போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Saturday 27 October 2012

திருப்பூரில் நள்ளிரவில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி


திருப்பூரில் நள்ளிரவில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
திருப்பூர் யூனியன் மில் ரோட்டில் லட்சுமி விலாஸ் வங்கி ஏ.டி.எம். உள்ளது. எஸ்.பெரியபாளையத்தை சேர்ந்த முத்துசாமி (வயது 58) என்பவர் காவலாளியாக பணியாற்றி வருகிறார். நள்ளிரவு 2 மணி அளவில் ஆம்னி வேனில் 3 பேர் முகமூடி அணிந்தபடி வந்து இறங்கினர்.  அவர்களில் ஒருவன் வெளியே நின்று கொண்டான்.

மற்ற 2 பேர் ஏ.டி.எம். சென்டருக்குள் நுழைந்தனர். அவர்களில் ஒருவன் முத்துச்சாமியின் வாய் மற்றும் கை - கால்களை கட்டினான். மற்றொருவன் கடப்பாறையால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயன்றான். அப்போது அந்த வழியாக வாகனங்களில் சிலர் வந்தனர். வாகனங்களை பார்த்ததும் வெளியே நின்று கொண்டிருந்தவன்  சைகை காட்டினான். 

சுதாரித்துக்கொண்ட கொள்ளையர்கள் 3 பேரும்  காரை எடுத்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர். கட்டுகளை அவிழ்த்த முத்துசாமி உடனடியாக போலீசுக்கும், வங்கி கிளை மேலாளருக்கும் தகவல் தெரிவித்தார். திருப்பூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். ஏ.டி.எம். எந்திரத்தில் பதிவான கொள்ளையர்களின் கைரேகைகளும் பதிவு செய்யப்பட்டது. 

கொள்ளையர்கள் வந்த கார் குறித்து அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஈரோடு சூரம்பட்டி நால்  ரோடு  பகுதியில் ஈரோடு  தெற்கு  போலீசார் சந்தேகத்துக்கு இடமான வகையில் வந்த ஆம்னி வேனை நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த கார் நிற்காமல் சென்றது. 

போலீசார் துரத்திச்சென்ற போது காரை நிறுத்தி விட்டு இறங்கி  தப்பி  விட்டனர். போலீசார் அந்த வேனை பறிமுதல் செய்து விசாரித்து வருகிறார்கள். கொள்ளை முயற்சி பலிக்காததால் அதிலிருந்த ரூ. 5 லட்சம் தப்பியது.

No comments:

Post a Comment