்சம் மதிப்பிலும், காமராஜர் சாலை பேருந்து நிலையம் அருகே ரூ.82 லட்சம் மதிப்பிலும், மாநகராட்சி அலுவலகத்துக்கு தென்புறம் மங்கலம் சாலையில் ரூ.30 லட்சம் மதிப்பிலும் நிரந்தரமாக துணை பேருந்து நிலையங்கள் அமைப்பது என்று கடந்த மாதம் நடந்த மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
 ÷ஆனால், ஏற்கெனவே நெரிசல் மிகுந்த சாலைகளில் கூடுதலாக துணை பேருந்து நிலையங்கள் அமைப்பது மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும். எனவே துணை பேருந்து நிலையங்கள் தேவையில்லை என்று கவுன்சிலர்கள் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
 ÷இதைத் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்ட தீர்மானம், சனிக்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் மீண்டும் கொண்டுவரப்பட்டது. ஆனால், அப்போதும் கவுன்சிலர்கள் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், தீர்மானம் ரத்து செய்யப்படுவதாக மாநகராட்சி மேயர் அ. விசாலாட்சி தெரிவித்தார்.

திருப்பூரில் கூட்டுறவு மருந்தகம் திறப்பு

திருப்பூர், ஜூன் 30: திருப்பூரில் அரசு கூட்டுறவு மருந்தகம் சனிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது. இங்கு 15 சதவீத தள்ளுபடியில் மருந்துகள் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 ÷வருவாய்த்துறை மூலம் செயல்படுத்தப்படும் மக்கள் நலத் திட்டங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியர் எம். மதிவாணன் வரவேற்றார்.
 வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், பொதுப்பணித் துறை அமைச்சர் கே.வி. ராமலிங்கம், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் மற்றும் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
 ÷இக்கூட்டத்தில், வருவாய்த் துறையால் செயல்படுத்தப்படும் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் திட்டம், வீட்டுமனைப் பட்டா வழங்குதல், விரைவு பட்டா மாறுதல் திட்டம், தமிழக முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம், சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
 ÷கூட்டத்தில் பேசிய வருவாய்த் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், அரசு நலத் திட்டங்கள் அனைவருக்கும் பாரபட்சமின்றி வழங்கப்பட வேண்டும். வீட்டுமனைப் பட்டா, வாரிசு சான்றிதழ், முதியோர் உதவித் தொகை உள்ளிட்டவற்றை வழங்க வருவாய்த் துறையினர் விரைந்து செயலாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருப்பூர் மாவட்ட கல்விக்குழு சார்பில் இரண்டு நாள் பயிற்சி முகாம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருப்பூர் மாவட்ட கல்விக்குழு சார்பில் இரண்டு நாள் பயிற்சி முகாம்
திருப்பூர், ஜூலை.1- 
 
அவிநாசி ஒன்றியத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் திருப்பூர் மாவட்ட கல்விக்குழு சார்பில் இரண்டு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. ஆர்.ஏ.தோட்டத்தில் தொடங்கிய இந்த முகாமிற்கு கல்விக்குழு சார்பில் எஸ்.எஸ்.விஜயகுமார் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் கே.காமராஜ் முகாமைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். மாநில கல்விக்குழு பொறுப்பாளரும், மாநில செயற்குழு உறுப்பினருமான என்.குணசேகரன் முகாமின் நோக்கத்தை விளக்கி பேசினார்.
 
இதில் திருப்பூர் மாவட்ட கல்விக்குழு ஆசிரியர்களாக சுமார் 50 பேர் பங்கேற்றனர். மார்க்சிஸ்ட் தத்துவம், கட்சித் திட்டம், சோசலிச அனுபவம், தலைமைப் பண்பு உள்பட 20 தலைப்புகளில் பாடக்குறிப்புகள் வழங்கப்பட்டு அதில் இருந்து குறிப்பிட்ட தலைப்புகளில் ஆசிரியர்களாக பங்கேற்றோர் வகுப்பு நடத்தி பயிற்சி பெற்றனர்.

இலவச சட்ட உதவி மையத்தை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும்: நீதித்துறை நடுவர் வேண்டுகோள்


இலவச சட்ட உதவி மையத்தை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும்: நீதித்துறை நடுவர் வேண்டுகோள்
பல்லடம், ஜூலை. 1- 
 
உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பல்லடம் வட்ட சட்ட பணிகள் குழுவும் ஹேண்ட் இன் ஹேண்ட் தொண்டு நிறுவனமும் இணைந்து சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தினர்.
 
இதில் கலந்து கொண்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் மற்றும் தலைவர் பல்லடம் செல்வி பர்ஜாத் பேகம் பேசியதாவது:-
 
ஏழைகளுக்கான வரப்பிரசாதம் இந்த வட்ட சட்டப்பணிகள் குழுவின் இலவச சட்ட உதவி மையம். பணம் உள்ளவர்களால் மட்டுமே நீதித்துறையில் வழக்காட முடியும் என்ற நிலையை மாற்றி எழை எளிய மக்களும் இந்த இலவச சட்ட உதவி மையத்தின் வாயிலாக நீதிமன்றங்களை அணுக வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

நகை பறிப்பு - கொள்ளை வழக்கு: மதுரை சிறை வார்டன்கள் 2 பேர் கைது- 157 பவுன் நகை மீட்பு


நகை பறிப்பு - கொள்ளை வழக்கு: மதுரை சிறை வார்டன்கள் 2 பேர் கைது- 157 பவுன் நகை மீட்பு
திருப்பூர், ஜுலை. 1-

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கயம், பல்லடம், உடுமலை, தாராபுரம் பகுதிகளில் தொடர்ந்து நகை பறிப்பு  மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடந்தன. கொள்ளையர்களை பொறி வைத்து பிடிக்குமாறு கோவை ஐ.ஜி. சுந்தரமூர்த்தி உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினார்கள். 

போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜாராம் தலைமையில் திருப்பூர் தெற்கு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுந்தரராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ராஜகேசரன் மற்றும் போலீசார் பல்லடம் ரோட்டில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக மின்னல் வேகத்தில் ஒரு கார் வந்தது. அதை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். காருக்குள் பயங்கர ஆயுதங்கள் இருந்தன. 

இதைத்தொடர்ந்து காரில் வந்த 12 பேரை கைது செய்தனர். அவர்களிடம் வாகனத்தில் திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் நடை பெற்ற  நகை பறிப்பு, கொள்ளை சம்பவங்களில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. கைதானவர்கள் கொடுத்த தகவலின் பேரில் 157 பவுன் நகை மீட்கப்பட்டது.

மேலும் அவர்கள் வந்த கார், ஆயுதங்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன. கைதானவர்களில் பாண்டியராஜ், கார்த்தி ஆகிய 2 பேரும் மதுரை மத்திய சிறையில் வார்டன்களாக இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டவர்கள் என்பது  தெரிய வந்துள்ளது. மற்ற 10 பேரும் நாமக்கல், மதுரை, திருப்பூர், கோவை, சேலம், விழுப்புரத்தை சேர்ந்தவர்கள்.