போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Friday 17 August 2012

ஈமுவை தொடர்ந்து புது மோசடி அம்பலம் :செல்லமுத்து எச்சரிக்கை


பல்லடம் : ""ஈமுவை போல் தற்போது விவசாயிகளிடம் தேங்காய் மோசடி செய்வதில் சில நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இவ்விஷயத்தில் விவசாயிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்,'' என, உழவர் உழைப்பாளர் கட்சி மாநில தலைவர் செல்லமுத்து எச்சரிக்கை செய்துள்ளார். பல்லடத்தில் நிருபர்களிடம் செல்லமுத்து அளித்த பேட்டி:

விவசாயத்திற்கு நீர், மின்சாரம், ஆட்கள் பற்றாக்குறை, விளை பொருட்களுக்கு போதிய விலையின்மையால் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் விவசாயிகள் ஈமு கோழி வளர்ப்பில் முதலீடு செய்து பணத்தை இழந்துள்ளனர். மேலும், ஈமு கோழி நிறுவனங்கள் தரும் சொற்ப பணத்துக்கு நடிகர்களும் விளம்பரத்தில் நடித்து, விவசாயிகளுக்கு துரோகம் இழைத்துள்ளனர். இவர்கள் மீது வழக்கு தொடர்ந்து, இழப்பீடு தொகை பெற்று, பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
ஈமு கோழிப்பண்ணையாளர்கள் விவசாயிகளிடம் கொள்ளையடித்து சேர்த்த சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு அரசு வழங்க வேண்டும். இல்லாவிட்டால், உ.உ.கட்சி சார்பில் போராட்டம் நடக்கும்.தேங்காய் மோசடி? : தற்போது, சில நிறுவனங்கள் தங்களின் நிறுவனத்தில் ரூ.ஒரு லட்சம் முதலீடு செய்தால் 2,000 தேங்காய்கள் கொடுப்போம். அதை உடைத்து கொப்பரைகளாக தந்தால், அதற்கு உண்டான கூலி மற்றும் ரூ.6,000 போனஸ் வழங்கப்படும் என அறிவித்து வருகிறது. இதுவும் மோசடியானது. இதை விவசாயிகள் நம்பக்கூடாது, இவ்விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு, செல்லமுத்து

No comments:

Post a Comment