போட்டோகிராபர் கணேசன் Headline Animator

Sunday 26 May 2013

பெற்றோர் திட்டியதால் வீட்டு விட்டு வெளியேறி பஸ்சில் பரிதவித்த சிறுமி: போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்

திருப்பூர், மே. 25-

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகேயுள்ள வெள்ளைய கவுண்டன்புதூர் குட்டைகாடு பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். கோவில் அர்ச்சகராக உள்ளார். இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்த மகள் கோவையில் உள்ள மருதமலையில் பாட்டி வீட்டில் வளர்ந்து வருகிறாள். 2-ம் பெண் குழந்தைகள் என்பதால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

6 வயது சிறுமி என்று கூட பாராமல் கவிதாவை அடிக்கடி திட்டி வந்தனர். வழக்கம் போல் நேற்று காலையும் கவிதாவை அவளது பெற்றோர் “வீட்டை விட்டு வெளியே போ” என்று திட்டியதாக தெரிகிறது. இதனால் மன வேதனை அடைந்த சிறுமி கவிதா மருதமலையில் உள்ள பாட்டி வீட்டுக்கு செல்ல முடிவு செய்து ஊத்துக்குளி டவுன் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தாள். அந்த வழியாக வந்த பஸ்சில் ஏறிய அவள் மருதமலையில் உள்ள தனது பாட்டி வீட்டில் கொண்டு விடுமாறு கண்டக்டரிடம் கூறினாள். சிறுமியுடன் யாரும் வராததால் சந்தேகமடைந்த டிரைவர் பஸ்சை ஊத்துக்குளி போலீஸ் நிலையத்துக்கு ஓட்டிச்சென்றார். அங்கிருந்த இன்ஸ்பெக்டர் ஜெயபாலனிடம் சிறுமியை ஒப்படைத்து விட்டு கிளம்பிச் சென்றார்.

இன்ஸ்பெக்டர் அந்த சிறுமியிடம் விசாரித்த போது பெற்றோர் என்னை திட்டுகிறார்கள். என்னை மருதமலையில் உள்ள பாட்டி வீட்டில் கொண்டு விட்டு விடுங்கள். பெற்றோர் வீட்டுக்கு போக மாட்டேன் என்று அடம் பிடித்தாள். இன்ஸ்பெக்டர் அந்த சிறுமியை சமாதானம் செய்தார். பின்னர் சிறுமி கூறிய அடையாளப்படி அவளது வீட்டை கண்டு பிடித்து சிறுமியை ஒப்படைத்தனர்.

சிறுமியின் பெற்றோரை இன்ஸ்பெக்டர் கடுமையாக எச்சரித்தார். இந்த சம்பவம் ஊத்துக்குளி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment