போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Saturday 14 July 2012

திருப்பூர்:மாநகராட்சிக்கு சொந்தமான சமுதாய நலக்கூடத்தில் சமுதாய கூடத்தில் மின் ஒயர் திருட்டு


திருப்பூர்:மாநகராட்சிக்கு சொந்தமான சமுதாய நலக்கூடத்தில் இருந்து மின் ஒயர்கள் திருடப்பட்டுள்ளன. திருப்பூர் பலவஞ்சிபாளையம் ஜெயலலிதா நகரில், வீரபாண்டி ஊராட்சியாக இருந்தபோது, 21 லட்சம் ரூபாய் செலவில் சமுதாய நலக்கூடம் அமைக்கப்பட்டது. இதில், திருமண நிகழ்ச்சி நடத்தும் வகையில், மூன்று பெரிய அறைகள் கட்டப்பட்டுள்ளன. மும்முனை மின் இணைப்பு, சமையல் பாத்திரம், சேர்கள் ஆகிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இது, மாநகராட்சி நான்காவது மண்டலத்தின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது.

இங்கு, வரும் 15ல் திருமண நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக சமுதாய நலக்கூடத்தில் பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மாநகராட்சி பணியாளர் முருகன், சமுதாய கூடத்தை திறந்து விளக்குகளை "ஆன்' செய்தபோது, ஒன்று கூட எரியவில்லை. நுழைவாயிலில் இருந்த டியூப்லைட் உடைக்கப்பட்டிருந்தது. மின்கம்பத்தில் இருந்து வரும் ஒயர்கள் துண்டிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.மாநகராட்சி பணியாளர் கூறுகையில், "மின்கம்பத்துக்கும், சமுதாய கூடத்துக்கும் இடையே, 70 அடி நீளத்துக்கு குழாய் மூலம் மும்முனை ஒயர் கொண்டு சென்று மின் இணைப்பு வழங்கப்பட்டிருந்தது. ஒயர் செல்லும் குழாய் வெளியே தெரியாத வகையில், நிலத்துக்குள் புதைக்கப்பட்டிருந்தது. ஆனால், மின்கம்பத்தின் அருகேயும், சமுதாய கூட சுவற்றின் அருகேயும் திறந்தவெளியில் குழாய் இருந்தது. இக்குழாய் வழியாக மின்சார ஒயர்கள் செல்வதை பார்த்த திருடர்கள், டியூப்லைட்டை உடைத்து விட்டு, குழாய்க்குள் இருந்த ஒயர்களை துண்டித்து திருடிச் சென்றுள்ளனர்,' என்றார்.

No comments:

Post a Comment