போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Thursday 5 July 2012

திருப்பூர் ; 709 பணிக்கு 8,171 பேர் ஆசை சத்துணவு ஊழியர் பணி கிடைக்குமா?

: திருப்பூர் மாவட்டத்தில் சத்துணவு ஊழியர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தோருக்கு வரும் 10ல் நேர்காணல் நடக்கிறது. இதற்கான அழைப்பு கடிதம், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பும் பணி நடக்கிறது.திருப்பூர் மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கு கடந்த மாதம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மாவட்டம் முழுவதும் காலியாக உள்ள 184 அமைப்பாளர் பணி
யிடத்துக்கு 5,938 பேரும், 251 சமையலர் பணிக்கு 1,244 பேரும், 274 உதவியாளர் பணியிடத்துக்கு 989 பேரும் விண்ணப்பித்துள்ளனர். மொத்தமுள்ள 709 காலியிடங்களுக்கு 8,171 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவ்விண்ணப்பங்கள் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் பரிசீலிக்கப்பட்டன. விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பு கடிதம் அனுப்பும் பணி நடக்கிறது; வரும் 10ல் அந்தந்த உள்ளாட்சி அலுவலகங்களில் நேர்காணல் நடைபெற உள்ளது. தொடரும் விண்ணப்பங்கள்சத்துணவு பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் இன்னமும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் பரிந்துரை பெற்று வரும் விண்ணப்பங்கள், குறைகேட்பு நாளில் பெறப்பட்ட மனுக்கள், அரசு விழாக்களில் பங்கேற்கும் முக்கிய பிரமுகர்களிடம் அளிக்கப்படும் மனுக்கள் என ஏராளமான மனுக்கள் வந்த வண்ணம் உள்ளன. சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட மனுக்களை அளித்துள்ளனர். அவை பரிசீலிக்கப்பட்டு, தகுதியிருந்தால் ஒரு மனு மட்டும் ஏற்றுக்கொள்ளப்
படும். சான்றுகள் இணைக்காத மனுக்கள், தகுதியான நிர்ணயிக்கப்பட்ட பிரிவை சேராத மனுக்கள், காலியிடம் இல்லாத பள்ளியை குறிப்பிட்டு அளித்த மனுக்கள் நிராகரிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். திக்... திக்... மனநிலையில்...சத்துணவு அமைப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதில் ஆளுங்கட்சியினர் தலையீடு அதிகரித்துள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் பதவியில் உள்ள ஆளும்கட்சியினர் சிலர், இப்பணியிடங்களை பெற்றுத்தருவதாக, அப்பாவி மக்களிடம் பணம் வசூலித்து வருகின்றனர். ஆளுக்கும், வேலைக்கும் ஏற்ப ஒரு லட்சம், இரண்டு லட்சம் என பணம் பெற்றுள்ளனர். அரசியல்வாதிகளை நம்பி பணம் கொடுத்த பலரும், நேர்காணலில் தங்களுக்கு வேலை கிடைக்குமா என தவிப்புடன் காத்திருக்கின்றனர்.

No comments:

Post a Comment