போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Sunday 17 March 2013

திருப்பூர் அருகே ஊத்துக்குளியில் தொடர் திருட்டு * பொதுமக்கள் அச்சம்


திருப்பூர்: ஊத்துக்குளி அடுத்த நீலக்கோணம்பாளையத்தில், அடிக்கடி திருட்டுகள் நடப்பதால், கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி ஒன்றியத்துக்கு உட்பட்டது நீலக்கோணம்பாளையம். கயித்தமலை கோவில் அடிவாரத்தில், அமைந்துள்ள இக்கிராமத்துக்கு பல ஆண்டுகளாக இப்பகுதிக்கு பஸ் வசதியில்லை; ஊத்துக்குளி ரயில்வே ஸ்டேஷன் பஸ் ஸ்டாப்பில் இறங்கி, கயித்தமலை கோவில் மலைப்பாதை வழியாக 3 கி.மீட்டர் நடந்து ஊருக்கு நடந்து செல்ல வேண்டும்.


விவசாயம் சார்ந்த பணிகள் குறைந்து விட்டதால், அருகிலுள்ள திருப்பூர், பெருமாநல்லூர், செங்கப்பள்ளி, பெருந்துறை பகுதிகளுக்கு, கிராம மக்கள், வேலைக்கு செல்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன், மலைப்பாதையில், ஊருக்கு டூவீலரில் சென்று கொண்டிருந்த வாலிபர்களை மறித்து, கத்தியை காட்டி, இரண்டு பவுன் செயினை பறித்து கொண்டு, வாகனத்தையும் திருடி சென்றனர்.

கடந்த மாதம், நீலக்கோணம்பாளையம் மேற்கு பகுதியில், ஒரு வீட்டுக்கு கதவை, கடப்பாரையால் தட்டிய ஆறு பேர் கொண்ட கும்பல், தாழ்ப்பாளை உடைத்து உள்ளே சென்று, கணவனை கடப்பாரையால் அடித்து , மனைவிடம் ஆறு பவுன் நகையை கொள்ளையடித்து சென்றது. இவ்வாறு தொடர்ச்சியாக திருட்டு சம்பவங்கள் நடப்பது, அக்கிராம மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

அப்பகுதியினர் கூறுகையில், "கயித்தமலை ரோட்டில் நடந்து வரும் பெண்களிடம் நகைகளை பறித்து கொள்கின்றனர். மின்விளக்கு வசதி குறைவாக உள்ளது. இதனை சாதமாக்கி கொள்ளும் திருடர்கள், அடிக்கடி பணம், நகைகளை ஊருக்குள் புகுந்து கொள்ளையடிக்கின்றனர். இரவு நேரங்களில் வெளியே நடமாக பயமாக உள்ளது. போலீசார் இரவு ரோந்து பணியை மேற்கொள்ள வேண்டும்' என்றனர்.

No comments:

Post a Comment