போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Wednesday 26 September 2012

திருப்பூர் : மின்வெட்டால் பாதிக்கப்படு வோருக்கு நிவாரணம் வழங்கக்கோரி, வரும் 1ல் வேலை நிறுத்த போராட் டம்


             திருப்பூர் : மின்வெட்டால் பாதிக்கப்படு வோருக்கு நிவாரணம் வழங்கக்கோரி, வரும் 1ல் வேலை நிறுத்த போராட் டம் நடத்தப் போவதாக, திருப்பூர் மாவட்ட கிரில் ஒர்க்ஷாப் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இச்சங்க செயற்குழு கூட்டம், அதன் அலுவலகத்தில் நேற்று நடந்தது. அதில், "கிரில் ஒர்க்ஷாப்புகளுக்கு, பகலில் எட்டு மணி நேரம் மின்சாரம் வழங்க வேண்டும். மீன்பிடி தடை காலங்களில் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குவதைபோல், மின்வெட்டு பாதிப்புகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.



          "மத்திய தொகுப்பில் இருந்தும், அவசரகால உதவியாகவும், 2,000 மெகாவாட் மின்சாரம் வழங்க வேண் டும்; மின்பாதையை சீரமைக்க வேண்டும். காவிரியில் தண்ணீர் திறந்தால், நீர்மின் திட்டத்தில் 400 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும். தண்ணீர் திறக்காத பட்சத்தில், நெய்வேலியில் இருந்து கர்நாடகத்துக்கு வழங்கும் 400 மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்துக்கு வழங்க வேண்டும்.


           "வள்ளூர் மின்திட்டம், வடசென்னை மின்திட்டங்களை போர்க் கால அடிப்படையில், முதல்வர், நேரடி கவனம் எடுத்து விரைந்து முடிக்க வேண்டும். குந்தா மின்திட்டம் மற்றும் புதிய திட்டங்களுக்கு மத்திய அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும். மின்தடை நேரங்களில், மின்சாரத்தை முழுமையாக தடை செய்யாமல், இரு முனை மின்சாரம் வழங்கி, குடிசை தொழில்கள் மற்றும் மருத்துவமனை, வீடுகள் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும்.


           "தமிழகம் முழுவதும் சீராக மின்தடையை அமலாக்கும் வகையில், பெரிய நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு, மானிய விலையில் டீசல் வழங்கி, பொதுமக்களுக்கும், சிறு தொழில்களுக்கும் சீராக மின்சாரம் வழங்க வேண்டும்,' என, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள கிரில் ஒர்க்ஷாப்புகள், வரும் அக்., 1ல் வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

No comments:

Post a Comment