போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Sunday 1 July 2012

திருப்பூரில் கூட்டுறவு மருந்தகம் திறப்பு

திருப்பூர், ஜூன் 30: திருப்பூரில் அரசு கூட்டுறவு மருந்தகம் சனிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது. இங்கு 15 சதவீத தள்ளுபடியில் மருந்துகள் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 ÷வருவாய்த்துறை மூலம் செயல்படுத்தப்படும் மக்கள் நலத் திட்டங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியர் எம். மதிவாணன் வரவேற்றார்.
 வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், பொதுப்பணித் துறை அமைச்சர் கே.வி. ராமலிங்கம், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் மற்றும் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
 ÷இக்கூட்டத்தில், வருவாய்த் துறையால் செயல்படுத்தப்படும் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் திட்டம், வீட்டுமனைப் பட்டா வழங்குதல், விரைவு பட்டா மாறுதல் திட்டம், தமிழக முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம், சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
 ÷கூட்டத்தில் பேசிய வருவாய்த் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், அரசு நலத் திட்டங்கள் அனைவருக்கும் பாரபட்சமின்றி வழங்கப்பட வேண்டும். வீட்டுமனைப் பட்டா, வாரிசு சான்றிதழ், முதியோர் உதவித் தொகை உள்ளிட்டவற்றை வழங்க வருவாய்த் துறையினர் விரைந்து செயலாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
 வருவாய்த் துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் அக்டோபர் மாதத்திற்குள் நிரப்பப்படும் என்றார் அவர்.
 ÷தமிழக முதல்வர் அறிவிக்கும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அரசு அலுவலர்கள் தேவையான தகவல்களை எடுத்துக் கூறி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பொதுப்பணித் துறை அமைச்சர் கே.வி. ராமலிங்கம் கூறினார்.
 ÷முன்னதாக நடைபெற்ற விழாவில், திருப்பூர் மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில் வளர்மதி பாலம் அருகே அமைக்கப்பட்டுள்ள கூட்டுறவு மருந்தகத்தை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் திறந்து வைத்தார்.
 இந்த மருந்தகத்தின் மூலம் பொதுமக்களுக்கு 15 சதவீத தள்ளுபடியில் மருந்துகளை விற்பனை செய்ய கூட்டுறவுத்துறை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
 உலக கூட்டுறவு ஆண்டை முன்னிட்டு, திருப்பூர் மண்டலத்தில் 60 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழாவை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் அலுவலக வளாகத்தில் பொதுப்பணித் துறை அமைச்சர் கே.வி. ராமலிங்கம் தொடங்கி வைத்தார்.
 ÷கூட்டத்தில், திருப்பூர் மாநகர் மேயர் அ. விசாலாட்சி, மக்களவை உறுப்பினர் கே. சுகுமார், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. கழகத் தலைவர் கே. ராதாகிருஷ்ணன், சட்டப் பேரவை உறுப்பினர்கள் சி. சண்முகவேலு, கே.பி. பரமசிவம், என்.எஸ்.என். நடராஜ், என்.டி. வெங்கடாசலம், மாநகர துணை மேயர் சு. குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment