போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Sunday 14 October 2012

காங்கேயம் பகுதியில் 14 மணி நேர மின் தடையால் அரிசி உற்பத்தி-எண்ணை ஆலைகள் பாதிப்பு


காங்கேயம் பகுதியில் 14 மணி நேர மின் தடையால் அரிசி உற்பத்தி-எண்ணை ஆலைகள் பாதிப்பு
காங்கயம் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து யூனியன் பகுதிகளுக்கு களிமேடு துணை மின்சார நிலையம் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. சுமார் 50 ஆயிரம் பேர் வாழ்ந்து வரும் இந்த காங்கயம் சுற்று வட்டார பகுதிகளுக்கு கடந்த சில மாதங்களாகவே நிலவி வரும் மின்சார தட்டுப்பாடு படிப்படியாக அதிகரித்து தற்போது கடுமையாக அனைவரின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கும் அளவுக்கு அதிகரித்துள்ளது. 

மின்சாரத்தையே நம்பியுள்ள பொதுமக்களும், வியாபாரிகளும், தற்போது மிகவும் நொந்து போகும் அளவுக்கு மின்சாரம் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். 

தமிழக அளவில் அரிசி உற்பத்திக்கு பெயர் பெற்ற காங்கயம் வட்டார பகுதியின் அரிசி ஆலைகளும் அகில இந்திய அளவில் தேங்காய் எண்ணெய் உற்பத்திக்கு பெயர் பெற்ற இப்பகுதியில் எண்ணெய் ஆலைகளும் அதிகம் உள்ளன. 

மின் தட்டுப்பாட்டால் இவை செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது. பொது மக்களும், மின்சார தட்டுப்பாட்டினால் இரவில் நிம்மதியாக தூங்க முடியாமல் தவியாய் தவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment