போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Tuesday 27 November 2012

தடையில்லா மின்சாரம் கோரி திருப்பூரில் இன்று ஆர்ப்பாட்டம்

திருப்பூர்:தடையில்லாமல் மின்சாரம் வழங்கக்கோரி, திருப்பூர் தொழில் துறையினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.தடையில்லாமல் மின்சாரம் வழங்கக்கோரி, திருப்பூர் தொழில் பாதுகாப்பு குழு மற்றும் தொழில் கூட்டமைப்பு சார்பில், "லட்சம் பேர்
பேரணி' நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. போலீஸ் அனுமதி மறுத்ததால், ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இன்று பிற்பகல் 3.00 மணிக்கு, மாநகராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. திருப்பூர், வெள்ளகோவில், காங்கயம், பல்லடம், அவிநாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 57 தொழில் அமைப்புகள், தொழிலாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் வரும் வாகனங்கள் மற்றும் மக்களால், நகரில் நெரிசல் ஏற்படாமல் இருக்கவும், போராட்டத்தில் பங்கேற்க உள்ளவர்கள் நேரடியாக மாநகராட்சி முன்பு வரும் வகையில், போக்குவரத்து மாற்றம் மற்றும் வாகன நிறுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.பல்லடம் ரோட்டிலிருந்து வரும் வாகனங்கள், சந்தைபேட்டை, டைமண்ட் தியேட்டர் வழியாக வந்து, மாநகராட்சிக்கு பின்புறம் உள்ள சிட்டி சென்டரில் "பார்க்கிங்' செய்ய
வேண்டும்.தாராபுரம் ரோடு, அரசு மருத்துவமனை பகுதியில் இருந்து வரும் வாகனங்கள், உஷா தியேட்டர், பழைய பஸ் ஸ்டாண்ட் வழியாக வந்து, சிட்டி சென்டர் வர வேண்டும். தாராபுரம், செவந்தாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள், நகருக்குள் வராமல், சந்திராபுரம் பிரிவு வழியாக சென்று, ராக்கியாபாளையம், வளம் பாலம் வழியாக மாநகராட்சிக்கு வர வேண்டும். மக்களை இறக்கிவிட்டு, மீண்டும் திரும்பிச் சென்று எம்.ஜி.பி., யுனிவர்சல் தியேட்டர் ரோட்டில் மின் மயானம் வரை "பார்க்கிங்' செய்யலாம்.
அவிநாசி ரோடு, பி.என்.,ரோடு உள்ளிட்ட வடக்கு பகுதியில் இருந்து வரும் வாகனங்கள், மேம்பாலம் வழியாக வந்து, எம்.ஜி.ஆர்., சிலை அருகே நிறுத்தி மக்களை இறக்கிவிட்டு, பார்க் ரோட்டில் "பார்க்கிங்' செய்ய வேண்டும்.
மங்கலம் ரோடு வழியாக வரும் வாகனங்கள் டைமண்ட் தியேட்டர் அருகே இறக்கிவிட்டு, ஆலங்காடு நடராஜா தியேட்டர் அருகே "பார்க்கிங்' செய்ய வேண்டும்.
வெள்ளகோவில், காங்கயம் ரோட்டில் வரும் வாகனங்கள், வளம் பாலம் வழியாக வந்து, எம்.ஜி.ஆர்., சிலை அருகே இறக்கிவிட்டு, எம்.ஜி.பி., அருகே "பார்க்கிங்' செய்ய வேண்டும். குமரன் ரோடு வழியாக வரும் மற்ற வாகனங்கள், யுனிவர்சல் தியேட்டர் ரோடு வழியாகவும், பஸ் ஸ்டாண்ட் வழியாக வரும் வாகனங்கள் மங்கலம் ரோடு வழியாகவும் செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.பங்கேற்கும் அமைப்புகள்பல்லடம் விசைத்தறிஉரிமையாளர்கள் சங்கம்,திருப்பூர் சலவை பட்டறை உரிமையாளர்கள் சங்கம்,
"டிக்மா', பாரதிய பனியன் வியாபாரிகள் சங்கம், "பிஸ்மா', காஜா பட்டன் உரிமையாளர்கள் சங்கம், செக்கிங், அயர்னிங் உரிமையாளர்கள் சங்கம், கள் இயக்கம், பாரதிய கிஷான் சங்கம், பாலிபேக் அசோசியேஷன், வெள்ளகோவில் ஓ.இ., மில் உரிமையாளர்கள் சங்கம், சைக்கிள் வியாபாரிகள் சங்கம், பாரதிய மஸ்தூர் சங்கம், மங்கலம் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம், அவிநாசி, அன்னூர், சோமனூர் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கங்கள்.பல்லடம் ஹைடெக் வீவிங் சங்கம், கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் சங்கம், கொங்கு பேரவை, நாடார் பேரவை, இந்து முன்னணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், "டெக்பா', புதிய பஸ் ஸ்டாண்ட் வியாபாரிகள் சங்கம், நடைபாதை வியாபாரிகள் சங்கம், கேபிள் அசோசியேஷன், சிஸ்பா, இரு சக்கர வாகன பழுது நீக்குவோர் சங்கம், காட்டன் பாக்ஸ் உற்பத்தியாளர்கள் சங்கம்.கெமிக்கல் வியாபாரிகள் சங்கம், பவர் டேபிள் அசோசியேஷன், பில்டிங் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன், ஈரோடு பனியன் வியாபாரிகள் சங்கம், கார்மென்ட் அசசரீஸ் அசோசியேஷன், கிரில் ஒர்க்ஷாப் உரிமையாளர்கள் சங்கம், ஹார்டுவேர்ஸ் அசோசியேஷன், பேக்கரி உரிமையாளர்கள் சங்கம், மாநகராட்சி வியாபாரிகள் சங்கம், லாரி உரிமையாளர்கள் சங்கம், மார்க்கெட் வியாபாரிகள் சங்கம், மில் ஜவுளி மொத்த வியாபாரிகள் சங்கம், திருப்பூர் ஆயில் விற்பனையாளர்கள் சங்கம், பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம், பிரிண்டிங் உரிமையாளர்கள் சங்கம்.
ரைசிங் அசோசியேஷன், அரிசி மண்டி வியாபாரிகள் சங்கம் முடி திருத்துவோர் சங்கம், செகண்ட்ஸ் வியாபாரிகள் சங்கம், மரக்கடை உரிமையாளர்கள் சங்கம், சிறு உற்பத்தியாளர்கள் சங்கம் நூல் வியாபாரிகள் சங்கம், தம்புள் டிரையர் அசோசியேஷன், விசைத்தறி ஜவுளி வியாபாரிகள் சங்கம், மகளிர் தொழில் பாதுகாப்பு இயக்கம், இந்து அன்னையர் முன்னணி உட்பட இன்னும் பல அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக, தொழில் பாதுகாப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment