போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Tuesday 2 October 2012

திருப்பூர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க புதிய நடைமுறை : படிவம் கொடுத்தால் வீட்டுக்கு தபால் வரும்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டசபை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. எட்டு லட்சத்து 86 ஆயிரத்து 652 ஆண்கள்; எட்டு லட்சத்து 54 ஆயிரத்து 841 பெண்கள்; 22 திருநங்கைகள், என, 17 லட்சத்து 41 ஆயிரத்து 515 வாக்காளர்கள் உள்ளனர். பட்டியலில் பெயர் சேர்க்க, புதிதாக படிவம் கொடுத்தால், அதன் உண்மைத்தன்மையை உறுதி செய்வதற்காக, தபால் துறை மூலமாக வீட்டுக்கு கடிதம் அனுப்பும் நடைமுறையை பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.


     தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, புதிய வாக்காளர்கள் சேர்க்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. அதற்காக, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டசபை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் மற்றும் துணை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. டி.ஆர்.ஓ., கஜலட்சுமி, அப்பட்டியலை வெளியிட்டார். ஆர்.டி.ஓ., முருகைய்யா, தாசில்தார் மோகன் பெற்றுக்கொண்டனர்.தொகுதி வாரியாக வாக்காளர்கள்:தாராபுரம்: 1,09,027 ஆண்கள்; 1,08,183 பெண்கள்காங்கயம்: 1,03,080 ஆண்கள்; 1,02,282 பெண்கள்; மூன்று திருநங்கைஅவிநாசி: 1,08,658 ஆண்கள்; 1,07,244 பெண்கள்; மூன்று திருநங்கைதிருப்பூர் வடக்கு: 1,31,062 ஆண்கள்; 1,19,543 பெண்கள்; 12 திருநங்கைதிருப்பூர் தெற்கு: 1,00,188 ஆண்கள்; 91,812 பெண்கள்; நான்கு திருநங்கைபல்லடம்: 1,32,292 ஆண்கள்; 1,24,599 பெண்கள்உடுமலை: 1,06,743 ஆண்கள்; 1,07,364 பெண்கள்மடத்துக்குளம்: 95,602 ஆண்கள்; 93,814 பெண்கள்மாவட்ட அளவில், எட்டு தொகுதிகளில் 1,979 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம், எட்டு லட்சத்து 86 ஆயிரத்து 652 ஆண்கள்; எட்டு லட்சத்து 54 ஆயிரத்து 841 பெண்கள், திருநங்கைகள் 22 என 17 லட்சத்து 41 ஆயிரத்து 515 வாக்காளர்கள் உள்ளனர். எட்டு தொகுதிகளில் 215 ஆண்கள்; 92 பெண்கள் என முப்படைகளில் பணியாற்றும் 307 வாக்காளர்கள் உள்ளனர்.31 வரை அவகாசம்மாநகராட்சி கமிஷனர் செல்வராஜ் கூறுகையில்,""வரைவு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் உள்ளதா என்று சரிபார்க்க வேண்டும். முகவரி, பெயர், போட்டோ ஆகியவை மாறியிருந்தாலோ, தவறாக இருந்தாலோ, அவற்றை நிவர்த்தி செய்வதற்கான விண்ணப்பங்களை கொடுக்க வேண்டும். வரும் 2013 ஜன., முதல் தேதியை தகுதி நாளாக கொண்டு, 18 வயதுடைய நபர்கள், வாக்காளர்களாக பட்டியலில் சேர்த்துக்கொள்ள விண்ணப்பிக்க லாம்.
      
      இப்பணி, வரும் 31 வரை நடைபெறும்,'' என்றார்.கட்சியினருடன் ஆலோசனைவாக்காளர் பட்டியல் திருத்த பணி குறித்த அனைத்து கட்சி கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. டி.ஆர்.ஓ., பேசியதாவது:வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த பணி ஒரு மாதம் நடக்கும். பூர்த்தி செய்த படிவங்களை, அந்தந்த ஓட்டுச்சாவடிகளிலும், சிறப்பு முகாம்களிலும் கொடுக்க வேண்டும். ஸ்கேன் செய்ய ஏதுவாக, போட்டோ மீது "பின்' அடிக்காமல், பசையால் ஒட்டியிருக்க வேண்டும்.ஒருவரே அதிகபட்ச படிவங்களை, பொதுமக்களிடம் பெற்றுக் கொடுக்கக் கூடாது. படிவங்களுக்கு தேர்தல் கமிஷன் வரிசை எண் வழங்கியுள்ளது. எண்கள் இல்லாத படிவங்களை பூர்த்தி செய்து கொடுத்தாலும், வரிசை எண்கள் உள்ள படிவத்துடன் இணைத்து பதிவுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.புதிதாக பதிவு செய்யும் 18 முதல் 24 வயது வரையுள்ளவர்கள் மட்டும் படிவம் 6ல் விண்ணப்பிக்க வேண்டும். திருத்தம் மற்றும் இட மாற்றம் குறித்த பணிகளுக்கு, படிவம் 7 மற்றும் படிவம் 8, 8ஏ ஆகிய படிவங்களில் விண்ணப்பிக்க வேண்டும். ஆர்.டி.ஓ.,க்கள் மூலமாக ஓட்டுச்சாவடி முகவர்களுக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்படும், என்றார்.தபால் மூலமாக பதில்கட்சி பிரதிநிதிகள் பேசுகையில்,"எண்கள் இல்லாத படிவங்களில் விண்ணப்பித்தாலும், எண்களை சேர்த்து பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு படிவத்தின் மீதான நடவடிக்கைகள் தொடர்பாக, சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு பதில் அளிக்க வேண்டும்,' என்றனர்.டி.ஆர்.ஓ., பதிலளிக்கையில், ""வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த படிவங்கள் உடனுக்குடன் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும். வரிசை எண்களுடன் பெயர் சேர்க் கப்படும். படிவங்கள் மீதான நடவடிக்கை விவரங்கள், "சிடி'யில் பதிவு செய்யப்பட்டு, விண்ணப்பத்தின் உறுதி தன்மையை அறிந்து கொள்வதற்காக, தபால் துறை மூலமாக, அந்தந்த விண்ணப்பதாரர்களுக்கு கடிதம் அனுப்ப ஏற்பாடு செய்யப்படும்,'' என்றார்.கூட்டத்தில், அ.தி.மு.க., - தி.மு.க., - தே.மு.தி.க., - காங்., உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகள், தேர்தல் பிரிவு அதிகாரிகள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment