போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Monday 9 July 2012

பனியன் தொழிலை மீட்டெடுக்க...புத்துணர்வு முகாம்

திருப்பூர்:திருப்பூர் பனியன் தொழிலில் நிலவும் பிரச்னைகளை ஆராய்ந்து, சரியான தீர்வு காண்பதற்காக, பனியன் தொழில் புத்துணர்வு முகாம் நடத்தும் முயற்சியில், தொழில் துறையினர் இறங்கியுள்ளனர்.திருப்பூர் தொழில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு, பின்னலாடை தொழில் சற்று பின்னடைவை சந்தித்துள்ளது. ஆண்டுக்கு 15 சதவீத வளர்ச்சி பாதையில் இருந்த தொழில், 2009ம் ஆண்டு முதல் சரிவை சந்தித்து வருகிறது. மத்திய ஜவுளித்துறை கணிப்பின்படி, 2014ம் ஆண்டில் ஏற்றுமதி வர்த்தகம் 20 ஆயிரம் கோடி ரூபாயை எட்டும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது.எதிர்பாராத பிரச்னைகளால், பின்னலாடை தொழிலின் நிலை மாறி யது. உற்பத்திக்கான கட்டணத்தை உயர்த்திக் கொண்டதால், ரூபாய் மதிப்பில் பின்னலாடை ஏற்றுமதி உயர்ந்துள்ளது. இருப்பினும், வர்த் தக எண்ணிக்கையை கணக்கிடும் போது, சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பனியன் தொழில் சங்கிலித்தொடர் போன்ற "ஜாப் ஒர்க்' பிரிவுகளை கொண்டிருந்ததால், ஒட்டுமொத்த திருப்பூரும் இன்று பாதிக்கப்பட்டுள்ளது. சாயத்தொழில் பிரச்னை குறைந்து வரும் நிலையில், வங்கிக் கடனை மறுசீரமைப்பு செய்ய மத்திய அரசு பரிந்துரைத்தது ஆறுதல் அளிப்பதாக <உள்ளது. 2008ம் ஆண்டு முதல் நெருக்கடி உருவாகியதால், வெளிமாவட்ட தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப துவங்கினர். 2006ம் ஆண்டு வர்த்தகத்தை ஒப்பிடும் போது,தற்போது 50 முதல் 60 சதவீதம் மட்டுமே நடந்து வருகிறது. 
படிப்படியாக தொழிலாளர்கள் திருப்பூரை விட்டு வெளியேறிவிட்ட நிலையில், தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட துவங்கியுள்ளது. ஒட்டுமொத்த பனியன் தொழிலை பாதுகாப்பதற்காக, மத்திய, மாநில அரசு உதவியை பெறவேண்டியது கட்டாயமாகியுள்ளது. அதற்காக, பனியன் தொழில் புத்துணர்வு முகாம் நடத்துவதற்கான முயற்சியில் தொழில்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து, "டெக்மா' தலைவர் கோவிந்தசாமி கூறுகையில்,""சாயத்தொழில், மின்வெட்டு பிரச்னைகள் குறைந்துள்ளது. ஆர்டர் விசாரணையும் சாதகமாக உள்ளது. ஏற்றுமதி வர்த்தகம் வளர்ச்சி பாதை யில் திரும்பும் போது, தொழிலாளர் பற்றாக்குறை என்பது சவாலாக இருக்கும். கலெக்டர் முன்னிலையில் புத்துணர்வு முகாம் நடத்தி, வங்கி சலுகை பெறுவது, ஆர்டர்களை கவர்வது, மூலப்பொருட்கள் விலையை நிலைப்படுத்துவது, தொழிலாளர் பற்றாக்குறை குறித்து ஆலோசிக்கப்படும். ""இறுதியாக, அரசு வழிகாட்டுதலின்படி தொழில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்,'' என்றார்.

No comments:

Post a Comment