போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Wednesday 28 November 2012

தடையில்லா மின்சாரம் வழங்கக் கோரி திருப்பூரில் தொழில் துறையினர் ஆர்ப்பாட்டம்


திருப்பூர்:தடையில்லாமல் மின்சாரம் வழங்கி, தொழில் துறையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மத்திய - மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில், திருப்பூரில் தொழில் துறையினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மின் பற்றாக்குறை காரணமாக, திருப்பூரில் 18 மணி நேரம் மின்வெட்டு நிலவுகிறது. தொழில் துறை கடுமையாக பாதிக்கப்பட்டு, தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். எனவே, திருப்பூருக்கு சிறப்பு கவனம் செலுத்தி, தடையற்ற மின்சாரம் வழங்கக்கோரி, தொழில் பாதுகாப்பு குழு மற்றும் தொழில் கூட்டமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 
தொழில் பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியம் தலைமை வகித்தார். 


பல்லடம் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் வேலுசாமி பேசுகையில்,

" விவசாயத்துக்கு அடுத்தபடியாக உள்ள ஜவுளி தொழிலை காக்க தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். புதிய மின் திட்டங்களை உருவாக்கவும், தமிழகத்துக்கு தேவையான மின்சாரத்தை தமிழக அரசு கொடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

ஓ.இ., மில் உரிமையாளர்கள் சங்க செயலாளர் சந்திரன் பேசுகையில், 

""திருப்பூர் தொழில் துறைக்கு, மின்வெட்டு மிகப்பெரிய பிரச்னையாக மாறியுள்ளது. சில நூறு பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் பன்னாட்டு கம்பெனிகளுக்கு, தடையில்லா மின்சாரம் வழங்கும் அரசு,திருப்பூருக்கு, வழங்க மறுப்பது வேதனை அளிக்கிறது,'' என்றார்.

தொழில் பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் கி÷ஷார் குமார் பேசுகையில், ""திருப்பூர் மாவட்டத்தில் 750 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், திருப்பூருக்கு தேவையான 500 மெகாவாட் மின்சாரம் கூட வழங்கப்
படுவதில்லை. மத்திய அரசு தமிழகத்துக்கு உரிமையான மின்சாரத்தை வழங்க வேண்டும். தற்போது புதிய ஆர்டர்கள் வருவதால், தடையில்லாமல் மின்சாரம் வழங்க வேண்டும்,'' என்றார்.

தொழில் பாதுகாப்பு குழு உயர்மட்ட குழு தலைவர் பழனிசாமி பேசுகையில், ""வெளிநாட்டு கம்பெனிகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதால், உள்நாட்டு உற்பத்தியாளர்கள் வீதிக்கு வந்து போராட வேண்டியுள்ளது. 
வெளிநாட்டினர் லாபம் கிடைக்கும் வரை இருப்பர்; லாபம் குறைந்தால் ஓடி 
விடுவர். அதனால், நம்நாட்டின் குடிமக்களையும், உள் நாட்டு தொழில்களை காக்க முன்னுரிமை கொடுக்க வேண்டும். இப்பிரச்னையில் மத்திய, மாநிலஅரசுகள் கவனம் செலுத்த வேண்டும்,'' என்றார்.

ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை நன்றி கூறினார்.
 ஆர்ப்பாட்டத்தில், திருப்பூர், பல்லடம், அவிநாசி, காங்கயம், வெள்ளகோவில் பகுதியில் இருந்து 2 ஆயிரம் பெண்கள் உட்பட 8 ஆயிரம் பேர் பங்கேற்றன

No comments:

Post a Comment