போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Wednesday 11 July 2012

ஆத்துப்பாளையத்தில் ரூ. 3 கோடி செலவில் மின் மயானம் பணிகளை மேயர் பார்வையிட்டார்


ஆத்துப்பாளையத்தில் ரூ. 3 கோடி செலவில் மின் மயானம் பணிகளை மேயர் பார்வையிட்டார்
 
திருப்பூர் ஆத்துப்பாளையத்தில் அரிமா சங்கம் சார்பில் பொதுமக்கள் பங்களிப்புடன் 3 கோடி ரூபாய் மதிப்பில் மின் மயானம் கட்டப்பட்டு வருகிறது. ஒரு ஹால், 2 எரியும் அடுப்பு, பணியாளர்கள் குடியிருப்பு உள்ளிட்ட வசதிகளுடன் மின் மயானம் கட்டப்பட்டு வருகிறது. 

மின்மயான கட்டிட பணிகளை மேயர் விசாலாட்சி அதிகாரிகளுடன் பார்வையிட்டார். கட்டுமான பணிக்கான மாநகராட்சி சம்பந்தமான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக கூறினார். 

மேலும் அருகில் இந்துக்கள் மயானம், கிறிஸ்தவ, முஸ்லிம் மயானங்கள் உள்ளன. மயானத்திற்கு பொதுமக்கள் சிரமம்மின்றி வந்து செல்ல மாநகராட்சி சார்பில் நிதி ஒதுக்கீடு செய்து மின் மயானத்தை சுற்றி சாலை வசதி, மின் மயானத்திற்கு முன் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தார் சாலை போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவதாக கூறினார். 

இதில் திருப்பூர் மாநரகாட்சி துணை மேயர் குணசேகரன், முதலாம் மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், அறக் கட்டளை தலைவர் கந்தசாமி, செயலாளர் மயில்சாமி, பொருளாளர் ஜீவானந்தம், பொறியாளர் சண்முகராஜன், செயற்பொறியாளர் சபியுல்லா, அம்மா பேரவை நகர செயலாளர் ஸ்டீபன்ராஜ், மற்றும் மாநகராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment