போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Tuesday 3 July 2012

திருப்பூர்ரேஷன் கார்டு கம்ப்யூட்டரில் பதியும் பணி துரிதம்

திருப்பூர்:ரேஷன் கார்டு விவரங்கள், கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது; அத்தகவல்களை ஆன்-லைனில் பதிவு செய்ய அறிவுரை வழங்கப்பட்டது.ரேஷன் கார்டுகளில் பெயர் திருத்தம் செய்தல், பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கம் செய்தல், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்கள் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. இப்பணியை அந்தந்த ரேஷன் கடைகளில் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.மேலும், ரப்பர் ஸ்டாம்ப் மூலம் "2012' என முத்திரையிடப்பட்டு, அவற்றில் குடும்பத்தினர் குறித்த பெயர் விவரங் களில் திருத்தங்கள் செய்தல், முகவரி மாற்றம், குடும்ப நபர் எண் ணிக்கையில் சேர்த்தல் அல்லது குறைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அப்போது, திருப்பூர் மாவட்ட அளவில் 6.96 லட்சம் கார்டுகள் மட்டுமே பதியப்பட்டன. இதற்கு முன், 7.28 லட்சம் கார்டுகள் இருந்தன. அதனால், மீதமுள்ள கார்டுகள் போலி என அறிவிக்கப்பட்டு, பொருட்கள் சப்ளை நிறுத்தப்பட்டது.
அதன்பின், உரிய ஆவணங்களுடன் பதியப்பட்ட கார்டுகள், புதிதாக வழங்கப்பட்ட கார்டுகள் என தற்போது 7.03 லட்சம் கார்டுகள் உள்ளன. ரேஷன் கடைகளில் ஊழியர்கள் பதிவு செய்த விவரங்கள், வட்ட வழங்கல் அலுவலகங்களில் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி, கடந்த மூன்று மாதங்களாக மேற்கொள்ளப்பட்டன.இப்பணியின் தற்போதைய நிலை குறித்து "வீடியோ கான்பரன்சிங்'கில் மாநில குடிமைப் பொருள் வழங்கல் துறை ஆணையர் பஷீர் அகமது நேற்று ஆலோசனை நடத்தினார். கம்ப்யூட்டரில் பதியப்பட்ட கார்டுகள் குறித்த விவரங்கள் கேட்டறியப்பட்டன. இவ்வார இறுதிக்குள் அப்பணியை முழுமையாக முடிக்க அறிவுறுத்தப்பட்டது. மேலும், அனைத்து தகவல்களையும் ஆன்-லைனில் மாநில ஆணையத்தின் இணைய தளத்தில் பதிவு செய்யும் முறை குறித்தும் விளக்கப்பட்டது. அதன் அடிப்படையில், அனைத்து பகுதிகளிலும் கம்ப்யூட்டரில் பதியப்பட்டுள்ள விவரங்கள்ஆன்-லைனில் பதியும் பணி இன்று துவங்க உள்ளது.

No comments:

Post a Comment