போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Saturday 14 July 2012

உடுமலை அருகேரூ.5.89 லட்சத்தில் சோலாரில் கொப்பரை உலர் கலன் திறப்பு

உடுமலை அருகே ரூ. 5.89 லட்சத்தில் சோலாரில் கொப்பரை உலர் கலன் திறக்கப்பட்டன. குடிமங்கலம் ஒன்றியம் வீதம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், அரசின் ராஷ்டிரிய கிரிஷி விகாஸ் யோஜனா -தேசிய விவசாய வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஐந்து லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், சூரிய ஒளி கொப்பரை உலர்கலன் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. திருப்பூர் மண்டல இணைப்பதிவாளர் பாபு வரவேற்றார். தாராபுரம் சரக துணை பதிவாளர் முத்துக்குமார், கவுன்சிலர் தமயந்தி முன்னிலை வகித்தனர். கொப்பரை உலர் கலனை திறந்து வைத்து உடுமலை எம்.எல்.ஏ., ஜெயராமன் பேசியதாவது: கொப்பரைக்கான ஆதார விலை உயர்த்த தமிழக முதல்வர் மத்திய அரசினை வலியுறுத்தி வருகிறார். ஆனால், மத்திய அரசு கொப்பரை ஆதார விலையினை உயர்த்த பாராமுகம் காட்டி வருவது வேதனையளிக்கிறது. விலை உயரும் வரை தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தும். கொப்பரை உற்பத்திக்காக வீதம்பட்டியில், கொப்பரை இருப்பு வைக்க குடோன் வசதியுடன் கட்டப்பட்டுள்ளது. இந்த உலர்கலன்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் கொப்பரைக்கு ரசாயனம் பயன்படுத்த தேவையில்லை; இயற்கையான மற்றும் சுத்தமான தேங்காய் கொப்பரை உற்பத்தி செய்யலாம். இவ்வாறு எம்.எல்.ஏ., பேசினார். குடிமங்கலம் கள அலுவலர் செல்வம், வீதம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் செல்லமுத்து, உடுமலை கூட்டுறவு சங்க தனி அலுவலர் சாகுல் அமீது, ஒன்றியக்குழு தலைவர் முருகன், துணைத்தலைவர் முரளி உட்பட பலர் பங்கேற்றனர். இதேபோல், சின்னவீரம்பட்டியில், சோலார் ஒளி உலர் கலன் துவக்க விழா நடந்தது.

No comments:

Post a Comment