போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Monday 6 August 2012

கல்குவாரி புழுதியால் குழந்தைகள் பாதிப்பு கலெக்டருக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

வேண்டும்,' என திருப்பூர் மாவட்ட கலெக்டருக்கு, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் கூலிபாளையம் பகுதியில் இயங்கும் விகாஸ் வித்யாலயா பள்ளிக்கு மிக அருகில், கருங்கல் ஜல்லி கல்குவாரி செயல்பட்டு வருகிறது. "கிரஷர்' குவாரியில் இருந்து எழும் புழுதியால், பள்ளி மாணவ, மாணவியர் பாதிப் படைகின்றனர். குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கப்படுவதாகவும், கல்குவாரியின் உரிமத்தை புதுப்பிக்கக் கூடாது எனவும் பெற்றோர்கள், கலெக்டரிடம் முறையிட்டுள்ளனர்.இந்நிலையில், வெள்ளியங்கிரி என்பவர், அப்பள்ளியில் படிக்கும் தனது குழந்தையின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பெற்றோரின் கோரிக்கைகளை
நிறைவேற்ற மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிடக்கோரியும், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். 
தலைமை நீதிபதிஇக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் விசாரித்தனர்.அவர்கள் அளித்த தீர்ப்பில், "பள்ளியில் இருந்து 300 மீட்டர் தொலைவில், அக்ரஹார பெரியபாளையம் பகுதியில் இயங்கும் கருங்கல் ஜல்லி குவாரியால் பள்ளி குழந்தைகள் உடல்நலன் பாதிக்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு பெறப்பட்ட கல்குவாரி உரிமத்துக்கான காலக்கெடு 2012ல் முடிவடைகிறது. உரிமத்தை புதுப்பிக்கவோ அல்லது புதிய உரிமம் பெறவோ உரிமையாளர்கள் உத்தேசித்துள்ளதாக,மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குவாரிக்கு உரிமத்தை புதுப்பிக்கும் முன்பாகவோ அல்லது புதிய உரிமம் வழங்குவதற்கு முன்பாகவோ, பெற்றோர்களின் கோரிக்கை மனுவை, திருப்பூர் மாவட்ட கலெக்டர் பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்று கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக மாவட்ட கனிம வளத்துறை உதவி இயக்குனர் முருகானந்தத்திடம் கேட்ட போது, ""கோர்ட் உத்தரவு நகல் இன்னும் வந்து சேரவில்லை; கிடைக்கப் பெற்றதும், அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசித்து முடிவெடுக்கப்படும்,'' என்றார்.

No comments:

Post a Comment