போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Sunday 10 June 2012

திருப்பூர்:இனி, மது போதையில் வாகனம் ஓட்டினால் சிறை!


திருப்பூர்:மதுபானம் அருந்தி வாகனம் ஓட்டுவோரை கைது செய்து சிறையில் அடைக்க, இந்திய தண்டனை சட்டம் பிரிவு 279ன் கீழ், வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கைது செய்யப்பட்டால், ஆறு மாதம் சிறை அல்லது 1,000 ரூபாய் அபராதம் 
அல்லது இரண்டு தண்டனையையும் விதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இனி, குடிபோதையில் வாகனம் ஓட்டிச் செல்வோரை கைது செய்து சிறையில் அடைக்க திருப்பூர் எஸ்.பி., ஆஸ்ரா கர்க் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூரில், 106 "டாஸ்மாக்' மதுக்கடைகள் உள்ளன. அபரிமிதமாக மக்கள் தொகை, தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாக உள்ளதால், நகரில் மது விற்பனையும் அமோகமாக நடந்து வருகிறது. எந்நேரமும் மதுக்கடைகள், பார்களில் மதுபான பிரியர்கள் திரண்டிருப்பர். குடிப்பவர்களில் 70 சதவீதத்தினர், இரு மற்றும் நான்கு சக்கர 
வாகனங்களில் வீடுகளுக்கு திரும்புபவர்களாகவும், மது உற்சாகத்தில் அதிவேகமாக வாகனங்களை ஓட்டி விபத்துகளை ஏற்படுத்துபவர்களாகவும் உள்ளனர்.வழக்கமாக, நகரில் முக்கிய இடங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனை யில் ஈடுபடுவர். போதையில் சிக்குபவர்களை பிடித்து, அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மது அருந்தியுள்ளார் என சான்றிதழ் பெறுவர். தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்து, அவர் வந்த 
வாகனத்தை பறிமுதல் செய்துவிட்டு, வீட்டுக்கு அனுப்பி விடுவர்.மறுநாள், நீதிமன்றத்தில், 2,500 ரூபாய் வரை அபராதம் செலுத்தி விட்டு, வாகனத்தை மீட்டுச் செல்வர். மதுபானம் அருந்தி வாகனம் ஓட்டிய வகையில், சரா
சரியாக தினமும் 500 பேர் வரை சிக்கி வந்தனர். அவர்களில் பாதி பேர், நீதிமன்ற கணக்கில் வராமல், போலீசாரை "கவனித்து' தப்பி வந்தனர்.போலீசாரின் இந்நடவடிக்கை கடுமையாக இல்லாததால், குடிபோதையில் 
வாகனம் ஓட்டுபவர்கள், அதை குற்றமாக கருதாமலும், தங்களால் மற்றவர்களும் பாதிக்கின்றனர் என்பதை உணராமலும், தவறை தொடர்ந்து வருகின்றனர்; விபத்துகளும் அதிகரித்து வருகின்றன.

அதிரடி நடவடிக்கை
திருப்பூர் எஸ்.பி.,யாக பொறுப்பேற்றுள்ள ஆஸ்ரா கர்க், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கஞ்சா, லாட்டரி, சூதாட்டம், "டாஸ்மாக்' மதுக்கடை பார்களில், சட்ட விரோதமாக மது விற்பனை செய்தவர்களை கைது செய்து வருகிறார். லஞ்சம் பெற்ற இன்ஸ்பெக்டரை "சஸ்பெண்ட்' செய்து, போலீ
சாரையே பீதியடைய வைத்துள்ளார். அடுத்தகட்டமாக, குடிபோதையில் வாகனம் ஓட்டிச் சென்றால், சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.இ.த.ச., பிரிவு 279ன் கீழ், (மனித உயிர் முதலியவற்றுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் , முரட்டுத்தனமாகவோ, கவனமற்ற முறையில் பொதுப்பாதையில் 
வாகனம் ஓட்டுதல்) பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்ய வழிவகை உள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஆறு மாதம் சிறை அல்லது 1,000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டு தண்டனையும் சேர்த்து வழங்க வாய்ப்புள்ளது.
இனி, குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களை, போக்குவரத்து போலீசார் பிடித்தால், உடனடியாக போதைச்சான்று பெற்று, சட்டம்-ஒழுங்கு போலீசாரிடம் ஒப்படைப்பர். அவர்கள், வழக்குப்பதிவு செய்து, மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி, உடனடியாக சிறையில் அடைப்பர்.
சிக்குபவர்கள், போலீசாரை "கவனித்து' தப்பிக்க வாய்ப்பில்லை. ஏனெனில், போலீசார் லஞ்சம் பெறுவது தெரியவந்தால் "சஸ்பெண்ட்' செய்யப்படுவர் என எஸ்.பி., எச்சரித்து, பலர் மீது நடவடிக்கையும் எடுத்துள்ளார். இதனால், போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் "தெளிவு' 
அடைவதை தவிர, வேறு வழியில்லை.

No comments:

Post a Comment