போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Saturday 30 June 2012

பாசி நிறுவன மோசடி வழக்கில் முன்னாள் ஐ.ஜி. பிரமோத் குமாருக்கு ஜாமீன்


பாசி நிறுவன மோசடி வழக்கில் முன்னாள் ஐ.ஜி. பிரமோத் குமாருக்கு ஜாமீன்
சென்னை, ஜூன். 28 -

திருப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல் பட்டு வந்த பாசி நிறுவனம் முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.1500 கோடி வரை வசூல் செய்து மோசடி செய்தது. இதுதொடர்பாக நிதி நிறுவன இயக்குனர்கள் கமலவள்ளி, மோகன்ராஜ், கதிரவன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். 

இந்த நிலையில் பாசி நிறுவன இயக்குனர் கமலவள்ளியை கடத்தி வைத்து ரூ.3 கோடி பணம் பறித்ததாக அப்போதைய மேற்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்த பிரமோத்குமார் மீது புகார் எழுந்தது. 

இதையடுத்து சி.பி.ஐ. போலீசார் ஐ.ஜி. பிரமோத்குமாரை கைது செய்து கோவை கோர்ட்டில் ஆஜர் படுத்தி 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.  

பாசி நிறுவன இயக்குனர்கள் 3 பேரும் கோவை சிறையில் இருப்பதால் அதே வழக்கில் தொடர்புடைய ஐ.ஜி.பிரமோத்குமாரையும் ஒரே சிறையில் வைக்க கூடாது என்பதற்காகவும் சில நிர்வாக காரணங்கள் மற்றும் பாதுகாப்பு கருதி அவரை சென்னை புழல் சிறைக்கு மாற்றினர். 

இந்நிலையில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமோத்குமார் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. தினமும் விசாரணை அதிகாரி முன்பு அவர் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் அவருக்கு நிபந்தனை விதிக்கபட்டுள்ளது.

முன்னதாக கோவை நீதிமன்றத்தில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று பிரமோத்குமார் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் ஜூலை 12 வரை காவல் நீட்டிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment