போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Sunday 2 September 2012

நேர்மைக்கு கிடைத்த பரிசு? திருப்பூர் எஸ்.பி., திடீர் மாற்றம்


திருப்பூர் மாவட்டத்தில் அதிரடியாக செயல்பட்ட எஸ்.பி., ஆஸ்ரா கர்க், தர்மபுரிக்கு மாற்றப்பட்டார்.திருப்பூர் எஸ்.பி.,யாக ஆஸ்ரா கர்க், கடந்த ஜூன்.,4 ல் பொறுப்பேற்றார். அன்று முதல், தனது அதிரடி நடவடிக்கைகளால் மக்களிடம் நற்பெயர் பெற்றார். மக்களிடம் நேரடியாக குறை கேட்ட ஆஸ்ரா கர்க், உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொண்டார். இந்நிலையில், மூன்றே மாதத்தில் திடீரென தர்மபுரிக்கு நேற்று மாற்றப்பட்டார். தர்மபுரியில் பணியாற்றிய அமித்குமாரசிங் திருப்பூர் எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருப்பூர் எஸ்.பி.,யாக கடந்த ஜூனில் பொறுப்பேற்ற ஆஸ்ரா கர்க், "எக்காரணம் கொண்டும் போலீசார் லஞ்சம் வாங்க கூடாது; லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம்,' என போலீசாரை எச்சரித்தார். அத்துடன் நிற்காமல், லஞ்சம் பெற்ற ஒரு இன்ஸ்பெக்டர், நான்கு எஸ்.ஐ.,கள், மற்றும் போலீசார் பலரை சஸ்பெண்ட் செய்தார். போதையில் பணியாற்றியவர்கள், ஒழுங்காக பணிக்கு வராதவர்கள் என, 20 க்கும் மேற்பட்ட போலீசாரை ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றினார். "ஓவர் லோடு' ஏற்றி வந்த மணல் லாரிகளுக்கு அபராதம் விதித்தார்.

அதேபோல், திருப்பூரிலுள்ள கிளப்பில் சீட்டாடிய கொ.மு.க., பிரமுகர், மாஜி போலீஸ் அதிகாரியின் சகோதரர் உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யவும் நடவடிக்கை மேற்கொண்டார். இப்படி, அடுத்தடுத்து பல அதிரடிகளை அரங்கேற்றிய ஆஸ்ராகர்க்கை இடமாற்றம் செய்ய, "பாதிக்கப்பட்டவர்கள்' பகீரத முயற்சிகளில் இறங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இவர் தர்மபுரிக்கு மாற்றப்பட்டுள்ளார். இது, திருப்பூர் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.புதிய எஸ்.பி., உறுதிதிருப்பூருக்கு புதிய எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ள அமித் குமாரசிங், 2003 ம் ஆண்டில் ஐ.பி.எஸ்., முடித்தவர். தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் பணியாற்றியபின் தர்மபுரி எஸ்.பி.,யாக உள்ளார். அமித் குமார சிங் கூறுகையில்," சட்டம்-ஓழுங்கு பராமரிப்பு, குற்றத்தடுப்பு என அனைத்து கோணத்திலும் தனிக்கவனம் செலுத்தப்படும். ஆஸ்ரா கர்க் எடுத்த அதிரடி நடவடிக்கைகள் கண்டிப்பாக தொடரும்' என்றார்.

No comments:

Post a Comment