போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Sunday 8 July 2012

ரூ.31 ஆயிரத்துக்கு ரூ.36 லட்சம் வட்டி: நிதி நிறுவன அதிபர் கைது


ரூ.31 ஆயிரத்துக்கு ரூ.36 லட்சம் வட்டி: நிதி நிறுவன அதிபர் கைது
உடுமலை அருகேயுள்ள ஜோத்தம்பட்டியை சேர்ந்தவர் மகாலிங்கம். இவர் கடந்த 1997-ம் ஆண்டு உடுமலை ஞானஜோதி பைனான்ஸ் உரிமையாளர் தங்கவேலிடம் ரூ. 31 ஆயிரம் கடன் வாங்கினார். அதற்காக 1.65 ஏக்கர் நிலத்தை பவர் எழுதி கொடுத்தார். மகாலிங்கம்தான் வாங்கிய பணத்துக்கு சரியான முறையில் வட்டி கட்டி வந்தார். இந்த நிலையில் மகாலிங்கத்துக்கு தெரியாமலேயே அவரது நிலத்தை தனது மைத்துனர் எஸ்.தங்கவேல் பெயருக்கு நிதி நிறுவன அதிபர் மாற்றி விட்டார்.
 
தனது நிலம் கைமாறி விட்டது என்பதை அறிந்த மகாலிங்கம் வில்லங்க சான்று எடுத்து பார்த்தார். நிலம் தங்கவேலுவின் மைத்துனர் எஸ்.தங்கவேல் பெயருக்கு மாற்றப்பட்டு தங்கவேலுவின் மனைவி வேலுமணி பெயருக்கு செட்டில்மெண்ட் செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.
 
இதுகுறித்து தங்கவேலிடம் கேட்டபோது ரூ. 31 ஆயிரத்துக்கு கந்து வட்டி கணக்கிட்டால் 36 லட்ச ரூபாய் தர வேண்டும். அதைதந்து விட்டு நிலத்தை மீட்டுக்கொள் என்று தடாலடியாக கூறிவிட்டார்.
 
இதுகுறித்து திருப்பூர் போலீஸ் சூப்பிரண்டு அஸ்ரா கர்க்கிடம் மகாலிங்கம் புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தனராசு வழக்குப்பதிவு செய்தார். மோசடி மற்றும் கந்து வட்டி கொடுமைகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தங்கவேலுவை கைது செய்தார். மேலும் அவரது மனைவி வேலுமணி, மைத்துனர் எஸ்.தங்கவேல் ஆகியோரை தேடி வருகிறார்.

No comments:

Post a Comment