போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Tuesday 3 July 2012

இலவச நாப்கின் வாங்கஅடையாள அட்டை

திருப்பூர்:தமிழக அரசின் இலவச நாப்கின் பெறும் பெண்களுக்கு அடையாள அட்டை வழங்குவது தொடர்பாக சுகா தாரத்துறை ஆலோசித்து வருகிறது.மாதவிடாய் காலங்களில் ஏற்படும் சிரமங்களை தவிர்க்க, வளர் இளம்பெண்கள், இளம்பெண்களுக்கு இலவச நாப்கின் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதுவரை 21 மாவட்டங்களில் இத்திட்டம் துவக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் செயல்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ஆண்டுக்கு மூன்று முறை தலா நான்கு நாப்கின் வீதம் மொத்தம் 12 பாக்கெட் வழங்கப்படுகிறது. இதற்காக, பெண்களுக்கு அடை யாள அட்டை வழங்குவது குறித்து சுகாதாரத்துறையினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
சுகாதாரத்துறையினர் கூறியதாவது:நாப்கின் திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல்கள் நிறைய உள்ளன. வீடு தேடி எடுத்துச் செல்லும்போது நாப்கின் பெறும் பயனாளிகள் இருப்பதில்லை. அவர் இல்லாமல் மற்றவரிடம் கொடுக்கக் கூடாது என அரசு அறிவுறுத்தியுள்ளதால், திருப்பி கொண்டு வர வேண்டியுள்ளது. ஒவ்வொரு முறை சுகாதார செவிலியர்கள் சென்று திரும்புவதால் நேர விரையம் ஏற்படுகிறது.இதை தவிர்க்க அடையாள அட்டை வழங்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம். இந்த அட்டையில் நாப்கின் பெற்றதற்கான விவரம், தேதி உள்ளிட்டவை பதிவு செய்யப்படும். குறிப்பிட்ட தேதியில் சுகாதாரத்துறையினர் பயனாளிகளுக்கு நாப்கின் வழங்கினார்களா என்பது தெரியவரும்.பெண்கள் தொடர்பான விஷயம் என்பதால், பல தரப்பிலும் யோசனை செய்து, அரசின் ஒப்புதல் பெற்றபின்பே, அடையாள அட்டை வழங்கப்படும், என்றனர்.

No comments:

Post a Comment