போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Wednesday 11 July 2012

திருப்பூர் சத்துணவு பணியிடங்களுக்கான நேர்காணல்



திருப்பூர் மாநகராட்சியில் 95 சத்துணவு பணியிடங்களுக்கான நேர்காணல் நேற்று துவங்கியது; கடிதம் கிடைத்த 347 பேர் மட்டுமே நேற்றைய நேர்காணலில் பங்கேற்றனர்.திருப்பூர் மாநகராட்சி பகுதியில் <உள்ள பள்ளிகளில், 19 சத்துணவு அமைப்பாளர் பணியிடங்கள், 23 சமையலர் மற்றும் 53 சமையல் உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அமைப்பாளர் பணிக்கு 2,000 பேர்; சமையலர் பணிக்கு 350; உதவியாளர் பணியிடத்துக்கு 150 பேர் என 2,500 பேர் விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பங்களை பரிசீலித்ததில், தகுதி வாய்ந்த 635 அமைப்பாளர் பணியிட விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் நேர்காணல் கடிதம் அனுப்பப்பட்டது. நேற்று முன்தினம் மாலை வரை கடிதம் அனுப்பப்பட்டது.

திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில், நேற்று மூன்று பிரிவுகளாக நேர்காணல் நடந்தது. துணை கமிஷனர் நிலையில் உள்ள அதிகாரிகளும், மருத்துவ அதிகாரிகளும் அடங்கிய குழுவினர் நேர்காணல் நடத்தினர். நேற்று காலை 11.00 முதல் பிற்பகல் 3.30 மணி வரை நடந்த நேர்காணல் நிகழ்ச்சியில் 347 பேர் பங்கேற்றனர். மீதியுள்ள 288 பேருக்கு இன்றும், சமையல் மற்றும் உதவியாளர் விண்ணப்பதாரர்களுக்கு நாளையும் நேர்காணல் நடக்கிறது. அதிகாரிகள் கூறுகையில், "நேர்காணலில், அசல் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, சத்துணவு பணி அமைப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டுள்ளனரா என்பது பரிசோதிக்கப்பட்டது. தகுதியான அனைவரும் கலெக்டர் முடிவுக்கு பரிந்துரைக்கப்படுவர். பரிந்துரைக்கப்படும் விண்ணப்பதாரர்களில் இருந்து, தகுதி யானவர்களை தேர்வு செய்து, கலெக்டர் பணி நியமனம் செய்வார்,' என்றனர்.வெயிலில் காத்திருந்த பெண்கள் திருப்பூர் ஒன்றிய அளவிலான பள்ளிகளில், 11 அமைப்பாளர், ஆறு சமையலர் மற்றும் 10 உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அமைப்பாளர் பணியிடத்துக்கு 188; சமையலர் பணியிடத்துக்கு 15; உதவியாளர் பணியிடத்துக்கு 23 என 226 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில், தகுதிவாய்ந்த 184 பேர்களுக்கு மட்டும் நேர்காணல் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.அவர்களுக்கான நேர்காணல், திருப்பூர் ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. ஊரக வளர்ச்சி முகமை உதவி நிர்வாக பொறியாளர் தனபால் தலைமையிலான குழுவினர் நேர்காணல் நடத்தினர். முன்னதாக, கலையரங்க வளாகத்தில் விண்ணப்பதாரர்களின் அனைத்து அசல் சான்றிதழ்களும் சரிபார்க்கப்பட்டன. அதன்பின், வட்டார வளர்ச்சி அலுவலர் அறையில் நேர்காணலில் பங்கேற்றனர்.

அசல் சான்றிதழ் சரிபார்ப்பு நடந்த அரங்கில் போதுமான இட வசதி இருந்தும் கூட, விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஒவ்வொருவராக மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். வெளியேயும் அமர்ந்திருக்க ஏற்பாடு செய்யப்படவில்லை. இதனால், கைக்குழந்தைகளுடன் வெயிலில் பெண்கள் காத்திருந்தனர்.
அவிநாசி: அவிநாசி ஒன்றியத்தில் காலியாகவுள்ள 20 சத்துணவு அமைப்பாளர்கள், 19 சமையலர்கள், 13 உதவியாளர்கள் என 52 பதவிகளுக்கான நேர்முகத் தேர்வு நேற்று நடந்தது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி திட்டம்) முருகேசன், நேர்காணல் நடத்தினார். ஒன்றிய ஆணையாளர் சீனிவாசன், சேவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் உமா சங்கரி ஆகியோர் பங்கேற்றனர்.ஆணையாளர் கூறுகையில், "மொத்தமுள்ள 52 பணியிடங்களுக்கு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நேர்முக தேர்வு நடந்தது. மொத்தம் 688 பேர் விண்ணப்பித்தனர். தகுதியுடையவர்கள் மட்டுமே தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அடுத்த மாதம், அங்கன் வாடி பணியாளருக்கான நேர்முகத் தேர்வு நடக்கும்,' என்றார்.

No comments:

Post a Comment