போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Sunday 12 May 2013

ஈரோடு - பாலக்காடு இடையே நீட்டிப்பு செய்யப்பட்ட பயணிகள் ரயில் சேவை துவங்கியது.


ஈரோடு - பாலக்காடு இடையே நீட்டிப்பு செய்யப்பட்ட பயணிகள் ரயில் சேவை துவங்கியது.

கேரள மாநிலம், பாலக்காடு - கோவை இடையே பயணிகள் மின்தொடர் ரயில் (இன்ஜின் மட்டும்) சேவை இருந்தது. அந்த ரயிலை, ஈரோடு வரை நீட்டிக்க வேண்டும், என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். அதையடுத்து, இன்று முதல் (12ம் தேதி), ஈரோடு - பாலக்காடு இடையே, எட்டு பெட்டிகளுடன், பயணிகள் ரயில் சேவை காலை, 11.20 மணிக்கு துவங்கியது.சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் சுஜாதா ஜெயராஜ், ஈரோடு எம்.பி., கணேசமூர்த்தி ஆகியோர் நீட்டிப்பு செய்யப்பட்ட ரயில் சேவையை துவக்கி வைத்தனர்.பின், கோட்ட மேலாளர், சுஜாதா ஜெயராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:ஈரோடு ரயில்வே ஸ்டேஷன், 60 லட்சம் ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்படும். வாகனங்கள் நிறுத்தும் இடம், பூங்கா, பஸ் நிறுத்தம், முகப்பு விளக்குகள், பழுதான கட்டிடங்கள் சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் செய்யப்படும். இரண்டு லிஃப்ட் அமைப்பதற்கான அனுமதி கிடைத்துள்ளது.தானியங்கி நடைபாதை அமைப்பதற்கான வாய்ப்புகள் குறித்து ஆய்வு நடத்தப்படுகிறது. ஈரோடு - பழனி இடையே ரயில் சேவை குறித்து அரசின் பரிசீலனையில் உள்ளது. காட்பாடி - சேலம் இடையிலான ரயில் சேவையை, ஈரோடு வரை நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும், என்றார்.ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:ரயில்வே அட்டவனைப்படி, நாளை (12ம் தேதி) முதல், பாலக்காட்டில் இருந்து மதியம், 2.30 மணிக்கு புறப்பட்டு, இரவு, 7 மணிக்கு ஈரோடு வந்தடைகிறது.பின், ஈரோட்டில் இருந்து காலை, 7.45 மணிக்கு புறப்பட்டு, மதியம் 12.30 மணிக்கு பாலக்காட்டுக்கு சென்றடைகிறது. வாரத்தில், வியாழக்கிழமை தவிர மற்ற நாட்களுக்கு, தினமும் பயணிகள் ரயிலாக இயக்கப்படும், என்றனர்.சேலம் கோட்ட ஏ.எஸ்.சி., ஆனந்தராஜ், ரயில்வே போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சிவானந்தம், ஈரோடு மாவட்ட அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சிவநேசன் உட்பட பலர் பங்கேற்றனர்

No comments:

Post a Comment