போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Saturday 23 June 2012

தண்டவாளத்தை கடக்கக்கூடாது: பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்


திருப்பூரில் முதல் மற்றும் 2-வது ரெயில்வே கேட் பகுதி வழியாக தண்டவாளத்தை பொதுமக்கள் கடக்கும் போது அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
 
உயிர்பலிகளை தடுக்கும் வகையில் திருப்பூர் ரெயில்வே போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ் பெக்டர்கள் சத்திதாஸ், அப்பாத்துரை, ஏட்டு சிவக்குமார் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
 
தண்டவாளத்தை அஜாக்கிரதையாக கடப்பதால் ஏற்படும் விபரீதங்கள் குறித்து துண்டுபிரசுரங்களில் விழிப் புணர்வு வாசகம் அச்சிட்டு திருப்பூர் ரெயில் நிலையத்தில் நின்ற பொதுமக்களிடம் கொடுத்தனர்.
 
இதேபோல் முதல் ரெயில்வே கேட், இரண்டாவது ரெயில்வே கேட் பகுதியில் வாகன ஓட்டி கள், பொதுமக்களிடம் விழிப் புணர்வு ஏற்படுத்தினார்கள்.
 
குடிபோதையில் தண்டவாளத்தை கடக்கக்கூடாது. செல்போன் பேசியபடி செல் லக்கூடாது. காலைக்கடன் கழிக்க தண்டவாளத்தை கடந்து செல்லக்கூடாது. ரெயில்வே கேட் மூடிவிட்டால் இரு சக்கர வாகனங்களை ஓட்டிக்கொண்டு தண்ட வாளத்தை கடக்கக்கூடாது என்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
 
மேலும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விளம்பர பேனர்களையும் போலீசார் கைகளில் ஏந்தி பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். 

No comments:

Post a Comment