போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Wednesday 10 April 2013

திருப்பூர் ஆர்வம் காட்டாத மின் நுகர்வோர் வீணாக இருக்கும் தகவல் மையம்


திருப்பூர், குமார் நகர் துணை மின் நிலைய வளாகத்தில் உள்ள, தகவல் மற்றும் புகார் மையத்தை அணுக மக்கள் ஆர்வம் காட்டாததால், அத்திட்டம் வீணாகி வருகிறது.

திருப்பூர் மின் பகிர்மான வட்டத்தை சேர்ந்த மின்நுகர்வோருக்கு ஏற்படும் மின் சேவை குறைபாடுகளை தெரிவிக்கவும், புதிய மின் இணைப்பு, பெயர் மாற்றம் உள்ளிட்ட தகவல்களை பெறவும், மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில், குமார் நகர் துணை மின் நிலைய வளாகத்தில், தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட இம்மையத்தில், சுழற்சி முறையில் அலுவலர்கள் பணியாற்றுகின்றனர்; காலை 10.00 முதல் 1.00 மணி வரை, இம்மையம் செயல்படுகிறது. மையம் அமைத்து நான்கு மாதங்களாகியும் சொற்ப அளவிலான மக்களே, இதன் மூலம் பயனடைந்துள்ளனர். மின்நுகர்வோர் ஆர்வம் காட்டாததால், இம்மையம் வீணாகி வருகிறது.

அதிகாரிகளிடம் கேட்ட போது, "தகவல் மையம் அமைத்தும், பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. இம்மையத்தில் புகார் தெரிவித்தால், உடனடியாக தீர்வு கிடைக்கும். தேவையான தகவல்களும், வழிகாட்டுதல்களும் கிடைக்கும். ஆனால், நுகர்வோர், புரோக்கர்களையும், அருகிலுள்ள மின் பணியாளர்களிடமும் கேட்டு வருகின்றனர். இதனால், நுகர்வோருக்கு செலவுதான் அதிகரிக்கும். தகவல் மையத்தை பயன்படுத்த, மின் நுகர்வோர் முன்வர வேண்டும்,' என்றனர்.

No comments:

Post a Comment