போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Monday 24 September 2012

திருப்பூர் மின்னல் வேகத்தில் பறக்கும் வாகனங்கள் ரயில்வே மேம்பாலத்தில் அடிக்கடி விபத்து


திருப்பூர் : அதிக வேகத்தில், அஜாக்கிரதையாக செல்லும் வாகனங்களால், ரயில்வே மேம்பாலம், அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதியாக மாறி வருகிறது.
திருப்பூர் வடக்கு- தெற்கு பகுதிகளை இணைக்கும் மைய பகுதியாக ரயில்வே மேம்பாலம் உள்ளது. பி.என்., ரோடு, அவிநாசி ரோடு - குமரன் ரோடு, பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதிகளுக்கு வாகனங்கள் சென்றுவர முக்கிய வழித்தடமாக ரயில்வே மேம்பாலம் உள்ளது. பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினமும் மேம்பாலத்தை கடக்கின்றன. மேம்பாலம் ஏறி, இறங்கும் பகுதிகளில் அபாய
வளைவாக இருப்பதால், வாகனங்கள் மிதமான வேகத்தில் செல்ல வேண்டும்.
ஆனால், மேம்பாலத்தில் செல்லும் போது பெரும்பாலானோர், வாகனத்தின் வேகத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில்லை. மின்னல் வேகத்தில்
மேம்பாலத்தில் வாகனங்கள்பறப்பதால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.


                   குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள், முன் செல்லும் வாகனங்களை முந்துவதற்காக பிற வாகனங்களுக்கு இடையில் புகுந்து வேகமாக சென்று, சாகசம் காட்டுவோராலும் அடிக்கடி விபத்து நடக்கிறது. திருப்பூரில் விபத்துகள் அதிகம் நடக்கும் பகுதிகளில் ஒன்றாக, ரயில்வே மேம்பாலமும் மாறி வருகிறது.மேம்பாலத்தில் தொடரும் விபத்துகளை தடுக்க போக்குவரத்து போலீஸ் தரப்பில் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வாகனங்களின் வேகத்தை நிர்ணயிக்க வேண்டும்; 20 கி.மீ., வேகத்தில் மட்டுமே, மேம்பால பகுதியில் வாகனங்கள் செல்ல
அனுமதிக்க வேண்டும்.அதிக பாரம் ஏற்றிய வாகனங்களை மேம்பாலம் வழியாக செல்ல அனுமதிக்க கூடாது;

                 சில நேரங்களில், மேம்பாலத்தில் ஏற முடியாமல், நின்றுவிடும் பாரம் ஏற்றிய லாரிகளால் போக்குவரத்துமுற்றிலும் தடைபட்டு, பல இடங்
களில் வாகனங்கள் அணிவகுத்துநிற்கின்றன.அதேபோல மேம்பாலத்தில் மாட்டு வண்டிகள் செல்வதற்கும் தடைவிதித்து, மாற்று வழித்தடங்
களில் மாட்டு வண்டிகள் செல்லஏற்பாடு செய்ய வேண்டும். அதிக வேகத்தில் "பறக்கும்' வாகன ஓட்டிகளிடம், " ஸ்பாட் பைன்' வசூலித்து போலீசார், நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment