போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Tuesday 3 December 2013

திருப்பூர்:உங்கள் பகுதியில் மின் வெட்டு எப்போது?

திருப்பூர்:மின் பற்றாக்குறையை சமாளிக்க, திருப்பூர் மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் தினமும் நான்கு மணி நேரம் மின் வெட்டு அமல்படுத்தப்படுகிறது. அதற்கான நேரங்களை, மின்வாரியத்தினர் அறிவித்துள்ளனர்.

மின் பற்றாக்குறை காரணமாக மீண்டும் மின் வெட்டு படிப்படியாக அதிகரித்து வருகிறது. தினமும், எட்டு மணி நேரம் முதல் 14 மணி நேரம் வரை அறிவிக்கப்படாத மின் வெட்டு ஏற்பட்டு வந்ததோடு, அடிக்கடி ஏற்பட்டு வருவதால் தொழில் துறையினரும், பொதுமக்களும் கடும் அவதிப்பட்டு வந்தனர். தொழில் துறையினரும், பொதுமக்களும் பாதிக்கப்படுவதால், மின் வெட்டு நேரத்தை அறிவிக்குமாறு வலியுறுத்தினர்.
இதனால், மின் வாரியம் மின் வெட்டு செய்யப்படும் நேரத்தை அறிவித்துள்ளது. துணை மின் நிலையங்கள், பீடர்கள் வாரியாக, தினமும் காலை இரண்டு மணி நேரம், மதியம் இரண்டு மணி நேரம் மின் வெட்டு செய்யப்படுகிறது. தொழில் நிறுவனங்களுக்கு, முடிந்தளவு தொடர்ச்சியாக மின் வினியோகம் வழங்கும் வகையில், மூன்று குழுவாக பிரித்துள்ளனர். வாரத்திற்கு ஒரு முறை சுழற்சிமுறையில் இதனை மாற்றியும் அமைத்துள்ளர்.திங்கள் முதல் சனி வரை, தொழில் நிறுவனங்களுக்கு தனி மின் நிறுத்தமும், ஞாயிற்றுக்கிழமைகளில், வழக்கமாக அந்தந்த பகுதிகளில் செய்யப்படும் மின் நிறுத்தமும் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தொழிற்சாலை மின் இணைப்பு, முதல் குழுவுக்கு இன்று முதல் வரும் 7ம் தேதி வரை, காலை 6.00 முதல் 7.00 மணி வரையும், 9.00 முதல் 12.00 மணி வரையும்,இரண்டாவது குழுவுக்கு, 7.00 முதல் 9.00 மணி வரையும், மாலை 3.00 முதல் 5.00 மணி வரையும், மூன்றாவது குழுவுக்கு 12.00 முதல் 3.00 மணி வரையும், மாலை 5.00 முதல் 6.00 மணி வரையும் மின் நிறுத்தம் செய்யப்படும். வாரத்திற்கு ஒரு முறை சுழற்சி முறையில் மாற்றப்படும். இரவு நேர மின்வெட்டு குறித்து அறிவிக்கப்படவில்லை.

துணை மின் நிலையங்கள் வாரியாக மின் நிறுத்தம் செய்யப்படும் நேரங்கள்.
காலை 6.00 - 8.00 மணி மற்றும் மதியம் 12.00 - 2.00 மணி:
அவிநாசி (சீனிவாசபுரம், ரங்கநாதபுரம், ராயம்பாளையம், சேயூர் ரோடு, சின்னாரிபாளையம், அழகாபுரி நகர், எஸ்.மேட்டுப்பாளையம், செம்மாண்டம்பாளையம், கருமாபாளையம், ரங்கா நகர் உள்ளிட்ட பகுதிகள்).பல்லடம் (அலுத்துபாளையம், கள்ளக்கிணறு, என்.ஜி.,பாளையம், சி.ஜி.,புதூர், மாதப்பூர், சிட்கோ, சித்தம்பலம், கொசவம்பாளையம், உடுமலை, தாராபுரம் ரோடு, அனுப்பட்டி)பழைய திருப்பூர் (முருகம்பாளையம் மெயின்ரோடு, இந்திரா நகர், ஒடக்காடு, அவிநாசி ரோடு, ஐயப்பன் கோவில், புஷ்பா, குமார் நகர் வடக்கு, வளையங்காடு, சாமுண்டிபுரம், எம்.என்.எஸ்., வி.பி.சி.,நகர், பூத்தார் தியேட்டர், சிறுபூலுவப்பட்டி, ஆவாரங்காடு, பி.எஸ்.என்.எல்., குடியிருப்பு, ஓலப்பாளையம், அண்ணா காலனி, அங்கேரிபாளையம் ரோடு, பத்மாவதி புரம், சாமிநாதபுரம் உள்ளிட்ட பகுதிகள்)வேலம்பாளையம் (ராக்கியாபாளையம், அணைப்புதூர், நெசவாளர் காலனி, பெருமாநல்லூர் ரோடு, பூலுவப்பட்டி, அம்மாபாளையம், அனுப்பர்பாளையம்புதூர் உள்ளிட்ட பகுதிகள்)
ஊத்துக்குளி மொரப்பாளையம், நடுப்பட்டி துணை மின் நிலைய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

காலை 8.00- 10.00 மணி மற்றும் மதியம் 2.00 - 4.00 மணி :ஊத்துக்குளி, காடபாளையம், என்.ஜி., பாளையம், முத்தூர், கானூர் புதூர்.பல்லடம் (நாரணாபுரம், ராயபுரம் மற்றும் மங்கலம் ரோடு)திருப்பூர் சந்தை பேட்டை (ஷெரீப் காலனி, குறிஞ்சி நகர், கே.ஜி.,புதூர், வெள்ளியங்காடு, ஆர்.வி.இ., லே அவுட், அரசு மருத்துவமனை, கலெக்டர் அலுவலக பகுதிகள்.திருப்பூர் (ராம் நகர், டவுன் ஹால், அவிநாசி ரோடு, கோர்ட் வீதி)குமார் நகர் (ராமமூர்த்தி நகர், எஸ்.வி.,காலனி, ராமையா காலனி, வெங்கடேசபுரம்)அவிநாசி (நடுவச்சேரி, கந்தம்பாளையம் ரோடு, முத்து செட்டிபாளையம், அவிநாசி டவுன் ஒரு பகுதி), காங்கயம் டவுன், இடையர்பாளையம்.

காலை 10.00 - 12.00 மணி மற்றும் மாலை 4.00 - 6.00 மணி :
வீரபாண்டி, ஆண்டிபாளையம் துணை மின் நிலைய பகுதிகள் (பல்லடம் ரோடு, குப்பாண்டபாளையம், இடுவாய், சீரனம்பாளையம், முருகம்பாளையம், கரைப்புதூர், பாறைகாடு, சுண்டமேடு, கே.ஜி.புதூர்)காளிவேலம்பட்டி, கரடிவாவி, கேத்தனூர், பொங்கலூர், அலகுமலை, கருவலூர் (அனந்தகிரி, நம்பியம்பாளையம்)


காலை 06.00 - 8.00 மணி மற்றும் மதியம் 12.00 - 2.00 மணி :
கானூர் புதூர் (செங்காளிபாளையம்) முதலிபாளையம், பழவஞ்சிபாளையம், நல்லூர் துணை மின் நிலைய பகுதிகள். நேதாஜி அப்பேரல் பார்க், பழைய கோட்டை, அவிநாசி (பழங்கரை), திருப்பூர் சந்தைபேட்டை துணை மின் நிலையத்திற்குட்பட்ட மற்ற பகுதிகள், குமரன் ரோடு துணை மின் நிலைய பகுதிகள், அருள்புரம் பகுதிகள்.

காலை 10.00 - 12.00 மணி மற்றும் மாலை 4.00 - 6.00 மணி :
தெக்கலூர் (சேவூர் துணை மின் நிலையம்), குமார் நகர் துணை மின் நிலையத்திலுள்ள மற்ற பகுதிகள், ஊதியூர், காங்கயம் மற்ற பகுதிகள், எலவந்தி, நாரணாபுரம், பெருமாநல்லூர், முத்தூர், கருவலூர் (நரியம்பள்ளி) அவிநாசி (சுண்டக்காம்பாளையம்) ராசாத்தா வலசு (வேப்பம்பாளையம், சேமலைகவுண்டன் வலசு, தண்ணீர் பந்தல், பி.ஆர்., நகர், பூமாண்டன் வலசு, திருமங்கலம்).

No comments:

Post a Comment