போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Sunday 1 July 2012

நகை பறிப்பு - கொள்ளை வழக்கு: மதுரை சிறை வார்டன்கள் 2 பேர் கைது- 157 பவுன் நகை மீட்பு


நகை பறிப்பு - கொள்ளை வழக்கு: மதுரை சிறை வார்டன்கள் 2 பேர் கைது- 157 பவுன் நகை மீட்பு
திருப்பூர், ஜுலை. 1-

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கயம், பல்லடம், உடுமலை, தாராபுரம் பகுதிகளில் தொடர்ந்து நகை பறிப்பு  மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடந்தன. கொள்ளையர்களை பொறி வைத்து பிடிக்குமாறு கோவை ஐ.ஜி. சுந்தரமூர்த்தி உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினார்கள். 

போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜாராம் தலைமையில் திருப்பூர் தெற்கு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுந்தரராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ராஜகேசரன் மற்றும் போலீசார் பல்லடம் ரோட்டில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக மின்னல் வேகத்தில் ஒரு கார் வந்தது. அதை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். காருக்குள் பயங்கர ஆயுதங்கள் இருந்தன. 

இதைத்தொடர்ந்து காரில் வந்த 12 பேரை கைது செய்தனர். அவர்களிடம் வாகனத்தில் திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் நடை பெற்ற  நகை பறிப்பு, கொள்ளை சம்பவங்களில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. கைதானவர்கள் கொடுத்த தகவலின் பேரில் 157 பவுன் நகை மீட்கப்பட்டது.

மேலும் அவர்கள் வந்த கார், ஆயுதங்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன. கைதானவர்களில் பாண்டியராஜ், கார்த்தி ஆகிய 2 பேரும் மதுரை மத்திய சிறையில் வார்டன்களாக இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டவர்கள் என்பது  தெரிய வந்துள்ளது. மற்ற 10 பேரும் நாமக்கல், மதுரை, திருப்பூர், கோவை, சேலம், விழுப்புரத்தை சேர்ந்தவர்கள்.   

No comments:

Post a Comment