போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Friday 22 June 2012

முதலீடுக்கு அதிக லாபம் தருவதாக ரூ.1.5 கோடி மோசடி; ஒருவர் கைது

திருப்பூர் : முதலீடுக்கு அதிக லாபம் தருவதாக கூறி, ரூ.1.5 கோடி வரை மோசடி செய்தவர்களில் ஒருவரை, திருப்பூர் போலீசார் கைது செய்தனர்; மற்றொருவரை தேடி வருகின்றனர்.
திருப்பூர், தாராபுரம் ரோடு செட்டிபாளையம் பேங்க் காலனியில், 
"குரோவ்பின் டிரேடு (பி) லிமிடெட்' என்ற பெயரில், திருப்பூர் பி.என்.,ரோடு, எஸ்.வி.காலனியை சேர்ந்த முத்துசாமி மகன் சுரேஷ்குமார் 30 மற்றும் காங்கயம் ரோடு, ராக்கியாபாளையம் பிரிவு, வி.ஜி.வி., விஜய் கார்டன் ஆவுடையப்பன் மகன் கந்தசாமி 71 ஆகியோர் நிதி நிறுவனம் நடத்தினர்.தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால், முதலீட்டு தொகையை 
"டிரேடிங்' செய்து , முதலீட்டு தொகையில் 10 சதவீதம் லாப ஈட்டு தொகை தருவதாகவும், ஒரு ஆண்டு கழித்து முதலீடு செய்த அசல் தொகை முழுவதையும் தருவதாக கவர்ச்சி விளம்பரம் செய்துள்ளனர். 10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால், மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் என 12 ஆயிரம் ரூபாய் வட்டி வழங்குவதோடு, ஆண்டு முடிந்ததும் டிபாசிட் செய்த 10 ஆயிரம் ரூபாய் திரும்ப வழங்கப்படும் என அறிவித்தனர்.
இதை நம்பி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கானோர் முதலீடு செய்துள்ளனர். ஆனால், முதலீட்டாளர்களுக்கு தொகையை திருப்பித் தராமல், 1.5 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததோடு, தலைமறைவாகினர். இதுகுறித்து, கோவை தொண்டாமுத்தூர் ரோடு, சக்தி நகர் பச்சையப்பன் மகன் குமாரசாமி மற்றும் 40 பேர், திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தனர்.
இன்ஸ்பெக்டர் தனராசு, எஸ்.ஐ., மல்லிகா தலைமையிலான போலீசார் குற்றவாளிகளை தேடிவந்தனர். திருப்பூரை காலி செய்துவிட்டு, மதுரையில் பதுங்கியிருந்த கந்தசாமியை கைது செய்தனர். மற்றொருவரான சுரேஷ்குமாரை தேடி வருவதோடு, மோசடி மூலம் முதலீட்டாளர்
களிடம் எவ்வளவு தொகை வசூலிக்கப்பட்டுள்ளது; அத்தொகை எங்கு பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment