போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Sunday 15 July 2012

சுத்தமான சுற்றுச்சூழலை விட்டு செல்ல வேண்டும்

சுத்தமான சுற்றுச்சூழலை விட்டு செல்ல வேண்டும்
திருப்பூர்:""எதிர்கால சந்ததிகளுக்கு, சுத்தமான சுற்றுச்சூழலை விட்டுச் செல்ல வேண்டும்'' என, தொழிலதிபர்களுக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதி சதாசிவம் அறிவுறுத்தினார்.திருப்பூரில், மாவட்ட நீதிமன்றம், முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றம், நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், செக் மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் ஆகிய நீதிமன்றங்கள் துவங்க விழா மற்றும் காங்கயம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டடம் திறப்பு விழா, நேற்று காலை, ஐ.கே.எப்.,அரங்கில் நடந்தது.சுப்ரீம் கோர்ட் நீதிபதி சதாசிவம் திறந்து வைத்து பேசியதாவது: சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சுத்தமான காற்று, குடிநீர், சுகாதாரமான வாழ்க்கை வாழும் உரிமை அனைவருக்கும் உள்ளது. பணம் எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம்; ஆனால், எதிர்கால சந்ததிக்கு சுற்றுசூழலை நாம் எந்த அளவிற்கு மிச்சம் வைத்து சென்றுள்ளோம் என்பது தான் முக்கியம். நொய்யல் ஆற்றில், சாயக் கழிவு, சாக்கடை கழிவு கலக்கின்றன. தொழிலதிபர்கள் தங்கள் வருமானத்தில், குறிப்பிட்ட அளவு சுற்று சூழலை காக்க செலவிட வேண்டும். மத்திய,மாநில அரசுகளுடன் இணைந்து பாதிப்புகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வக்கீல்கள், தங்கள் கடமை உணர்ந்து செயல்பட வேண்டும். உயர் நீதிமன்ற, சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகள், கீழ் கோர்ட்டுகளின் அடிப்படையிலேயே அமைகிறது.
அதே போல், சாட்சிப் பதிவு விசாரணை , ஐ.டி.சட்டம், நில அபகரிப்பு, வெளிநாட்டு வர்த்தகத்தில் பிரச்னைகள் என, புதிய கோணத்தில் வழக்குகள் வருகின்றன. சட்டத்தில் திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றை நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும். வழக்குகளை மீடியேட்டர் மூலம் தீர்க்கும் முறை அமலுக்கு வர வேண்டும்.இலவச சட்ட உதவி மையம் குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அரசு அதிகாரிகள் , மக்களுக்கு செய்ய வேண்டிய காலக்கெடுவுக்குள் முடித்து தர வேண்டும். அல்லது, அதற்கான காரணத்தையாவது கூறி விட வேண்டும். மெத்தனமாக இருப்பதால், நீதிமன்றங்களுக்கு வழக்குகள் வருகின்றன. அரசு அதிகாரிகள் பொறுப்புடன் பணியாற்றினால், நீதி மன்றங்களுக்கு வரும் வழக்குகள் பாதி குறையும்.இவ்வாறு, சுப்ரீம் கோர்ட் நீதிபதி பேசினார்.
உயர் நீதிமன்ற நீதிபதி இக்பால் பேசுகையில், ""நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம், தமிழகத்தில் முதன் முறையாக திருப்பூரில் அமைக்கப்படுகிறது. சார்பு நீதிமன்றம் தொடர வேண்டும், ஜே.எம்., கோர்ட் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இந்திய நீதித்துறை உலகத்திலேயே சிறந்ததாக உள்ளது. காலியாக உள்ள நீதிபதிகளை நியமிக்க, உயர் நீதிமன்றத்திற்கு அனுமதியளிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடப்பட்டது. அரசு அனுமதியளித்ததால், ஐந்து மாதத்தில் 200 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒன்றரை ஆண்டுகளில், திருப்பூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கப்படும்,'' என்றார்.சட்ட அமைச்சர் சண்முகம் பேசுகையில், ""நீதிமன்றங்கள் சொந்த கட்டடங்களில் இயங்கவும், அடிப்படை கட்டமைப்புகள் மேம்படுத்தவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. காலை, மாலை, விடுமுறை நாட்களில் இயங்கும் வகையில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். சாலை விபத்துக்களில் பாதிக்கப்படுபவர்களுக்கு உடனடியாக நிவாரணம் கிடைக்க எட்டு நீதிமன்றங்களும், சார்பு நீதிமன்றங்கள் 17 , நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்க நீதிமன்றங்கள், மாற்று தீர்வு மையம், அதிநவீன கட்டமைப்பு வசதிகளுடன் கூடியவையாக நீதிமன்றங்கள் மாற்றம் என, மக்களுக்கு உடனடியாக நீதி கிடைக்கவும், நீதித்துறை மீது நம்பிக்கை ஏற்படுத்தவும், நீதித்துறையுடன் இணைந்து அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது, என்றார்.உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜோதிமணி, ஜனார்த்தனராஜா, ஜெயசந்திரன், சுந்தரேஷ், வாசுகி, இந்து அறநிலைய துறை அமைச்சர் ஆனந்தன் மற்றும் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டத்திலுள்ள நீதிபதிகள், வக்கீல்கள் பங்கேற்றனர்.

