போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Wednesday 15 August 2012

தானியங்கி சேவை மையம் மூலம் கட்டணம் செலுத்த வரவேற்பு

                       திருப்பூரில் தானியங்கி சேவை மையம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் திட்டம் வரவேற்பை பெற்றுள்ளது. மாதந்தோறும் 20 ஆயிரம் பேர், அம்மையம் மூலம் மின் கட்டணம் செலுத்துகின்றனர். அதன் காரணமாக, மாவட்டம் முழுவதும் இத்திட்டத்தை விரிவுபடுத்தவும், கூடுதலாக இயந்திரங்கள் நிறுவவும் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.



                        திருப்பூர் மின் பகிர்மான வட்டத் தில், உயர் மின்னழுத்த இணைப்பு தொழிற்சாலைகள் 423; பனியன், விசைத்தறி என தொழில் நிறுவன மின் இணைப்புகள் 52 ஆயிரத்து 799; வணிக மின் இணைப்புகள் 79 ஆயிரத்து 50; வீட்டு மின் இணைப்புகள் 3 லட்சத்து 43 ஆயிரத்து 340 மற்றும் 17 வகையான மின் இணைப்பு பெற்ற நுகர்வோர்கள் என மொத்தம் 5 லட்சத்து 69 ஆயிரத்து 522 பேர் உள்ளனர்.மின் இணைப்புதாரர்கள், இரு மாதத்துக்கு ஒருமுறை கட்டணம் செலுத்துவது மிகப்பெரிய சிக்கலாக மாறியது. கட்டணம் செலுத்தவேண்டிய நாளன்று, மின்வாரிய அலுவலகத்தின் முன், பல மணி நேரம், நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. மின் கட்டணம் செலுத்த தாமதம் ஏற்பட்டதால், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் செய்தனர்.



                            இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண, மின் வாரியம் சார்பில் குமார் நகர், பி.என்.ரோடு, திரு
முருகன்பூண்டி, அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட், பாண்டியன் நகர் நூலகம் அருகில், செட்டிபாளையம், பழ
வஞ்சிபாளையம் பிரிவு பஸ் ஸ்டாப் அருகில், மணியகாரம்பாளையம் என ஏழு இடங்களில், தானியங்கி மின் கட்டண சேவை மையம் அமைக்கப்பட்டது.அங்குள்ள இயந்திரத்தில், மின் இணைப்பு எண்ணை பதிவு செய்தால், செலுத்த வேண்டிய கட்டணம் எவ்வளவு என தெரியும். ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கையை குறிப்பிட்டு, இயந்திரத்தில் பணத்தை செலுத்தி விடலாம். கூடுதலான தொகை செலுத்தினால், அடுத்த மின் கட்டணத்தில் சரி 
செய்யப்படும்.திருப்பூரில் இரண்டு லட்சம் மின் உபயோகிப்பாளர்கள் உள்ளனர்; நகரை சுற்றிலும் அமைக்கப்
பட்டுள்ள ஏழு மையங்கள் மூலம் மாதம்தோறும் சராசரியாக 20 ஆயிரம் பேர், மின் கட்டணம் செலுத்தி 
வருகின்றனர். இரண்டு லட்சம் பேரில், 10 சதவீதம் பேர் இம்முறைக்கு மாறியுள்ளனர். மின் கட்டணம் செலுத்த மிகவும் எளிதாக அமைந்திருப்பதாலும், வெகுநேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாததாலும், 
வார்டுக்கு ஒரு பகுதியில் தானியங்கி சேவை மையம் அமைக்கப்பட்டால் அனைவரும் இம்முறையை பயன்
படுத்த வசதியாக இருக்கும்.மேலும், தானியங்கி சேவை மையம் பகல் 12 மணி நேரம் மட்டும் இயங்குகிறது. இவற்றை 24 மணி நேரமும் இயக்க நடவடிக்கை எடுப்பதோடு, மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட காங்கயம், 
பல்லடம் உள்ளிட்ட அனைத்துபகுதிகளிலும் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.வங்கிகள் மூலம் மின் கட்டணம் செலுத்தும் திட்டத்தில், சிட்டி யூனியன் வங்கியில் மட்டுமே பணம் கட்டும் வசதி உள்ளது. இம்
முறையை இரண்டு சதவீதம் பேர் கூட பயன்படுத்துவதில்லை. ஒப்பந்தம் செய்துள்ள அனைத்து வங்கி
களுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்தினால், பயனுள்ளதாக இருக்கும்.மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் நிர்மலதா கூறுகையில், ""தானியங்கி சேவை மையம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் முறை நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுகுறித்து உயரதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் இத்திட்டத்தை விரிவுபடுத்தவும், கூடுதல் இயந்திரங்கள் நிறுவவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

No comments:

Post a Comment