போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Monday 9 July 2012

திருப்பூர் :திடக்கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்க திட்டம்!

திருப்பூர் : ""அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன், குப்பையில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் நவீன திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டு 

வருகின்றன,'' என கமிஷனர் செல்வராஜ் தெரிவித்தார். திருப்பூர் மாநகராட்சி பகுதியில், தினமும் 550 மெட்ரிக் டன் கழிவுகள் உருவாகின்றன. அவற்றில், 500 டன் சேகரம் செய்யப்படுகிறது. வெள்ளியங்காடு அருகே உள்ள பாறைக்குழியிலும், வெங்கமேடு மற்றும் சில பகுதிகளில் உள்ள பாறைக்குழிகளிலும் கொட்டப்படுகின்றன. நகரப்பகுதியில் உள்ள பாறைக்குழிகள் நிரம்பக்கூடிய நிலையில் உள்ளதால், நிரந் தர திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை துவக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. சென்னை உள்ளிட்ட சில மாநகராட்சிகளிலும், விருதுநகர் உள்ளிட்ட சில நகராட்சிகளிலும் நடைமுறையில் இருப்பதுபோல், குப்பை யில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை திருப்பூரில் நடைமுறைப்படுத்தினால், குப்பை பிரச்னையை எளிதாக கையாள முடியும். தெருவிளக்குகளுக்கு போதுமான மின்சாரமும் கிடைக்கும் என சமீபத்தில் கணக்கிடப்பட்டுள்ளது.

மேலும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை வெளியிட்டுள்ள கொள்கை விளக்க குறிப்பில், நடப்பு ஆண்டில் (2012-13), நகராட்சி திடக்கழிவுகள் (மேலாண்மை மற்றும் கையாளுதல்) விதிகளின்படி, திடக்கழிவு மேலாண்மை பணிகளை மேம்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.தொழில்நுட்ப ரீதியாக, திடக்கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் மூலமாக, கழிவுகளை அகற்றுவதுடன், மக்களின் பொது சுகாதாரமும் மேம்படுத்தப்படும். நவீன தொழில்நுட்பமும், நிதி உள்ளிட்ட வசதி வாய்ப் பும் மாநகராட்சி வசம் போதுமான அளவு இல்லை. எனவே, தனியார் பங்களிப்புடன் இத்திட்டத்தை செயல்படுத்தவும் தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. திருப்பூர் மாநகராட்சியில் இத்திட்டம் நிறைவேற்றும்போது, குப்பை பிரச்னை தீர்வதுடன், மின்சார தயாரிப்பு மூலமாக நிரந்தர வருவாய் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.
கமிஷனர் செல்வராஜ் கூறியதாவது:திருப்பூர் மாநகராட்சியில் உருவாகும் கழிவு கள் மற்றும் தினமும் சேகரிக்கப்படும் கழிவுகள் குறித்து புள்ளிவிவரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன. திடக்கழிவு மேலாண்மை 
திட்டத்தில், நவீன தொழில்நுட்பத்துடன் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. கடந்த மே 31ல் நடந்த மாமன்ற கூட்டத்தில் அதுதொடர்பான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மாநகராட்சியில் உருவாகும் திடக்கழிவு, நடைமுறையில் உள்ள திடக்கழிவு மேலாண்மை முறைகள் குறித்த முழு விவரம் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. சென்னை, சேலம் உள்ளிட்ட மாநகராட்சி
களில் இருப்பதுபோல், குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் குறித்து அறிக்கை அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.குப்பையை தரம் பிரித்து, உரம் மற்றும் மின்சாரம் தயாரிக்க பயன்படுத்துவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. மின்சார உற்பத்தி திட்டம் துவக்கப்படும்போது, தினமும் குறிப்பிட்ட அளவு திடக்கழிவு தேவைப்படும் என்பதால், அருகில் உள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளை ஒருங்
கிணைத்து, மின்உற்பத்தி செய்யும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பத்தில் திடக்கழிவு மேலாண்மை திட் டத்தை திருப்பூரில் செயல்படுத்த வாய்ப்புள் ளது. அதற்கு, தமிழக அரசின் வழிகாட்டுல்படி, நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, கமிஷனர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment