போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Friday 8 February 2013

மீண்டும் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு : தொழில் துறையினர் அதிர்ச்சி


திருப்பூர் :திருப்பூரில் கடந்த இரண்டு மாதமாக மின்வெட்டு நேரம் குறைந்திருந்த நிலையில், மீண்டும் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டதால், தொழில்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

திருப்பூரில் நூற்பாலைகள், பின்னலாடை உற்பத்தி, அரிசி, ஆயில் மில்கள், விசைத்தறி, இயந்திரங்கள், பாத்திர உற்பத்தி,கோழி பண்ணைகள், விவசாயம், இயந்திரங்கள் உற்பத்தி என தொழில்கள் அதிகம் உள்ளன. தினமும் சராசரி, 700 முதல் 750 மெகாவாட் வரை, மின்சாரம் தேவைப்படுகிறது.கடந்த இரு மாதங்களாக, நகர பகுதிகளில் இரண்டு மணி நேரம்; கிராம பகுதிகளில் அதிகபட்சமாக நான்கு மணி நேரம் என்ற அளவிலேயே மின்வெட்டு இருந்தது. அடிக்கடி மின்வெட்டு ஏற்படாமல், சீராக குறிப்பிட்ட நேரம் மட்டும் ஏற்பட்டதால், பொதுமக்களும், தொழில் துறையினரும் நிம்மதியடைந்தனர்.


ஆனால், கடந்த சில நாட்களாக மீண்டும் மின்வெட்டு நேரம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. திடீர், திடீரென மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இரண்டு நாட்களாக தினமும் சராசரியாக, எட்டு மணி நேரம் வரை நகர பகுதிகளிலும், கிராம பகுதிகளில் 10 மணி நேரம் வரையிலும் மின் தடை ஏற்பட்டது. இதனால், பொதுமக்களும், தொழில் துறையினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கோடை காலம் துவங்குவதற்கு முன்பே, மின் வெட்டு நேரம் அதிகரித்துள்ளது; நீர் மின் உற்பத்தி குறைவு, மின் தேவை அதிகரிப்பு ஆகிய காரணங்களால், மின்வெட்டு மேலும் நேரம் அதிகரிக்கும் என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.

மேற்பார்வை பொறியாளர் நிர்மலதா கூறியதாவது:ரேணிகுண்டா மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட பழுதால், நமக்கு கிடைக்க வேண்டிய, 1,000 மெகாவாட் மின்சாரம் தடைபட்டுள்ளது. இதனால், மீண்டும் மின்வெட்டு நேரம் அதிகரித்துள்ளது. தடையில்லாமல் மின்சாரம் கிடைத்து வந்தபோது, 700 மெகாவாட் வரை திருப்பூர் மின் பகிர்மான வட்டத்தில் பயன்படுத்தப்பட்டது. தற்போது, 480 மெகாவாட் மட்டுமே கிடைத்து வருகிறது. இதனால், மீண்டும் எட்டு மணி நேரம் வரை மின் வெட்டு ஏற்படுகிறது. இரண்டு நாட்களுக்குள் நிலைமை சரியாகும். கோடை காலத்தில், காற்றாலை மூலம் மின் உற்பத்தியாக வாய்ப்புள்ளதால், மின்வெட்டு நேரம் அதிகரிக்க வாய்ப்பில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
"கோடை வரும் பின்னே... மின் வெட்டு வரும் முன்னே' :

மதுரை உட்பட தென்மாவட்டங்களில், மீண்டும் பல மணி நேர மின் வெட்டு அமலாகி உள்ளது. இது கோடையில் அதிகரிக்கும், என எதிர்பார்க்கப்படுகிறது.சென்னையை தவிர பிற மாவட்டங்களில், 2012 நவ., டிசம்பரில் நாள் ஒன்றுக்கு 18 மணி நேர மின் வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. 2012 துவக்கத்தில் இருந்தே மழையின்றி நீர்நிலைகள் வறண்டதால், மின் உற்பத்திக்கு வழியில்லை. காற்றாலை மின் உற்பத்தியும் ஏமாற்றியது. சில அனல் மின் நிலையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவும் மின் உற்பத்தி எதிர்பார்த்த அளவு இல்லை. இதனால் மின்வெட்டு அதிகமானது.

ஜன., துவக்கத்தில் நீர், அனல், காற்றாலை, எரிவாயு மூலம் மின் உற்பத்தி கணிசமாக உயர்ந்தது. இதனால், மின்வெட்டு நேரம் குறைக்கப்பட்டது. இரவில் மின் வெட்டு அமல்படுத்தப்படவில்லை. இந்நிலையில், தென்மாவட்டங்களில் சில நாட்களாக பகல், இரவில் மின் வெட்டு அதிகமாகி உள்ளது. இது கோடையில் மேலும் அதிகரிக்கும், என எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூர் நீர் மின் நிலையம், தூத்துக்குடி அனல் மின் நிலையம், பெரியாறு லோயர்கேம்ப்பில் மின் உற்பத்தி முடக்கம், நாள் ஒன்றுக்கு 3000 வரை கிடைக்கக்கூடிய காற்றாலை மின் உற்பத்தி, தற்போது வெறும் 600 மெகாவாட் என்ற நிலையில் நின்று விட்டதே இதற்கு காரணம். குத்தாலம், வழுதூர் இயற்கை எரிவாயு மின் உற்பத்தியில் மந்தநிலை காரணமாக, இந்த மின் வெட்டு நிலவுவதாக மின் வாரிய அதிகாரிகள் கூறினர். தெரிவிக்கிறது. 

No comments:

Post a Comment