திருப்பூர்:""எதிர்கால சந்ததிகளுக்கு, சுத்தமான சுற்றுச்சூழலை விட்டுச் செல்ல வேண்டும்'' என, தொழிலதிபர்களுக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதி சதாசிவம் அறிவுறுத்தினார்.திருப்பூரில், மாவட்ட நீதிமன்றம், முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றம், நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், செக் மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் ஆகிய நீதிமன்றங்கள் துவங்க விழா மற்றும் காங்கயம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டடம் திறப்பு விழா, நேற்று காலை, ஐ.கே.எப்.,அரங்கில் நடந்தது.சுப்ரீம் கோர்ட் நீதிபதி சதாசிவம் திறந்து வைத்து பேசியதாவது: சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சுத்தமான காற்று, குடிநீர், சுகாதாரமான வாழ்க்கை வாழும் உரிமை அனைவருக்கும் உள்ளது. பணம் எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம்; ஆனால், எதிர்கால சந்ததிக்கு சுற்றுசூழலை நாம் எந்த அளவிற்கு மிச்சம் வைத்து சென்றுள்ளோம் என்பது தான் முக்கியம். நொய்யல் ஆற்றில், சாயக் கழிவு, சாக்கடை கழிவு கலக்கின்றன. தொழிலதிபர்கள் தங்கள் வருமானத்தில், குறிப்பிட்ட அளவு சுற்று சூழலை காக்க செலவிட வேண்டும். மத்திய,மாநில அரசுகளுடன் இணைந்து பாதிப்புகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வக்கீல்கள், தங்கள் கடமை உணர்ந்து செயல்பட வேண்டும். உயர் நீதிமன்ற, சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகள், கீழ் கோர்ட்டுகளின் அடிப்படையிலேயே அமைகிறது. அதே போல், சாட்சிப் பதிவு விசாரணை , ஐ.டி.சட்டம், நில அபகரிப்பு, வெளிநாட்டு வர்த்தகத்தில் பிரச்னைகள் என, புதிய கோணத்தில் வழக்குகள் வருகின்றன. சட்டத்தில் திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றை நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும். வழக்குகளை மீடியேட்டர் மூலம் தீர்க்கும் முறை அமலுக்கு வர வேண்டும்.இலவச சட்ட உதவி மையம் குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அரசு அதிகாரிகள் , மக்களுக்கு செய்ய வேண்டிய காலக்கெடுவுக்குள் முடித்து தர வேண்டும். அல்லது, அதற்கான காரணத்தையாவது கூறி விட வேண்டும். மெத்தனமாக இருப்பதால், நீதிமன்றங்களுக்கு வழக்குகள் வருகின்றன. அரசு அதிகாரிகள் பொறுப்புடன் பணியாற்றினால், நீதி மன்றங்களுக்கு வரும் வழக்குகள் பாதி குறையும்.இவ்வாறு, சுப்ரீம் கோர்ட் நீதிபதி பேசினார்.
உயர் நீதிமன்ற நீதிபதி இக்பால் பேசுகையில், ""நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம், தமிழகத்தில் முதன் முறையாக திருப்பூரில் அமைக்கப்படுகிறது. சார்பு நீதிமன்றம் தொடர வேண்டும், ஜே.எம்., கோர்ட் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இந்திய நீதித்துறை உலகத்திலேயே சிறந்ததாக உள்ளது. காலியாக உள்ள நீதிபதிகளை நியமிக்க, உயர் நீதிமன்றத்திற்கு அனுமதியளிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடப்பட்டது. அரசு அனுமதியளித்ததால், ஐந்து மாதத்தில் 200 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒன்றரை ஆண்டுகளில், திருப்பூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கப்படும்,'' என்றார்.சட்ட அமைச்சர் சண்முகம் பேசுகையில், ""நீதிமன்றங்கள் சொந்த கட்டடங்களில் இயங்கவும், அடிப்படை கட்டமைப்புகள் மேம்படுத்தவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. காலை, மாலை, விடுமுறை நாட்களில் இயங்கும் வகையில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். சாலை விபத்துக்களில் பாதிக்கப்படுபவர்களுக்கு உடனடியாக நிவாரணம் கிடைக்க எட்டு நீதிமன்றங்களும், சார்பு நீதிமன்றங்கள் 17 , நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்க நீதிமன்றங்கள், மாற்று தீர்வு மையம், அதிநவீன கட்டமைப்பு வசதிகளுடன் கூடியவையாக நீதிமன்றங்கள் மாற்றம் என, மக்களுக்கு உடனடியாக நீதி கிடைக்கவும், நீதித்துறை மீது நம்பிக்கை ஏற்படுத்தவும், நீதித்துறையுடன் இணைந்து அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது, என்றார்.உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜோதிமணி, ஜனார்த்தனராஜா, ஜெயசந்திரன், சுந்தரேஷ், வாசுகி, இந்து அறநிலைய துறை அமைச்சர் ஆனந்தன் மற்றும் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டத்திலுள்ள நீதிபதிகள், வக்கீல்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment