போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Saturday 30 June 2012

திருப்பூரில் போக்குவரத்து மாற்றம்


திருப்பூரில் போக்குவரத்து மாற்றம்
திருப்பூர்,ஜூன்.29-
 
திருப்பூரில் இன்று காலை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இந்த மாற்றம் குறித்த புதிய அறிவிப்பை திருப்பூர் போலீசார் வெளியிட்டுள்ளனர்.அதில் கூறி இருப்பதாவது:-
 
திருப்பூர்-ஊத்துக்குளி ரோட்டில் உள்ள இரண்டு ரயில்வே கேட்கள் ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது. ஊத்துக்குளி சாலையிலிருந்து கொங்கு மெயின் ரோடு, லட்சுமி நகர், திருநீலகண்டபுரம்,பவானி நகர் உட்பட்ட பகுதிகளுக்கு செல்வோர் முதல் ரயில்வே கேட் வழியாக செல்ல வேண்டும்.
 
இந்த பகுதிகளிலிருந்து ஊத்துக்குளி ரோட்டுக்கு வரும் வாகனங்கள், இரண்டாவது ரயில்வே கேட் வழியாகவும் செல்ல வேண்டும். யூனியன் மில் ரோட்டில், மூர்த்தி மெஸ் அருகேயுள்ள ரோடு 'ஒன்வே'யாக மாற்றப்படுகிறது.
 
மூர்த்தி மெஸ் வழியாக ஊத்துக்குளி ரோடு வரும் வாகனங்கள், கே.பி. என்., காலனி அல்லது வாவிபாளையம் வழியாக செல்ல வேண்டும்.ஊத்துக்குளி ரோடு வழியாக, பழைய பஸ் ஸ்டாண்ட் வரும் மொபசல் பஸ்கள், எஸ்.ஆர்.சி.,மில் ரயில்வே கேட்டிலிருந்து, இடது புறம் திரும்பி,கே.பி.என்., காலனி, மின் மயானம் வழியாக பழைய பஸ் ஸ்டாண்ட் செல்ல வேண்டும்.
 
திருப்பூர்,டவுன் ஹாலிலிருந்து நொய்யல் ஆற்று பாலம் வரை செல்லும் குமரன் ரோட்டில், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், டவுன் ஹாலிலிருந்து கோர்ட் ரோடு ஜங்சன் வரை உள்ள ரோட்டில், ஒரு புறம் மட்டுமே வாகனங்களை பார்க்கிங் செய்ய வேண்டும்.
 
எனவே,வடக்கு போலீஸ் ஸ்டேஷன், தாலுகா ஆபீஸ் காம்பவுண்ட் பகுதியில் மட்டுமே பார்க்கிங் செய்ய வேண்டும்.சர்ச் பகுதியில் பார்க்கிங் செய்ய கூடாது. கோர்ட் ரோடு ஜங்சனிலிருந்து ஆற்று பாலம் வரை குறுகிய ரோடாக உள்ளதால், சாலையில் இரு சக்கர வாகனங்கள் மட்டும், ஒரு மாதம் ஒரு புறமாகவும், மறு மாதம் எதிர்புறமாகவும் நிறுத்த வேண்டும்.
 
இவ்வாறு போலீசார் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment