போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Sunday 15 July 2012

திருப்பூர்:கடையடைப்பு மற்றும் ரோடு மறியல் போராட்டம் நடத்தப்படும்.

திருப்பூர்:"முன்பு இருந்ததை போல், பழைய பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் நிறுத்த அனுமதிக்க வேண்டும்; இல்லாதபட்சத்தில், கடையடைப்பு மற்றும் ரோடுமறியல் போராட்டம் நடத்த வேண்டியிருக்கும்' என, கடை வியாபாரிகள் பேரவை எச்சரித்துள்ளது.திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டில், பராமரிப்பு பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது. தரைதள பணிகள் துவங்கப்பட்ட போது, 120 பஸ்கள், புது பஸ் ஸ்டாண்டுக்கு மாற்றப்பட்டன. பணிகள் நிறைவு பெற்ற பின்னும், பஸ்கள், பழைய பஸ் ஸ்டாண்டுக்கு வருவதில்லை என, சிறு வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாநகராட்சி கடை வியாபாரிகள் பேரவை தலைவர் முத்துசாமி, எஸ்.பி.,யிடம் அளித்துள்ள மனு:கடந்த 1987ம் ஆண்டு முதல், பஸ் ஸ்டாண்டில் வடக்கு பார்த்துள்ள 16 கடைகள் முன்பாக, உடுமலை, பொள்ளாச்சி, கரூர், கோவை பஸ்களும், 8 மற்றும் 10ம் நம்பர் டவுன் பஸ்களும் நின்று சென்றன. தெற்கு பார்த்துள்ள 17 முதல் எண் 31 வரையிலான கடைகளின் முன், மினி பஸ்கள், காங்கயம், முத்தணம்பாளையம் பஸ்கள், டவுன் பஸ்களில், 3பி, 3 சி, 3டி, 3இ, 15 பஸ்களும், பல்லடம் வழியாக செல்லும் 7, 18, 28, 13, 41, 22, 22ஏ பஸ்களும் நின்றுச் சென்றன.தற்போது பணிகள் முழுமை பெற்றிருந்தாலும், பஸ்கள் பழைய பஸ் ஸ்டாண்டில் நிறுத்தப்படுவதில்லை. மேலும், பெரும்பாலான மினி பஸ்களும் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை. பஸ் ஸ்டாண்டின் தெற்கு பகுதியில் பஸ்கள் நிற்காமல் வெறிச்சோடி காணப்படுகிறது. சிறு வியாபாரிகளால் வாடகை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, முன்பு இருந்ததை போல், மினி பஸ் உட்பட அனைத்து பஸ்களையும் பழைய பஸ் ஸ்டாண்டுக்குள் அனுமதிக்க வேண்டும். திருச்சி, மதுரை பஸ்களில், ஐந்து பஸ்களையாவது பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து இயக்க வேண்டும். தவறினால், சங்க <உறுப்பினர்கள் 400 பேர் சார்பில், கடையடைப்பு மற்றும் ரோடு மறியல் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு, முத்துசாமி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment