போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Sunday 1 July 2012

கவுன்சிலர்களின் எதிர்ப்பால் துணை பேருந்து நிலைய தீர்மானம் ரத்து

திருப்பூர், ஜூன் 30: திருப்பூர் மாநகரில் துணை பேருந்து நிலையங்கள் அமைப்பதற்கான தீர்மானம் கவுன்சிலர்களின் கடும் எதிர்ப்பால் சனிக்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் ரத்து செய்யப்பட்டது.
 ÷திருப்பூர் மாநகரில், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் துணை பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என அண்மையில் நடந்த சாலைப் பாதுகாப்புக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
 ÷அதன்படி, தாராபுரம் சாலையில் உள்ள அரசு சித்த மருத்துவமனை முன் ரூ.97 லட்சம் மதிப்பிலும், காமராஜர் சாலை பேருந்து நிலையம் அருகே ரூ.82 லட்சம் மதிப்பிலும், மாநகராட்சி அலுவலகத்துக்கு தென்புறம் மங்கலம் சாலையில் ரூ.30 லட்சம் மதிப்பிலும் நிரந்தரமாக துணை பேருந்து நிலையங்கள் அமைப்பது என்று கடந்த மாதம் நடந்த மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
 ÷ஆனால், ஏற்கெனவே நெரிசல் மிகுந்த சாலைகளில் கூடுதலாக துணை பேருந்து நிலையங்கள் அமைப்பது மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும். எனவே துணை பேருந்து நிலையங்கள் தேவையில்லை என்று கவுன்சிலர்கள் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
 ÷இதைத் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்ட தீர்மானம், சனிக்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் மீண்டும் கொண்டுவரப்பட்டது. ஆனால், அப்போதும் கவுன்சிலர்கள் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், தீர்மானம் ரத்து செய்யப்படுவதாக மாநகராட்சி மேயர் அ. விசாலாட்சி தெரிவித்தார்.

No comments:

Post a Comment