போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Tuesday 17 July 2012

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, தனித்தேர்வர்களுக்கு செப்டம்பரில் தேர்வு


திருப்பூர் : உடனடி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், தனியார் மையங்களில் படித்தவர்களுக்கான பத்தாம் வகுப்பு தனித்தேர்வு, வரும் செப்., மாத இறுதியில் துவங்குகிறது. செய்முறை தேர்வுக்கு வரும் 31 வரை விண்ணப்பிக்கலாம்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, கடந்த ஏப்., மாதம் நடந்தன. திருப்பூர் மாவட்டத்தில் 30 ஆயிரத்து 107 மாணவர்கள் தேர்வு எழுதினர்; 25 ஆயிரத்து 879 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்; 4,228 மாணவர்கள் தோல்வி அடைந்தனர். பல்வேறு பாடங்களில் தோல்வியடைந்தவர்கள், மீண்டும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று பள்ளியில் சேரும் வகையில் ஜூன் மாதம் உடனடி தேர்வு நடத்தப்பட்டது; ஆன்-லைனில் "ரிசல்ட்' வெளியிடப்பட்டது.

உடனடி தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள், பல்வேறு டியூசன் சென்டர்களில் படிக்கும் மாணவர்களுக்கான பத்தாம் வகுப்பு தனித்தேர்வு, வரும் செப்., மாதம் துவங்குகிறது. அறிவியல் பாட செய்முறை தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள், மீண்டும் செய்முறை தேர்வு எழுத வேண்டும். தனித்தேர்வர்களுக்கான செய்முறை தேர்வு விண்ணப்பங்கள், மாவட்ட கல்வி அலுவலகத்தில் வழங்கப்படுகிறது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களுடன், "மாவட்ட கல்வி அலுவலர், திருப்பூர்' என்ற முகவரிக்கு, 125 ரூபாய்க்கு டிடி எடுத்துக் கொடுக்க வேண்டும். தனித்தேர்வர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 31க்குள் மாவட்ட கல்வி அலுவலகத்தில் வழங்க வேண்டும் என, மாவட்ட கல்வி அலுவலர் ஜெயலட்சுமி தெரிவித்தார்.

No comments:

Post a Comment