போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Monday 6 August 2012

திருப்பூர், நகை கடையில் திருடிய மூன்று பேர் கைது:

நகை கடையில் திருடிய மூன்று பேர் கைது: திருப்பூர், காங்கயம் கிராஸ் ரோட்டில் ஜூவல்லரி வைத்திருப்பவர் சபீர்; இவரது கடைக்கு வந்த, நிலக்கோட்டை ஆவாரம்பட்டியை சேர்ந்த காந்தி மனைவி வசந்தா 32; மொக்கை மனைவி பிச்சையம்மாள் 30; சின்னச்சாமி மனைவி கருப்பாயி 30 ஆகியோர், 60 ஆயிரம் மதிப்புள்ள ஆறு சவரன் தங்க நகைகளை திருட முயன்றனர். கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறையில்அடைத்தனர்.


கார் மோதி ஒருவர் பலி: காங்கயம், அரசம்பாளையம், ராயர்வலசை சேர்ந்த நாச்சிமுத்து மகன் பழனிசாமி 42; பைக்கில், காங்கயம் - திருப்பூர் ரோட்டில் சென்றபோது, பின்னால் வந்த கார் மோதியது. பலத்த காயமடைந்த பழனிசாமி, சம்பவ இடத்திலேயே பலியானார்.காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

லோடுமேன் பலி: பீகார், பர்சாரை சேர்ந்த போகவன் மகன் அனில்பஸ்வான் 25; லோடுமேன்; சரக்கு ஏற்றிய டெம்போவில் சென்றபோது, எதிரே வந்த லாரி மீது மோதியது. கீழே விழுந்த அனில்பஸ்வான் சம்பவ இடத்திலேயே பலியானார். தாராபுரம் போலீசார்விசாரிக்கின்றனர்.ஆற்றில் மூழ்கி மாணவர் பலி: தாராபுரம், தளவாய்பட்டணத்தை சேர்ந்த கருப்புசாமி மகன் சபரிநாதன் 18; தாராபுரத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில்
முதலாம் ஆண்டு படித்து வந்தார். அமராவதி ஆற்றுக்கு குளிக்கச் சென்றபோது, சுழலில் சிக்கி பலியானார். தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

இளம்பெண் மாயம்: திருப்பூர், கருவம்பாளையம் சுப்ரமணி மகள் தீபா 21; பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்றவர் திரும்பவில்லை. சென்ட்ரல் போலீசார் விசாரிக்கின்றனர்.

சமைக்கும்போது தீ விபத்து; பெண் பலி: மணியகாரம்பாளையம், கே.கே., காம்பவுண்டை சேர்ந்தவர்
சக்திவேல் ராஜா; பனியன் காண்ட்ராக்டர். அவரது மனைவி மகாலட்சுமி 27; திருமணமாகி நான்கரை ஆண்டுகள் ஆன நிலையில், மூன்று வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. கடந்த 27ம் தேதி, மகாலட்சுமி சமைத்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக உடையில் தீப்பிடித்து, உடல் கருகியது. பலத்த தீக்காயங்களுடன் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். ரூரல் போலீசார் விசாரிக்கின்றனர்.

நகை திருட்டு: திருப்பூர், கே.வி.ஆர்., நகர், சிவசக்தி நகரை சேர்ந்த பாரவேல் மகன் செல்லமுத்து 30; "டையிங்' தொழிற்சாலைகளுக்கு கெமிக்கல் சப்ளை செய்யும் தொழில் செய்து வருபவர். நேற்று முன்தினம் குடும்பத்துடன், பழனிக்கு சென்றிருந்தார். நேற்று வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த ஒரு சவரன் தங்க காசு நான்கு மற்றும் ஒரு சவரன் கம்மல் ஆகியவை திருடப்பட்டிருந்தது. திருப்பூர் சென்ட்ரல் போலீசார் விசாரிக்கின்றனர்.

No comments:

Post a Comment