போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Sunday 15 July 2012

மின்வாரியம் தகவல் மின் கம்பிகளை மாற்றிமைக்க முடிவு

திருப்பூர்:பலவஞ்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டடம் மீது தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளை மாற்றியமைக்க மின்வாரியம் முடிவு செய்துள்ளது.பலவஞ்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 410 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளி வளாகத்தில் உள்ள மின்கம்பத்தில் இருந்து, மின் கம்பிகள் மிகவும் தாழ்வாகச் செல்வதால், மாணவ, மாணவியருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது, என, "தினமலர்' நாளிதழில் போட்டோவுடன் செய்தி வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து அப்பள்ளியில் உள்ள மின்கம்பத்தையும், கம்பிகளையும் மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.மின்வாரிய செயற்பொறியாளர் மோகன் கூறியதாவது:பள்ளி வளாகத்தில் ஏற்கனவே உள்ள தாழ்வழுத்த மின்பாதை அருகில், மின்வாரியத்துக்கு தகவல் தெரிவிக்காமல் புதிதாக கட்டடம் கட்டப்பட்டுள்ளது. மேலும், மின்பாதையை மாற்றியமைக்கக் கோரி பள்ளி நிர்வாகமோ, வீரபாண்டி ஊராட்சியோ எவ்வித கடிதமோ, விண்ணப்பமோ அளிக்கவில்லை."தினமலர்' நாளிதழில் வந்த செய்தியை பார்த்ததும், பள்ளி வளாகத்தை மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உதவி தொடக்க கல்வி அலுவலருக்கு, தாழ்வழுத்த மின்பாதையை மாற்றியமைக்க விண்ணப்பம் அளிக்குமாறும், அதன் அடிப்படையில் மதிப்பீடு தயார் செய்து, அனுமதி பெற்று உடனடியாக மின்பாதை மாற்றியமைக்கிறோம் என்று கூறியுள்ளோம், என்றார்.

No comments:

Post a Comment